Posts

Showing posts from May, 2021

வியாக்ரபுரீச்சுரர் ViyakraPurechurar

Image
 

நெய்யாடியப்பர் Neiyaadiyappar

Image
 

வேம்புலீச்சுரர் Vembuleechurar

Image
  எழு முனிவர் பூசித்தானை  சிவ குமரனுந் தொழுத  நற்சுனையை யுடையச் சிவனை சொல்லீர்!  பழுதற ஓத புகழடைவீரும் குலமும்  விழுதென படர  தனமும்  வேண்டியதீவானே! எழு முனிவர் பூசித்தானை சிவ குமரனுந் தொழுத நற்சுனையை உடையச் சிவனை சொல்லீர்  பழுது அற ஓத புகழ் அடைவீர் உம் குலமும்  விழுது என படர தனமும் வேண்டியது ஈவானே !   நற்சுனை - நல்ல நீரூற்று,  குளம் ,    விழுது - வேர்,     கிளை,    பழுதற - குற்றமில்லாது,   தனம் - செல்வம்,    ஓத -   பாட, படித்து. கருத்துரை: - சப்தரிஷிகளான  ஏழு முனிவர்கள்   அத்திரி,  பாரத்வாஜர்,  ஜமதக்கினி,  கௌதமர்,  காசியபர்,  வசிஷ்டர்,  விசுவாமித்திரர் ஆகியோர் தொழுது வணங்கிய ஈசனை, சிவகுமாரனாகிய முருகப்பெருமான் துதித்து பூசித்த நல்ல நீர் ஊற்றாகிய குமார தீர்த்தத்தை கொண்ட ஈசனை போற்றி புகழ்வீர். இங்கு வீற்றிருக்கும் வேம்புலீச்சுரனை பழுது இல்லாமல் பக்தியோடு பாடி பரவி வழிப்பட்டால் உங்கள் குலம் ஆலம் விழுது போல் படர்ந்து என்றும் தழைத்து உலகில் பெரும் புகழோடு வாழ,  வேண்டிய செல்வங்களை தந்து திருவருள் புரிவானே !   திருத்தல பெருமை:-  சுவாமி  -        வேம்புலீச்சுரர். .  அம்பாள் -     வேற்கண் நங்க

தோன்றாதுணைநாதர் ThondraThunaiNathar

Image
 

ஓணகாந்தீச்சுரர் OnaKanthechurar

Image
சேவதேறியோர் சூலமுந் தாங்கிய பரமாய் நாவதிலுறை சுகானுபவ அச்சிவத் தீயே ஆவணந் தானவைமுன் காட்டி அடிமையாய் பாவணம் பாடவைத்தா னவனைஓதி உய்வடைவீர்! சேவு அது ஏறி ஓர் சூலமுந் தாங்கிய பரமாய்  நாவு அதில் உறை சுக அனுபவ அச்சிவத் தீயே  ஆவணந்தான் அவை முன் காட்டி அடிமையாய்  பாவணம் பாட வைத்தான் அவனை ஓதி உய்வு அடைவீர்! சேவு - எருது,    பரமாய் - பரம் பொருளாய்,  சுகானுபவம் - இனிய அனுபலம்,  ஆவணம் - அடிமை  பத்திரம்,   பாவணம் - தேவாரம். பொழிப்புரை:- எருது ஏறி ஒரு சூலம் ஏந்திய பரம் பொருளாய் நாவில் உறைகின்ற இனிய அனுபவமாகிய அந்த சிவத் தீயே ஆவணத்தை சபை முன் காட்டி அடிமை கொண்டு (தேவார) பாடல்களை பாட வைத்தான்,  அவனை பாடி நற்கதி அடைவீர்! கருத்துரை:-  எருதாகிய ரிஷபத்தின் மேல் ஏறி ஒரு கையில் சூலமும்  தாங்கி சிவபரம் பொருளாய் அடியார்கள் நாவில் உறைகின்ற அந்த பேரானந்த அனுபவமாகிய சிவ ஒளியே, அன்று சுந்தர  மூர்த்தி சுவாமிகளின் திருமணத்தின் போது சபையோர் நடுவே அடிமை ஓலையை (ஆவண பத்திரம்) காட்டி அவரை அடிமை கொண்டு சிறந்த நயமிக்க பாக்களாகிய தேவாரத்தை பாட வைத்த ஈசனை நீங்களும் பாடி வணங்கி நற்கதியை அடையுங்கள். திருத்தல பெருமை:- சு

