வள்ளிமலையில் தெள்ளிக் கொழிக்கும் வண்ணங்கள் - ஆய்வுரை

வள்ளி மலையில் தெள்ளிக் கொழிக்கும் வண்ணங்கள் பதிகள் பலவாயிரங்கள் மலைகள் வெகுகோடி நின்ற பதமடியர் காண வந்த கதிர்காமா '' என்ற அருணகிரியார் வாக்கிற்கிணங்க ஆறுமுகப் பெருமான் இப்பூவுலகில் ஆன்மாக்களை கடைத்தேற்ற பதியெங்கிலும் , பலக் குன்றிலும் குடி கொண்டு அருள் பாலிக்கிறான். அவற்றுள் இரண்டு தலங்களில் மட்டும் இச்சாசக்தியாகிய வள்ளிப்பிராட்டியை முதன்மை யாக வைத்துப் பேசப்படுகிறது. அவை :- ( 1) தொண்டை நாட்டில் வடஅற்காடு மாவட்டத்திலுள்ள வேலூருக்கு அருகிலுள்ள " வள்ளிமலை " (2) திருநெல்வேலிக்கு தெற்கே 19 மைலிலுள்ள நாங்குநேரிக்குத் தென்கிழக்கில் 9 மைல் தூரத்திலுள்ள " வள்ளியூர் '' ஆகும். இதில் '' வள்ளிமலை " மட்டும் மலையை சேர்த்து சிறப்பாய் சொல்லப் படுகிறது. மற்ற மலைகளை அவ்வாறு கூறவில்லை. அடுத்து '' வள்ளியூர் " ஊரைப் பற்றி பேசப்படுகிறது. எது எங்ஙனம் இருப்பினும் திருமுருகப் பெருமான் வள்ளியை வலிய தேடி வந்து வள்ளி மலையில் திருவடி பதித்து , திருவிளையாடல் புரிந்து , ஆட்கொண்டு , களவு மணம் புரிந்து , வள்ளிமணாளனாக அருள் பாலிக்கும் விதம் எல்லோரை...