Posts

Showing posts from July, 2016

சலகண்டேச்சுரர் Salakandechurar

Image
கலந்த தோர் கருவில் உயிரும் பரந்து பல நாளுஞ் சுற்றி முற்றிச் சுருண்டே உலகு கண்டு உருவங்கள் மாறி யழியாமல் நலந்தரும் நிமலாயுன் சபையின் கண்வைக! கலந்தது ஓர் கருவில் உயிரும் பரந்து  பல நாளுஞ் சுற்றி முற்றிச் சுருண்டே  உலகு கண்டு உருவங்கள் மாறி அழியாமல்  நலந் தரும் நிமலா உன் சபையின் கண் வைக! பரந்து - விசாலமான விரிந்த, வியாபித்து,    சபை - திருச்சபை,  திருவடி நிமலன் - சிவன். பொழிப்புரை:- சேர்ந்த ஒரு கர்பத்தில் இவ்வுயிரானது வியாபித்து பல நாட்கள் சுழன்று முதிர்ச்சி அடைந்து சுருண்டு (பின்) பூமியைக் கண்டு (தன்) வடிவங்கள் மாற்ற மடைந்து அழிந்து போகாமல் நன்மைகள் அருளும் சிவனே உனது திருச்சபையில் வைத்திடுக! கருத்துரை - இவ்வுயிரானது ஒரு தாயின் கர்பத்தில் சேர்ந்து விசாலமாய் முன்னூறு நாட்கள் தங்கி அங்கே மேலுங் கீழுமாய் சுழன்று முதிர்ச்சி அடைந்து,சுருண்டு பின் வெளியே வந்து இம்மண்ணுலகை காண்கிறது. அதன் பிறகு அது மழலை பருவம்.  பால பருவம்,  வாலிப பருவம், முதுமை பருவம் என பல வடிவங்களாக மாற்றம் அடைந்து இறுதியில் அழிந்து போகிறது. நன்மைகள் அருளும் சிவபரம் பொருளே இ...

இராமநாதேச்சுரர் RamaNathechurar

Image
சிலையில் கோர்த்த சரமேழு மராமரமுங் குலைந் துச்சுவற எய்தச்சீலத் தேவன் அலைநாதன் தொழுத மங்கை பாகனைநீர் மலைராசன் மகளோடு தொழுது இருவினை களைவீரே! சிலையில் கோர்த்த சரம் ஏழு மரா மாரமுங்  குலைந்துச் சுவற எய்தச் சீலத் தேவன்  அலை நாதன் தொழுத மங்கை பாகனை நீர்  மலைராசன் மக ளோ டு தொமுது இரு வினை களைவீரே ! சிலை – வில்,  இரு வினை - நல்வினை,தீவினை,   சரம் - அம்பு, களைவீரே – நீக்குவிரே ,  சுவற – சிதற,  ஊடுறுவ,  சீலத்தேவன் – இராமன்,  அலை நாதன் – வருணன்,   மலைராசன் – இமவான். பொழிப்புரை:- வில்லில் பூட்டிய அம்பு ஏழு மரா மரங்களை  துளைத்து ஊடுறுவி வர செலுத்திய நற்குணமுடைய தலைவன் (இராமனும்) வருணனும் வணங்கிய பெண்ணை ஒரு பாகம் உடையவனை  நீங்கள் இமவான் மகளோடு  வணங்கி  இரு வினைகளை நீக்குவீர் ! கருத்துரை:- தனது வனவாச காலத்தில் தன் ஆற்றலை குரங்குகளின் அரசனான சுக்ரீவனுக்கு நிரூபிக்கும் பொருட்டு தனது வில்லில் பூட்டிய அம்பானது அங்குள்ள ஏழு மரங்களை ஒருசேர துளைத்து ஊடுருவிக் கொண்டு வரும்படி செலுத்திய நற்குணமுள்ள தலைவனாகிய இராம பிரானும், சமுத்திர ர...

அருணாசலேச்சுரர் Arunachalechurar

Image
உருவமோ ஓர்சடையன் ஊர்தோறு மிரத்தல் தருவதோ சுத்தஞான இச்சை தழலேகையினில் சருமமோ அண்ணா ர்க்குடை தொழுமின் கருநோய் களைந்து இனிதே அவனுள்சேர்வீர்!  உருவமோ ஓர் சடையன் ஊர் தோறும் இரத்தல்  தருவதோ சுத்த ஞான இச்சை தழலே கையினில்  சருமமோ அண்ணார்க்கு உடை தொழுமின்  கருநோய் களைந்து இனிதே அவன் உள் சேர்வீர்!  இரத்தல் - பிட்சை,   கருநோய் – பிறப்பு,   இச்சை - விருப்பம், சருமம் - தோல்,   தழல் – அக்கினி,   களைந்து - விலக்கி பொழிப்புரை:- வடிவமோ ஓர் சடை முடியன் ஊர் எல்லாம் பிச்சை எடுத்தல் அருளுவதோ நிர்குண ஞான விருப்பம் அக்கினி கரங்களில் தோலோ அவர்க்கு உடை  (ஈசனை)  வணங்குவீர் பிறப்பை நீக்கி  இன்பமோடு அவன் உள்ளே சேருவீர் ! கருத்துரை:-   ஈசன் சடா முடி தரித்த உருவத்தோடு காட்சி தருபவன். அதனால் சடையன் என்ற சிறப்பு பெயரும் உண்டு. அடியார்கள் பொருட்டு ஊர் ஊராகச் சென்று பிட்சை எடுத்தவன். அது வல்லாது தாருகாவன ரிஷிகளை அடக்குவதற்கு என்றே பிட்சாடனர் வேடங் கொண்டு ரிஷி பத்தினிகள் வீட்டு வாசல் தோறும் பிட்சைக்கு சென்றவன். அதனால் பிட்சாடன மூர்த்...