மாசிலாமணீச்சுரர் MasilaManichurar

Image
பூசிநீறை பார்புகழ வெள்ளேறேறி நாரணியொடு வீசியாடு சுவலில் தாழ்ச்சடை யணீசனே! மாசி மகத்தில் உலாவரும் மறையவனே ! வாசிதீர வளமுடன்வாழ மாகருணை புரிவீரே ! பூசி நீறை பார் புகழ வெள்ள ஏறு ஏறி நாரணியொடு வீசியாடு சுவலில் தாழ்ச் சடை அணி ஈசனே!  மாசி மகத்தில் உலா வரும் மறையவனே !  வாசி தீர வளமுடன் வாழ மா கருணை புரிவீரே ! ஏறு - ரிஷபம்,   சுவல் – தோள்,   வாசி – குற்றம்,  வேறுபாடு,  தாழ்சடை – தாழ்ந்து படர்ந்த சடை,   நாரணி - உமையவள் பொழிப்புரை:- திருநீற்றை பூசி உலகம் புகழ வெள்ளை எருது ஏறி நாரணியொடு தோளில் வீசி ஆடுகின்ற தாழ்சடை அணிந்த ஈசனே ! மாசி மகத்தில் உலா வரும் வேத முதல்வனே ! குற்றம்  இல்லாது வளமுடன் வாழ பெருங் கருணை புரிவீரே !   கருத்துரை:-  திருநீற்றை திருமேனி எங்கும் பூசி உலகம் புகழ உமா தேவியோடு வெள்ளை எருது ஏறி  செஞ்சடை யானது திருத் தோளில் தவழும்படி அணிந்து,   எங்கும் நிறைத்து திருநடனம் ஆடுகின்ற ஈசனே! மாசி மாதத்தில் மக நட்சரத்தில் ரிஷப வாகனத்தில் வலம் வருகின்ற வேத நாயகனே!   அடியேன் குற்றங்கள் எல்லாம் தீர்ந்து வேறுபாடு இல்லாது செழிப்போடு வாழ்வதற்கு உனது உயர்ந்த கருணையை திருவருள் செய்வீராக!  தி

நீலகண்டேச்சுரர் Neelakandesurar

Image
ஆல முண்டார் யறிந்தருள் செய்வாரவர் கோலமொடுச் சுற்றிவர இச்சைகொண்டே ஞாலமுமண்டமிரவு பகல் செய்தாரவரைச் சீலமொடிருத்தி துதித்து நீர் வாழ்வீரினிதே! ஆலம் உண்டார் அறிந்து அருள் செய்வார், அவர் கோல மொடுச் சுற்றி வர இச்சை கொண்டே ஞாலமும் அண்டம் இரவு பகல் செய்தார் அவரைச் சீலமொடு இருத்தி துதித்து நீர் வாழ்வீர் இனிதே! ஆலம் -  ஆலகால விஷம்,    இச்சை - விருப்பம்,    ஞாலம் - உலகம்,  அண்டம் - ஆகாயம்,  வெட்ட வெளி,  சீலம் - நற்குணம். பொழிப்புரை:- ஆலகால விஷமுண்டார் அறிந்து அருள் செய்வார்,  அவர் கோலங்கள் கொண்டு (உலகை) சுற்றிவர இச்சை கொண்டே உலகம், அண்டம், இரவு பகல் படைத்தார், அவரை  நற்குணங்களொடு (மனதில்) இருத்தி துதித்து நீங்கள் இனிமையாக வாழ்வீர்கள்! கருத்துரை: -  அன்று ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் தன் அடியார்களுக்கு எது எப்போது எப்படி அருள் புரிய வேண்டும் என அறிந்து அப்படி அருள் செய்வார். அவர் பல வேடங்களைக் கொண்டு இப்பூவுலகில் சுற்றிவர விருப்பங் கொண்டே உலகமும் அண்டமும் (ஆகாயம்) இரவும், பகலும் உண்டாக்கினார் அவரை நல்ல உயர்ந்த குணங்களொடு உள்ளத்தில் இருத்தி வணங்கிட நீங்கள் இன்பமாக வாழ்வீர்கள்.! திருத்தல பெர

