Posts

Showing posts from September, 2020

குந்தளேச்சுரர் Kundhalechurar

Image
 

ஐராவதேச்சுரர் மாலை Iyravathesurar Malai

Image
  ஐராவதேச்சுரர் மாலை   Iyravathesurar Malai [ Pdf ] ஐராவதேச்சுரர் மாலை அத்திமுகம்                            சுவாமி:--- ஐராவதேச்சுரர்                  இராகம்:---- சங்கராபரணம் அம்பாள்:--- காமாட்சியம்மை              தாளம்:--- கண்ட ஜம்பை தீர்த்தம்:--- அகத்திய தீர்த்தம்               அட்சரம்:---- 2 ½                                               திருச்சிற்றம்பலம்                              சித்தந்தெளிய சிறப்பான மருந்தொன் றுண்டென்று      சிந்தையி லிருத்துவாரை சிவமாக்கி யாள்வானை நித்தம்நீரும் பூவுங்கொண்டு நிறைவாய் நினைந்து      நேசமொடு தொழுவாரை நேடியேச் செல்வானை அத்தனை யறிய வொண்ணா யானந்த கூத்தனை      அமரோன் அகத்திய தீர்த்தமாடி பூசித்தானை அத்திமுகனாய் காமாட்சியம்மை யுடனுறையும்      ஐராவதேச்சுரனை பணிந்திட பிணியறுமே ! ( 1. )   சித்தந் தெளிய சிறப்பான மருந்து ஒன்று உண்டு என்று      சிந்தையில் இருத்துவாரை சிவம் ஆக்கி ஆள்வானை நித்தம் நீரும் பூவுங் கொண்டு நிறைவாய் நினைந்து      நேசமொடு தொழுவாரை நேடியேச் செல்வானை அத்தனை அறிய ஒண்ணா ஆனந்த கூத்தனை