Posts

Showing posts with the label Lingam21-40

சந்திரசூடேச்சுரர் Chandrasudechurar

Image
புந்தியிலோர் பரிபூரண ஞானம் பரவிட இந்துவுஞ் சுருள்தோடு மிச்சை யோடேச்சூ டந்தரந் தனிலோர் சுந்தர நடமாடும் நந்தியை நாடிதொழுது விழுந்து சரணடைவீர் !

விசயநாதேச்சுரர் VisayaNathechurar

Image
வசனமே ஓர் வடிவாய் அமைந்த அரனே ! நிசமானதோர் சுகம் பெறவேச் செயுந்தேவனே ! திசநாதன் சிரசையன்று கொய்தவா! என் கசடுங் கன்ம வினையும் விலகிடயருளுக !

தியகராசேச்சுரர் ThiyagaRachechurar

Image
மாயா உலகோர் மதியொடு மீனுங் கதிரவனும் ஓயாமல் சுற்றிடவே வைச் சிவனே! சேவடி ஈயாராகில் உமக்கழகோ? வெனக்கு நீரே தாயாகி தந்தையுமாயிருந் தின்னலைத் தீரும்!

சப்தபுரீச்சுரர் Sabthapureechurar

Image
முப்போதுமோர் உயிர்வாழ உணவுதரவலர் தப்பாது சுருதி பாடிடச் செய்வரீவதோ ஓப்புடைய பொருள் தன்னுள் அடங்கிய எப்போதுங் காக்க வல்ல சதாசிவ பாதமுமே !

முல்லைவனேச்சுரர் MullaiVanechurar

Image
கல்லிலு மோர் உயிரை வைத்துணவு தரவல சொல்லிலுஞ் சுவையாயுள்ளச்சித்தனே என பல் வளமொடு இல்லை எனாதோர் மழலைச் செல்வமும் மகிழ் வாழ்வுமுறவுந் தருவான் !

மகாலிங்கேச்சுரர் MagaLingechurar

Image
ஆகாதது ஓர்செயல் ஆகுமென்று அரனை கூகாதிருப்பை சுழல்நெஞ்சேச் சொலைக் கேளாயோ? ஏகாங்கியாய் ஆடலில் வல்லோனை ஈசனே நாகாபரண நாதசொரூபனே மகாதேவனே என்க !

வீரட்டானேச்சுரர் Veeratanechurar-Thiruvathigai

Image
இரவில் ஓர் மதியும் பகலிலோர் ரவியுந் தரணிச் சுற்றிட வரச் செய்வனே! என் கரடான வாழ்வு விட்டொழிந்து என்றுந் திரண்டிடச் செய்திடுக! வீடுஞ் செல்வமுமே !

பிரமபுரீச்சுரர் Biramapureechurar-SirKazi

Image
திரளன்பர் கூட்டந் தினமும் பரவ கரங்கூப்பி சுரர்போற்றச் சடைய ரீவது வரபுவி வாழ்வும் மதிநிறை செல்வமும் பரவியகலை கல்வியும் பிறவாமையு மாகுமே !

வில்வநாதேச்சுரர் Vilvanathesurar

Image
நில்லாத தோர் பொருளைக் காத்து ஆதரவென்று இல்லாத சுழிப் பற்றிச் செல்லாதே நல்லோர் நாதனே நமசிவாயனே நான் மறையோனே பல் உயிர்க்குமருளும் விமலனே வென கூறு !

நஞ்சுண்டேச்சுரர் Nanjundechurar

Image
நெஞ்சே நீ நிர்மலனை நினைந்தழுதரற்றி தஞ்சமென சுற்றியவனைச் சுடரோடே நஞ்சு உண்ட மிடறோனே! சுரர்பதியேயெனவே அஞ்சேலென்றவனும்பல நலமேயருளுவான் !