கங்காதரேச்சுரர் Gangatharechurar

Image
அங்கியை யோர் யங்கையிலடக்கி யரவொடு கங்கையைச் சுழல வைத்தச் சதுரரே சங்கையை தவிர்த்திட காரணமானவரவரே உங்கள் வல்வினை மாய்க்க வல்லவராவார்! அங்கியை ஓர் அங்கையில் அடக்கி அரவொடு  கங்கையைச் சுழல வைத்தச் சதுரரே  சங்கையை தவிர்த்திட காரணமானவர் அவரே  உங்கள் வல் வினை மாய்க்க வல்லவர் ஆவார்!  அங்கி - அக்கினி,  சங்கை - பகை,  ஐயம்,   அங்கை - உள்ளங்கை,   வல் - வலிமை,   அரவு - நாகம் ,  சதுரர் - நான்கு வேதங்களுக்கு நாயகன் (ஈசன்) பொழிப்புரை:- அக்கினியை ஒரு உள்ளங்கையில் அடக்கி, நாகமொடு  கங்கையை (முடியில்) சுழல வைத்த நான்கு வேதங்களுக்கு நாயகனே, பகை நீங்கிட காரணமானவர்  அவரே  உங்கள் வலிமை மிக்க வினையை அழிக்க வல்லவர் ஆவார்! கருத்துரை:- நான்கு வேதங்களுக்கும் தலைவனாக விளங்கக்கூடிய ஈசன் தனது சடா முடியில் நாகத்தையும், விரைவாகச் சுழன்று ஓடுகின்ற கங்கையையும் வைத்துத் தனது உள்ளங்கை ஒன்றில் அக்கினியையும் அடக்கிக் காட்சி தருபவர். அவர் எழுகின்ற ஐயமும், வருகின்ற பகையும் நீங்குவதற்கு காரணமாக இருப்பவர். அவரே உங்கள் வலிமை வாய்ந்த வினைகள் அழிக்கவும் வல்லவர் ஆவார்.! திருத்தல பெருமை:-  சுவாமி  -       கங்காதரேச்சார்,   உமாப

சுந்தரநடராசர் SundaraNataRasar

Image
திருமறை யோர் புகழ சடை வீசி பொற்சபையி லொரு கால் பராவி யாடும் நடராசனை நும் இருகரங் கூப்பித் தலையால் வணங்க வருந்துயரகன்று வாழ்வு சுபீட்சமடையும்! திரு மறையோர் புகழ சடை வீசி பொற்சபையில்  ஒரு கால் பராவி ஆடும் நடராசனை நும்  இரு கரங் கூப்பித் தலையால் வணங்க  வருந் துயர் அகன்று வாழ்வு சுபீட்சம் அடையும்!  மறை - வேதங்கள்,    பராவி - விரிவாக எங்கும் நிறைந்து,   கூப்பி – சேர்த்து,  சுபீட்சம் – ஷேமம்,  நன்மை,  செழிப்பு. பொழிப்புரை:- வேத நெறி அந்தணர்கள் புகழ சடை வீசி பொற்சபையில் ஒரு காலை எங்கும் நிறைத்து ஆடும் நடராசனை  உங்கள் இரு கரங்களை கூப்பி தலையால் வணங்க  வருகின்ற துயரம் நீங்கி வாழ்வு வளம் அடையும்! கருத்துரை:- வேதம் ஓதும் அந்தணர்கள் போற்றி புகழ, சடையை விசி பொன்னம்பலத்தில்  எங்கும் நிறைத்து ஆடுகின்ற நடராச பெருமானை உங்கள் இருகைகளைக் கொண்டு கூப்பித் தலையால் வணங்க,  வருகின்ற துயரங்கள் எல்லாம் நீங்கி வாழ்வும் செழிப்பு அடையும்.!  திருத்தல பெருமை:-   சுவாமி  -        சுந்தர நடராசர்  அம்பாள் -    சிவகாம சுந்தரி  தலம் -          திண்டிவனம். தீர்த்தம் -    குமார தீர்த்தம்  விருட்சம் - அரச மாம்  வழி

