Posts

Showing posts from November, 2016

தான்தோன்றீச்சுரர் Thanthondrechurar

Image
மன்றுள் ஓர் மாணிக்கமே! மண்ணே மாரனை வென்ற பூரண சுத்தசைவனேச் சொலொன்றீவதும் என்றோ யென்பால் தோன்றுமோ யிரக்கம் நன்றுஎன கருணையொடுன் தாளெனக் கருளுக! மன்று உள் ஓர் மாணிக்கமே! மண்ணே மாரனை வென்ற பூரண சுத்த சைவனேச் சொல் ஒன்று ஈவதும் என்றோ என் பால் தோன்றுமோ இரக்கம்  நன்று என கருணை யொடு உன் தாள் எனக்கு அருளுக! மன்று - சபை, அம்பலம்,  மண்ணே - மண்ணுக்கு அதிபதியே,  மாரன் - மன்மதன்,   ஈவது - தருவது,   இரக்கம் - பரிவு,  கருணை , தாள் -  திருவடி  நன்று - நன்மை,  நல்லது. பொழிப்புரை:- பொற்சபையில்  (ஆடுகின்ற) ஒரு மாணிக்கமே! மண்ணே,  மன்மதனை  வென்ற பூரண சுத்த சைவனே, (உபதேச) சொல் ஒன்று தருவதும் என்றோ என்மேல்  தோன்றுமோ இரக்கம் நன்மை என கருணையொடு உன் திருவடியை எனக்கு அருளுக! கருத்துரை:-  பொன் அம்பலத்தில் ஆடுகின்ற ஒரு மாணிக்கமே ! பஞ்ச பூதங்களில் மண் வடிவாக திகழ்பவனே! மன்மதனை வென்ற பரிபூரண சுத்த சைவமாய் விளங்குபவனே, அடியேனுக்கு உபதேச சொல் ஒன்றை தந்து ஆள்வதும் எந்த நாளோ தெரியவில்லையே ! அடியேன்பால் உனக்கு பரிவு தோன்றாதோ!  எல்லாம் நன்மைய...