சுந்தரநடராசர் SundaraNataRasar
லொரு கால் பராவி யாடும் நடராசனை நும்
இருகரங் கூப்பித் தலையால் வணங்க
வருந்துயரகன்று வாழ்வு சுபீட்சமடையும்!
திரு மறையோர் புகழ சடை வீசி பொற்சபையில்
ஒரு கால் பராவி ஆடும் நடராசனை நும்
இரு கரங் கூப்பித் தலையால் வணங்க
வருந் துயர் அகன்று வாழ்வு சுபீட்சம் அடையும்!
மறை - வேதங்கள், பராவி - விரிவாக எங்கும் நிறைந்து, கூப்பி – சேர்த்து,
சுபீட்சம் – ஷேமம், நன்மை, செழிப்பு.
பொழிப்புரை:-
வேத நெறி அந்தணர்கள் புகழ சடை வீசி பொற்சபையில்
ஒரு காலை எங்கும் நிறைத்து ஆடும் நடராசனை உங்கள்
இரு கரங்களை கூப்பி தலையால் வணங்க
வருகின்ற துயரம் நீங்கி வாழ்வு வளம் அடையும்!
கருத்துரை:-
வேதம் ஓதும் அந்தணர்கள் போற்றி புகழ, சடையை விசி பொன்னம்பலத்தில் எங்கும் நிறைத்து ஆடுகின்ற நடராச பெருமானை உங்கள் இருகைகளைக் கொண்டு கூப்பித் தலையால் வணங்க,
வருகின்ற துயரங்கள் எல்லாம் நீங்கி வாழ்வும் செழிப்பு அடையும்.!
திருத்தல பெருமை:-
சுவாமி - சுந்தர நடராசர்
அம்பாள் - சிவகாம சுந்தரி
தீர்த்தம் - குமார தீர்த்தம்
விருட்சம் - அரச மாம்
வழிபட்டோர் – தேவர்கள், முனிவர்கள், சனீச்சுரன், பிரம்மா, சரஸ்வதி, லஷ்மி, சித்தர்கள், திருப்புகழ் செம்மல் “சிவன் அடியார்” துரைசாமி நாயனார்.
நூல் - லிங்காட்சர மாலை, சுந்தர நடராசர் மாலை.
பாடியவர் - ஆரணியடியார்க்கடியவன்
வழிபடும் பலன் - மண மாலை, குழந்தை பேறு, நோய் அகலுதல், கலை, திறமை, பிரிந்த தம்பதியர் ஒன்று சேருதல், காரியசித்தி.