காளஅத்தீச்சுரர் Kalatheechurar

Image
அளவிலா யோர்பேரா னந்தங்கொண் டுரவொடு இளவேனில் சுகம்போன்றுச் சீவனை தீண்டி குளத்தில் மூழ்கி அவனருள் குழைந்து உளம் அவன்பாற் செலுங்கால டைவீர்சித்தி ! அளவு இலா ஓர் பேரானந்தங் கொண்டு உரவொடு இளவேனில் சுகம் போன்றுச் சீவனை தீண்டி குளத்தில் மூழ்கி அவன் அருள் குழைந்து உளம் அவன் பாற் செலுங்கால் அடைவீர் சித்தி! உரவு – வலிமை, வேகம்,   இளவேனில் – வசந்தகாலம்,   சீவன் - ஆன்மா தீண்டி - தொடுவது,   குளம் - இன்பமாகிய அருள் குளம்,  குழைந்து – கலந்து, சேர்ந்து. பொழிப்புரை:- அளவில்லாத ஒரு பேரானந்தம் கொண்டு அதிகமான இளவேனில் (காற்று) சுகம் போன்று சீவனை தீண்டி, (அருள்) குளத்தில் (மனம்) மூழ்கிச் சிவனருள் கலந்து, உள்ளம் இறைவனிடம் செல்லும்போது அடைவீர்  வீடுபேற்றை! கருத்துரை:-   இளவேனில் (வசந்த கால) தென்றல் காற்று வேகமாக வீசித் தீண்டும் இனிமையான சுகத்தைப் போன்று, சிவபெருமான் தனது அளவிட முடியாத பேரானந்த அருளைக் கொண்டு சீவன்மாவை தீண்டி உள்ளத்தைச் சிவனருள் குளத்தில் மூழ்கிக் குழைந்து நெகிழச் செய்யும் அருட்செயலினால், உள்ளம் மாசகன்று தூய்மையாகி அவரிடம் செல்லும் பொது, பிறவிப் பயனாகிய ஈசன் திருவடி நிழலாகிய வீடுபேற்றை

மல்லிகார்ச்சுனர் Malligarchunar

Image
அல்லி மலர் அகவிதழிலுறையு மானந்தனை சில்லில் சுழலாத பொற்ச்சோதி சீர் கல்லில் காணுமிறையை வலிவாதம் வாதிப்பானை சொல்லில் பொருளுமுடை பரமனை சென்று காணீர்! அல்லி மலர் அக இதழில் உறையும் ஆனந்தனை  சில்லில் சுழலாத பொற்ச் சோதி சீர் கல்லில் காணும் இறையை வலி வாதம் வாதிப்பானை சொல்லில் பொருளும் உடை பரமனை சென்று காணீர்!. அகம் - உள்ளே,   சில் - வட்ட வடிவான கருவி,  சக்கரம்,  வலி - வலிமை,   சீர் - அழகு,   வாதிப்பது - அறுப்பது,   வாதம் - நோய். பொழிப்புரை:- அல்லி மலரின் உள் இதழில் உறையும் ஆனந்தமயமானவனை,  (கால) சக்ரத்தில்  சுழலாத பொன்னிற சோதி (ஆன)   அழகிய  கல்லில்  காணும் இறைவனை வலி வாதம் (நோயை) அறுப்பானை, சொல்லின் பொருளாக உடைய பரமேச்சுரனை சென்று காண்பீர்! கருத்துரை:- அல்லி மலர் இதழின் உள்ளே வாசஞ் செய்யும் ஆனந்தமயமான சிவனை, கால சக்ரத்தில்  சுழலாத  பொன் போன்று ஒளி வீசிப் பிரகாசிக்கும் சுடர் போன்றவனை,   இடம், காலத்தைக் கடந்தவனை, கல்லில் காணுகின்ற அழகு மிக்க வடிவமாகிய இறைவனை,  வலிமை மிக்க வாதம் எனும் நோயை அறுத்து நீக்குபவனை,  சொல்லுகின்ற சொல்லின் பொருளாய் திகழ்கின்ற பரம்பொருளாகிய ஈசனை சென்று காணுங்கள்.  தி