கனககிரீச்சுரர் Kanagagirichurar

Image
அனலில் ஓர் அற்புதஞ் செயவலரவரே புனலையுஞ் சுவற யருளைச் செய்வரீவது வினகில் ஞானமுங் கல்வியும் அறிவுந் தனமுந் தானியமுமேயென கருதிதொழுதிடுக ! அனலில் ஓர் அற்புதஞ் செய்வலர் அவரே  புனலையுஞ் சுவற அருளைச் செய்வர் ஈவது  வினகில் ஞானமுங் கல்வியும் அறிவுந்  தனமுந் தானியமுமே என கருதி தொழுதிடுக !  அனல் -  நெருப்பு,   புனல் -  நீர்,   சுவற  -  வற்றிட,   வினகில் -  கேட்பது பொழிப்புரை:- அனலில் ஒரு அற்புதஞ் செய்ய வல்லவர் அவரே நீரை வற்றிட அருளச் செய்வார் தருவது (எதுவென) கேட்பீராகில் (அது) ஞானமும், கல்வியும், அறிவும், தனமும், தானியமுமே என நினைந்து (அவரை)'தொழுதிடுக! கருத்துரை:- ஈசன் நெருப்பிலும், நீரிலும் பல அற்புதங்களை செய்ய வல்லவர். அவர் இவ்வுலக உயிர்களுக்கு தருவது எதுவென கேட்பீராகில் அது ஞானமும் கல்வியும் அறிவும் தனமும் தானியமும் ஆகும். ஆகையால் அவரை நினைந்து வழிபட்டு நற்கதியை அடையுங்கள்! திருத்தல பெருமை:-  சுவாமி    -    கனககிரீச்சுரர். அம்பாள் -   பெரிய நாயகி  தலம் -   திருதேவிகாபுரம் தீர்த்தம்...

தீர்த்தகிரீச்சுரர் Theerthagireechurar

Image
சேர்த்த ஓர்குடமதில் குருதி நரம்பொடு கோர்த்த சுவருயிரை நச்சு வீரீலாகி லார்த்தபொருள் உமக்குத் தருமோ அருளை? தீர்த்தமாடீ ரும்மைதொடருந் தீவினை தீருமே !

அர்தநாரீச்சுரர் ArthaNareechurar

Image
கார்கண்டர் என்றேத் துஞ்சரா சரனை வார்சடையைச் சுற்றியவனைச் சொற்பே ரீவானை தார்நாயகனை நற்தமிழால் நெகிழ ஓத சீர்செல்வம் மனைமாட்சி அனைத்து மடைவீர்!

மகாலட்சுமீச்சுரர் MagaLatchumeechurar

Image
புகாததுஓர் ஒளி பிழம்பாகிய கிரண குகா கமலச் சுடர் மேல் இச்சை வைமீர் சுகா யனுட்டான ஞானமாம் மூலப் பொருளானானை சிகாமணியே! சிவமே! என்னீர் சேமம் பெறுவீர்!

ஐசுவரியேச்சுரர் Isuwariyechurar

Image
பூசுநீறுமோர் புனித யாறுமுடைய அரனே ! மாசு இலா தோர் சுத்த கூவிளச் செச்சை யேனே ! ஈசுவரனே ! அடியேன் வறுமை அகன்றிட நீ பேசு கவியொடருள் சகல ஐசுவரியங்களை !

திருஎரும்பீச்சுரர் ThiruErumbechurar

Image
கயவரை பார்த்தே எரித்த ஓம்காரணனே ! சுயபரஞ் சுடரே என்றேச் செப்பீரும் துயருரும் பகையுந் தீயஎலாம் நீங்கி உயரும் நும்வாழ்வு பெருகும் நிதியுமதியுமே !

திருஆதிநாதேச்சுரர் ThiruathiNathechurar

Image
உருவமுமோர் நான்காய் உறை ஓங்காரனை பருவங்களை சுற்றினானை பேச்சில்தேனை நாத சுருதியில் இருப்பானை ஆதிநாதனை சிவ கிருபை தருவானை கருதிதொழ விதியறுப்பீர்!

திருகச்சபேச்சுரர் ThiruKatchabechurar

Image
சுரும்பினோர் இசையினி லயிக்கு மரனேநீ கரும்பின் சுவையேப் போலச் சொற்பேறு சருவியச் சாத்திரமுஞ் சகல கலைகளுங் குருவாய் இருந்து போதிக்க மதியில்உறைக!

தேவசேனாபதீச்சுரர் DevaSenaPatheechurar

Image
சிந்திப்பர் தமக்கு இரங்கி வரமுந் தந்திடுஞ் சுத்த சிவமேச் செந்தீயே! பந்தமெனா ஓர்பற்றை நின்சேவடியில் வைக்க வந்திடுவாய் அடியன்முன் தேன் சொறிந்தே!

கல்யாணசுந்தரர் Kalyanasundarar

Image
வல்லானை வார் சடையானை விமலனை வீரனை சொல்லானை தேன் தமிழிலுறையுந்திரள் சுவை நல்மணந் தருந் தாயானானை நவின்றேத்த இல்லறந்தனிலின்பங்களெலாந் தருவான்!