Posts

Showing posts from June, 2017

திருகச்சபேச்சுரர் ThiruKatchabechurar

Image
சுரும்பினோர் இசையினி லயிக்கு மரனேநீ கரும்பின் சுவையேப் போலச் சொற்பேறு சருவியச் சாத்திரமுஞ் சகல கலைகளுங் குருவாய் இருந்து போதிக்க மதியில்உறைக!

தேவசேனாபதீச்சுரர் DevaSenaPatheechurar

Image
சிந்திப்பர் தமக்கு இரங்கி வரமுந் தந்திடுஞ் சுத்த சிவமேச் செந்தீயே! பந்தமெனா ஓர்பற்றை நின்சேவடியில் வைக்க வந்திடுவாய் அடியன்முன் தேன் சொறிந்தே!

கல்யாணசுந்தரர் Kalyanasundarar

Image
வல்லானை வார் சடையானை விமலனை வீரனை சொல்லானை தேன் தமிழிலுறையுந்திரள் சுவை நல்மணந் தருந் தாயானானை நவின்றேத்த இல்லறந்தனிலின்பங்களெலாந் தருவான்!

நித்தியசுந்தரர் NithyaSundarar

Image
அத்தியையோர் அருட் பார்வையால் விரவிய சித்தனே! நிதமுமுருகி யுந்தனை பேசும் சத்திய சீலர்பால் திருக்கண் நோக்கும் உத்தமனே! எனிடர்தீர நினதருளை பொழிக!