Posts

Showing posts from September, 2016

நீலகண்டேச்சுரர் Neelakandechurar

Image
ஆலமுண்டார் யறிந்தருள் செய்வா ரவர் கோலமொடுச் சுற்றிவர இச்சைகொண்டே ஞாலமு மண்டமிரவு பகல் செய்தாரவரைச் சீலமொடிருத்தி துதித்து நீர் வாழ்வீரினிதே! ஆலம் உண்டார் அறிந்து அருள் செய்வார், அவர் கோல மொடுச் சுற்றி வர இச்சை கொண்டே ஞாலமும் அண்டம் இரவு பகல் செய்தார் அவரைச் சீலமொடு இருத்தி துதித்து நீர் வாழ்வீர் இனிதே! ஆலம் -  ஆலகால விஷம்,    இச்சை - விருப்பம்,    ஞாலம் - உலகம்,  அண்டம் - ஆகாயம்,  வெட்ட வெளி,  சீலம் - நற்குணம். பொழிப்புரை:- ஆலகால விஷமுண்டார் அறிந்து அருள் செய்வார்,  அவர் கோலங்கள் கொண்டு (உலகை) சுற்றிவர இச்சை கொண்டே உலகம், அண்டம், இரவு பகல் படைத்தார், அவரை  நற்குணங்களொடு (மனதில்) இருத்தி துதித்து நீங்கள் இனிமையாக வாழ்வீர்கள்! கருத்துரை: -  அன்று ஆலகால விஷத்தை உண்ட சிவபெருமான் தன் அடியார்களுக்கு எது எப்போது எப்படி அருள் புரிய வேண்டும் என அறிந்து அப்படி அருள் செய்வார். அவர் பல வேடங்களைக் கொண்டு இப்பூவுலகில் சுற்றிவர விருப்பங் கொண்டே உலகமும் அண்டமும் (ஆகாயம்) இரவும், பகலும் உண்டாக்கினார் அவரை நல்ல உயர்ந்த குணங்களொடு உள்ளத்தில் இரு...

கங்காதரேச்சுரர் Gangatharechurar

Image
அங்கியை யோர் யங்கையிலடக்கி யரவொடு கங்கையைச் சுழல வைத்தச் சதுரரே சங்கையை தவிர்த்திட காரணமானவரவரே உங்கள் வல்வினை மாய்க்க வல்லவராவார்! அங்கியை ஓர் அங்கையில் அடக்கி அரவொடு  கங்கையைச் சுழல வைத்தச் சதுரரே  சங்கையை தவிர்த்திட காரணமானவர் அவரே  உங்கள் வல் வினை மாய்க்க வல்லவர் ஆவார்!  அங்கி - அக்கினி,  சங்கை - பகை,  ஐயம்,   அங்கை - உள்ளங்கை,   வல் - வலிமை,   அரவு - நாகம் ,  சதுரர் - நான்கு வேதங்களுக்கு நாயகன் (ஈசன்) பொழிப்புரை:- அக்கினியை ஒரு உள்ளங்கையில் அடக்கி, நாகமொடு  கங்கையை (முடியில்) சுழல வைத்த நான்கு வேதங்களுக்கு நாயகனே, பகை நீங்கிட காரணமானவர்  அவரே  உங்கள் வலிமை மிக்க வினையை அழிக்க வல்லவர் ஆவார்! கருத்துரை:- நான்கு வேதங்களுக்கும் தலைவனாக விளங்கக்கூடிய ஈசன் தனது சடா முடியில் நாகத்தையும், விரைவாகச் சுழன்று ஓடுகின்ற கங்கையையும் வைத்துத் தனது உள்ளங்கை ஒன்றில் அக்கினியையும் அடக்கிக் காட்சி தருபவர். அவர் எழுகின்ற ஐயமும், வருகின்ற பகையும் நீங்குவதற்கு காரணமாக இருப்பவர். அவரே உங்கள் வலிமை வாய்ந்த வினைகள் அழிக்கவும் வல்லவர் ஆவ...