சிவகிரிநாதேச்சுரர் SivagiriNathechurar
அவனியிலோர் புனலில் தோன்றிய அரனை நவரசமாய் சுவையுமாய் நச்சிய தேனைநாடு மெவரிட மருளைப் பொழிகின்ற யெந்தையை சிவகிரிநாதனை கண்ணார தரிசித்து தொழுக! அவனியில் ஓர் புனலில் தோன்றிய அரனை நவரசமாய் சுவையுமாய் நச்சிய தேனை நாடும் எவரிடம் அருளைப் பொழிகின்ற எந்தையை சிவகிரி நாதனை கண்ணார தரிசித்து தொழுக! சுவை - ஆறு சுவை, அவனி - உலகம் நச்சிய - விரும்பிய, புனல் - நீர் அரன் - சிவன், எந்தை - தந்தை நவரசம் - ஒன்பது வகையான உணர்ச்சிகள் கண்ணார - கண்குளிர பொழிப்புரை:- உலகத்தில் ஓர் நீர்நிலையில் உற்பவித்த சிவனை ஒன்பது உணர்ச்சிகளாய் சுவைகளாய் விரும்பும் தேனை நாடும் எவரிடமும் அருளை பொழிகின்ற தந்தையை சிவகிரி நாதனை கண்குளிர கண்டு வணங்கிடுக! கருத்துரை:- இப்பூவுலகில் ஈசன் மலை என்கின்ற ஒரு சிவத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (நீரில்) தோன்றிய சிவபரம் பொருளை, ஒன்பது வகையான உணர்ச்சி வெளிப்பாடுகளில் இருப்பவனை, ஆறு சுவைகளாய் இருப்பவனை, விரும்புகின்ற தேன் போன்றவனை நாடுபவர்கள் யாராய் இருந்தாலும் திருவருளை வாரி சொரிகின்ற தந்தையாய்...