தென்பெண்ணேச்சுரர் ThenPennechurar - 1

Image
மன்றுள் ஓர் மாணிக்கமாய் உறை பரனே! நன்றுடையார் சுருதி மொழி மெச்சு மண்ணே ! கன்று உண்டப் பாலைப் பெருக செய்வனே ! யென வென்று வினையை வளம்பல தெளிந்து வாழ்வீரே! மன்றுள் ஒர் மாணிக்கமாய் உறை பரனே! நன்று உடையார் சுருதி மொழி மெச்சும் அண்ணே!  கன்று உண்டப் பாலைப் பெருக செய்வனே! என  வென்று வினையை வளம் பல தெளிந்து வாழ்வீரே! மன்று -  பொற்சபை,   தெளிந்து -  செழித்து,  உறை -  வசிக்கும்,  குடி கொண்ட,    சுருதி -  வேதம்,  இசை வளம் -  செழுமை,    அண்ணே -  பெருமைமிகு தலைவர். பொழிப்புரை:- பொற்சபையில் ஒரு மாணிக்கமாய் வாழும் பரம்பொருளே, நன்மை உடையவர்களின் வேத மொழிகளை விரும்பும்  தலைவரே, கன்று உண்ட பாலை பெருகச் செய்வோனே என (போற்ற) வினைகளை வென்று வளங்கள் பலவும் பெற்று செழித்து வாழ்வீரே! கருத்துரை:- பொற்சபையில் ஒரு மாணிக்கமாய் வாழும் பரம்பொருளே,  நன்மை உடையவர்களின் வேத மொழிகளை விரும்பும் பெருமைமிகு தலைவரே, கன்று உண்டப் பின் பாலை கருணையோடு  சுரந்து  பெருக  செய்கின்றவனே என போற்றுபவர்கள்,  சிவபெருமானின் அருளால் வினைகளை வென்று வளங்கள் பலவும் பெற்று செழித்து  வாழ்வார்கள்.   திருத்தலப் பெருமை:- சுவாமி     -      பெண

புத்ரகாமேச்சுரர் PuthraKamechurar - 1

Image
முத்தினையோர் மூலப் பொருளானானை பரமனை மித்ரனாய் சுந்தரரை மெச்சிய மாமேரு சித்ர கானாம்ருத அரனை ! சதாசிவனை ! தொழ புத்ர பாக்கியமொடு பல புகழுந் தருவானே! முத்தினை ஓர் மூலப் பொருளாய் ஆனானை பரமனை  மித்ரனாய் சுந்தரரை மெச்சிய மாமேரு  சித்ர கான அம்ருத அரனை சதாசிவனை தொழ  பு த்ர பாக்கியமொடு பல புகழுந் தருவானே! மித்ரன் - நண்பன்,   அம்ருதம் - அமுதம்,    மேரு - மேருமலை ,  சித்ரம் - அழகு ,   கானம் - இசை பொழிப்புரை:–  முத்திக்கு  ஒரு மூலப்  பொருளாய் ஆனவனை பரமனை, நண்பனாகச் சுந்தரரை ஆட்கொண்ட மகாமேருமலையான அழகு மிகுந்த இசையமுதமாகிய ஈசனை, சதாசிவனை வணங்க புத்திர பாக்கியமொடு பல புகழுந் தருவானே! கருத்துரை:- முத்தி தரும் மூல போருளாக இருப்பவனை பரமேச்சுரனை, அன்று நண்பனாக வந்து சுந்தரமூர்த்தி நாயனாரை  ஆட்கொண்டவனை, மேரு மலையளவுக்கு உயர்ந்த புகழை உடையவனை, அழகு மிக்க இசையெனும் அமுதமாய் திகழும்  சிவனின்  64 - திருமூர்த்தங்களில் ஒன்றான சதாசிவமூர்த்தி எனுந் திருநாமங் கொண்டவனை வணங்கிட புத்ர பாக்கியமும் பல வகையான புகழும் தந்தருள்வானே ! திருத்தல பெருமை  :-  சுவாமி -              புத்ரகாமேச்சுரர்   அம்பாள்  -          ப

மருந்தீச்சுரர் Marunthechurar

Image
அமிழ்தமோர் உருவாகி சாய்ந்த அரனை இமியளவில் சுகிப்பானை இச்சிய செந்தீயை தமிழ் கலந்த உருவாய் தகமை தருவானை புமி மீது பிணிக்கு ஒரு மருந்தை போற்றீர்!

