Posts

Showing posts from August, 2016

சுந்தரநடராசர் SundaraNataRasar

Image
திருமறை யோர் புகழ சடைவீசி பொற்சபையி லொரு கால்பராவி யாடும் நடராசனை நும் இருகரங் கூப்பித் தலையால் வணங்க வருந்துயரகன்று வாழ்வு சுபீட்சமடையும்! திரு மறையோர் புகழ சடை வீசி பொற்சபையில்  ஒரு கால் பராவி ஆடும் நடராசனை நும்  இரு கரங் கூப்பித் தலையால் வணங்க  வருந் துயர் அகன்று வாழ்வு சுபீட்சம் அடையும்!  மறை - வேதங்கள்,    பராவி - விரிவாக எங்கும் நிறைந்து,   கூப்பி – சேர்த்து,  சுபீட்சம் – ஷேமம்,  நன்மை,  செழிப்பு. பொழிப்புரை:- வேத நெறி அந்தணர்கள் புகழ சடை வீசி பொற்சபையில் ஒரு காலை எங்கும் நிறைத்து ஆடும் நடராசனை  உங்கள் இரு கரங்களை கூப்பி தலையால் வணங்க  வருகின்ற துயரம் நீங்கி வாழ்வு வளம் அடையும்! கருத்துரை:- வேதம் ஓதும் அந்தணர்கள் போற்றி புகழ, சடையை விசி பொன்னம்பலத்தில்  எங்கும் நிறைத்து ஆடுகின்ற நடராச பெருமானை உங்கள் இருகைகளைக் கொண்டு கூப்பித் தலையால் வணங்க,  வருகின்ற துயரங்கள் எல்லாம் நீங்கி வாழ்வும் செழிப்பு அடையும்.!  திருத்தல பெருமை:-   சுவாமி  -        சுந்தர நடராசர்  அம்பாள்...

காளஅத்தீச்சுரர் Kalatheechurar

Image
அளவிலா யோர் பேரானந்தங் கொண்டுரவொடு இளவேனில் சுகம்போன்றுச் சீவனை தீண்டி குளத்தில் மூழ்கி அவனருள் குழைந்து உளம் அவன்பாற் செலுங்கால டைவீர்சித்தி! அளவு இலா ஓர் பேரானந்தங் கொண்டு உரவொடு இளவேனில் சுகம் போன்றுச் சீவனை தீண்டி குளத்தில் மூழ்கி அவன் அருள் குழைந்து உளம் அவன் பாற் செலுங்கால் அடைவீர் சித்தி! உரவு – வலிமை, வேகம்,   இளவேனில் – வசந்தகாலம்,   சீவன் - ஆன்மா தீண்டி - தொடுவது,   குளம் - இன்பமாகிய அருள் குளம்,  குழைந்து – கலந்து, சேர்ந்து. பொழிப்புரை:- அளவில்லாத ஒரு பேரானந்தம் கொண்டு அதிகமான இளவேனில் (காற்று) சுகம் போன்று சீவனை தீண்டி, (அருள்) குளத்தில் (மனம்) மூழ்கிச் சிவனருள் கலந்து, உள்ளம் இறைவனிடம் செல்லும்போது அடைவீர்  வீடுபேற்றை! கருத்துரை:-   இளவேனில் (வசந்த கால) தென்றல் காற்று வேகமாக வீசித் தீண்டும் இனிமையான சுகத்தைப் போன்று, சிவபெருமான் தனது அளவிட முடியாத பேரானந்த அருளைக் கொண்டு சீவன்மாவை தீண்டி உள்ளத்தைச் சிவனருள் குளத்தில் மூழ்கிக் குழைந்து நெகிழச் செய்யும் அருட்செயலினால், உள்ளம் மாசகன்று தூய்மையாகி அவரிடம் செல்லும் பொது, பிறவிப் பய...