சிவகிரிநாதேச்சுரர் SivagiriNathechurar
நவரசமாய் சுவையுமாய் நச்சிய தேனைநாடு
மெவரிட மருளைப் பொழிகின்ற யெந்தையை
சிவகிரிநாதனை கண்ணார தரிசித்து தொழுக!
அவனியில் ஓர் புனலில் தோன்றிய அரனை
நவரசமாய் சுவையுமாய் நச்சிய தேனை நாடும்
எவரிடம் அருளைப் பொழிகின்ற எந்தையை
சிவகிரி நாதனை கண்ணார தரிசித்து தொழுக!
சுவை - ஆறு சுவை, அவனி - உலகம்
நச்சிய - விரும்பிய, புனல் - நீர்
அரன் - சிவன், எந்தை - தந்தை
நவரசம் - ஒன்பது வகையான உணர்ச்சிகள்
கண்ணார - கண்குளிர
பொழிப்புரை:-
ஒன்பது உணர்ச்சிகளாய் சுவைகளாய் விரும்பும் தேனை நாடும்
எவரிடமும் அருளை பொழிகின்ற தந்தையை
சிவகிரி நாதனை கண்குளிர கண்டு வணங்கிடுக!
கருத்துரை:-
இப்பூவுலகில் ஈசன் மலை என்கின்ற ஒரு சிவத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (நீரில்) தோன்றிய சிவபரம் பொருளை, ஒன்பது வகையான உணர்ச்சி வெளிப்பாடுகளில் இருப்பவனை, ஆறு சுவைகளாய் இருப்பவனை, விரும்புகின்ற தேன் போன்றவனை நாடுபவர்கள் யாராய் இருந்தாலும் திருவருளை வாரி சொரிகின்ற தந்தையாய் இருப்பவனை சிவகிரி நாதன் என்ற சிறப்பு பெயர் கொண்டவனை கண்குளிர கண்டு வணங்கிடுக!
திருத்தல பெருமை:-
சுவாமி - சிவகிரி நாதேச்சுரர், சலநாதர், சலசங்கரன்.
அம்பாள் - இளங்கிளி மொழியாள்.
தீர்த்தம் - சிவகிரி தீர்த்தம். சரவண பொய்கை
விருட்சம் - அத்தி மரம், பவழ மல்லி
வழிபட்டோர் - இந்திரன், இயமன், அகத்தியர். மார்கண்டேயர், சித்தர்கள்
பாடியவர் - ஆரணியடியார்கடியவன்.
நூல் - லிங்காட்சர மாலை, சிவகிரிநதேச்சுரர் மாலை,
சிவகிரி சிங்கார வேலன் மாலை, சிவகிரி பரிவார தேவர்கள் மாலை.
வழிபடும் பலன் – பிறப்பின்மை, தீமை விலகல், செல்வம், செழுமை, துயர் தீர்தல், கல்வி, நோய் அகலுதல், நாக தோஷம் விலகல், புகழ், நீண்ட ஆயுள், காரிய சித்தி, யோகம், தவம்.