நாகநாதேச்சுரர் NagaNathechurar

Image
 

வழக்கறுத்தீச்சுரர் Vazakaruthesurar

Image
சிறுவனினோர் வழக்கறுத்தானை வரமணி உறுகண் பொசுங்கி குலையச்சிவத்தீயைத் தறு கணற் கயிரோன் பாற்க்காய்ந்தானை எறுழுதுடையோன் தாதையை தொழ வழக்குமறுமே !

சிவகிரிநாதேச்சுரர் SivagiriNathechurar

Image
அவனியிலோர் புனலில் தோன்றிய அரனை நவரசமாய் சுவையுமாய் நச்சிய தேனைநாடு மெவரிட மருளைப் பொழிகின்ற யெந்தையை சிவகிரிநாதனை கண்ணார தரிசித்து தொழுக! அவனியில் ஓர் புனலில் தோன்றிய அரனை  நவரசமாய் சுவையுமாய் நச்சிய தேனை நாடும்  எவரிடம் அருளைப் பொழிகின்ற எந்தையை  சிவகிரி நாதனை கண்ணார தரிசித்து தொழுக! சுவை - ஆறு சுவை,   அவனி - உலகம் நச்சிய - விரும்பிய,    புனல் - நீர் அரன் - சிவன்,    எந்தை - தந்தை  நவரசம் -  ஒன்பது வகையான உணர்ச்சிகள்  கண்ணார - கண்குளிர பொழிப்புரை:- உலகத்தில் ஓர் நீர்நிலையில் உற்பவித்த சிவனை  ஒன்பது உணர்ச்சிகளாய்  சுவைகளாய் விரும்பும் தேனை நாடும் எவரிடமும் அருளை பொழிகின்ற  தந்தையை  சிவகிரி நாதனை கண்குளிர கண்டு வணங்கிடுக! கருத்துரை:-  இப்பூவுலகில் ஈசன் மலை என்கின்ற ஒரு சிவத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (நீரில்) தோன்றிய சிவபரம் பொருளை, ஒன்பது வகையான உணர்ச்சி வெளிப்பாடுகளில் இருப்பவனை, ஆறு சுவைகளாய் இருப்பவனை, விரும்புகின்ற தேன் போன்றவனை நாடுபவர்கள் யாராய் இருந்தாலும் திருவருளை வாரி சொரிகின்ற தந்தையாய் இருப்பவனை சிவகிரி நாதன் என்ற சிறப்பு பெயர் கொண்டவனை கண்குளிர கண்டு வணங்கிடுக! திரு

சலகண்டேசுரர் Salakandechurar

Image
கலந்த தோர் கருவில் உயிரும் பரந்து பல நாளுஞ் சுற்றி முற்றிச் சுருண்டே உலகு கண்டு உருவங்கள் மாறி யழியாமல் நலந்தரும் நிமலாயுன் சபையின் கண்வைக! கலந்தது ஓர் கருவில் உயிரும் பரந்து  பல நாளுஞ் சுற்றி முற்றிச் சுருண்டே  உலகு கண்டு உருவங்கள் மாறி அழியாமல்  நலந் தரும் நிமலா உன் சபையின் கண் வைக! பரந்து - விசாலமான விரிந்த, வியாபித்து,    சபை - திருச்சபை,  திருவடி நிமலன் - சிவன். பொழிப்புரை:- சேர்ந்த ஒரு கர்பத்தில் இவ்வுயிரானது வியாபித்து பல நாட்கள் சுழன்று முதிர்ச்சி அடைந்து சுருண்டு (பின்) பூமியைக் கண்டு (தன்) வடிவங்கள் மாற்ற மடைந்து அழிந்து போகாமல் நன்மைகள் அருளும் சிவனே உனது திருச்சபையில் வைத்திடுக! கருத்துரை - இவ்வுயிரானது ஒரு தாயின் கர்பத்தில் சேர்ந்து விசாலமாய் முன்னூறு நாட்கள் தங்கி அங்கே மேலுங் கீழுமாய் சுழன்று முதிர்ச்சி அடைந்து,சுருண்டு பின் வெளியே வந்து இம்மண்ணுலகை காண்கிறது. அதன் பிறகு அது மழலை பருவம்.  பால பருவம்,  வாலிப பருவம், முதுமை பருவம் என பல வடிவங்களாக மாற்றம் அடைந்து இறுதியில் அழிந்து போகிறது. நன்மைகள் அருளும் சிவபரம் பொருளே இவ்வுயிரானது அவ்வாறு அழிந்து போகாமல் உன

