புத்ரகாமேச்சுரர் - 2 Puthrakamechurar - 2
தார் பொழி சீர்மிகு திருவடியைச் சாரயுன் ஊர் பலச்சுற்றியு மருச்சித்துமே யறியேன் கார்முகில் ஆரணங் கொடருள காட்சித் தருக பேர் பலவாய் புகழும் பரமனே ! தார் பொழி சீர்மிகு திருவடியைச் சார உன் ஊர் பலச் சற்றியும் அருச்சித்துமே அறியேன் கார் முகில் ஆரணங் கொடு அருள காட்சித் தருக! பேர் பலவாய் புகழும் பரமனே ! முகில் - மேகம், ஆரணம் - வேதம், பொழி - சொரி , கொட்டு தார் - பூக்கள், சீர் - அழகு , சார - சேர, அடைய, கார் - கருமை பொழிப்புரை:- பூக்கள் சொரிய அழகு மிகுந்த திருப்பாதங்களை சேர உன் ஊர்கள் பல வலம் வந்தும் அருச்சனை செய்துமே அறியேனே கரு மேகங்கள் (மழையைப் பொழிவதுபோல) வேதங்களை அருள்வதற்கு காட்சிதருக பெயர்கள் பலவாக புகழ்கின்ற பரம் பொருளே! (சிவனே) கருத்துரை:- பல வண்ண பூக்களைக் கொண்டு சொரிந்து அருச்சனை செய்துள்ள அழகு மிகுந்த திருவடிகளை யான் சேர்வதற்கு, நீர் திருக்கோயில் கொண்டிருக்கும் பல ஊர்களை சென்று வலம் வந்தும் உனது திருப்பாதங்கள் மலர்களால் அருச்சனை செய்துமே உனை அறிந்து கொண்டிலனே ! கருமை நிறங் கொண்ட மேகங்கள் மழையை வாரி பொழிவதற்கு கூடுவது போல யான் உனை அறிந்து கொள்வதற்க்கு,