இராமநாதேச்சுரர் RamaNathechurar

Image
சிலையில் கோர்த்த சரமேழு மராமரமுங் குலைந் துச்சுவற எய்தச்சீலத் தேவன் அலைநாதன் தொழுத மங்கை பாகனைநீர் மலைராசன் மகளோடு தொழுது இருவினை களைவீரே! சிலையில் கோர்த்த சரம் ஏழு மரா மாரமுங்  குலைந்துச் சுவற எய்தச் சீலத் தேவன்  அலை நாதன் தொழுத மங்கை பாகனை நீர்  மலைராசன் மக ளோ டு தொமுது இரு வினை களைவீரே ! சிலை – வில்,  இரு வினை - நல்வினை,தீவினை,   சரம் - அம்பு, களைவீரே – நீக்குவிரே ,  சுவற – சிதற,  ஊடுறுவ,  சீலத்தேவன் – இராமன்,  அலை நாதன் – வருணன்,   மலைராசன் – இமவான். பொழிப்புரை:- வில்லில் பூட்டிய அம்பு ஏழு மரா மரங்களை  துளைத்து ஊடுறுவி வர செலுத்திய நற்குணமுடைய தலைவன் (இராமனும்) வருணனும் வணங்கிய பெண்ணை ஒரு பாகம் உடையவனை  நீங்கள் இமவான் மகளோடு  வணங்கி  இரு வினைகளை நீக்குவீர் ! கருத்துரை:- தனது வனவாச காலத்தில் தன் ஆற்றலை குரங்குகளின் அரசனான சுக்ரீவனுக்கு நிரூபிக்கும் பொருட்டு தனது வில்லில் பூட்டிய அம்பானது அங்குள்ள ஏழு மரங்களை ஒருசேர துளைத்து ஊடுருவிக் கொண்டு வரும்படி செலுத்திய நற்குணமுள்ள தலைவனாகிய இராம பிரானும், சமுத்திர ராஜனாகிய வருணனும் வணங்கி தொழுத, பெண்ணை ஒரு பாகமாக கொண்ட சிவனை நீங்கள்

செம்பொற்சோதிநாதர் SemPorSodhiNathar

Image

அருணாசலேச்சுரர் Arunachalechurar

Image
உருவமோ ஓர்சடையன் ஊர்தோறு மிரத்தல் தருவதோ சுத்தஞான இச்சை தழலேகையினில் சருமமோ அண்ணா ர்க்குடை தொழுமின் கருநோய் களைந்து இனிதே அவனுள்சேர்வீர்!  உருவமோ ஓர் சடையன் ஊர் தோறும் இரத்தல்  தருவதோ சுத்த ஞான இச்சை தழலே கையினில்  சருமமோ அண்ணார்க்கு உடை தொழுமின்  கருநோய் களைந்து இனிதே அவன் உள் சேர்வீர்!  இரத்தல் - பிட்சை,   கருநோய் – பிறப்பு,   இச்சை - விருப்பம், சருமம் - தோல்,   தழல் – அக்கினி,   களைந்து - விலக்கி பொழிப்புரை:- வடிவமோ ஓர் சடை முடியன் ஊர் எல்லாம் பிச்சை எடுத்தல் அருளுவதோ நிர்குண ஞான விருப்பம் அக்கினி கரங்களில் தோலோ அவர்க்கு உடை  (ஈசனை)  வணங்குவீர் பிறப்பை நீக்கி  இன்பமோடு அவன் உள்ளே சேருவீர் ! கருத்துரை:-   ஈசன் சடா முடி தரித்த உருவத்தோடு காட்சி தருபவன். அதனால் சடையன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அடியார்கள் பொருட்டு ஊர் ஊராகச் சென்று பிட்சை எடுத்தவன். அது வல்லாது தாருகாவன ரிஷிகளை அடக்குவதற்கு என்றே பிட்சாடனர் வேடங் கொண்டு ரிஷி பத்தினிகள் வீட்டு வாசல் தோறும் பிட்சைக்கு சென்றவன். அதனால் பிட்சாடன மூர்த்தி என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு. இது ஈசனுடைய 64 மூர்த்தங்களில்  29- வது மூர்த்தியா