இராமநாதேச்சுரர் RamaNathechurar
குலைந் துச்சுவற எய்தச்சீலத் தேவன்
அலைநாதன் தொழுத மங்கை பாகனைநீர்
மலைராசன் மகளோடு தொழுது இருவினை களைவீரே!
சிலையில் கோர்த்த சரம் ஏழு மரா மாரமுங்
குலைந்துச் சுவற எய்தச் சீலத் தேவன்
அலை நாதன் தொழுத மங்கை பாகனை நீர்
மலைராசன் மகளோடு தொமுது இரு வினை களைவீரே !
சிலை – வில், இரு வினை - நல்வினை,தீவினை, சரம் - அம்பு,
களைவீரே – நீக்குவிரே, சுவற – சிதற, ஊடுறுவ,
சீலத்தேவன் – இராமன், அலை நாதன் – வருணன், மலைராசன் – இமவான்.
பொழிப்புரை:-
வில்லில் பூட்டிய அம்பு ஏழு மரா மரங்களை
துளைத்து ஊடுறுவி வர செலுத்திய நற்குணமுடைய தலைவன் (இராமனும்)
வருணனும் வணங்கிய பெண்ணை ஒரு பாகம் உடையவனை நீங்கள்
இமவான் மகளோடு வணங்கி இரு வினைகளை நீக்குவீர் !
கருத்துரை:-
தனது வனவாச காலத்தில் தன் ஆற்றலை குரங்குகளின் அரசனான சுக்ரீவனுக்கு நிரூபிக்கும் பொருட்டு தனது வில்லில் பூட்டிய அம்பானது அங்குள்ள ஏழு மரங்களை ஒருசேர துளைத்து ஊடுருவிக் கொண்டு வரும்படி செலுத்திய நற்குணமுள்ள தலைவனாகிய இராம பிரானும், சமுத்திர ராஜனாகிய வருணனும் வணங்கி தொழுத, பெண்ணை ஒரு பாகமாக கொண்ட சிவனை நீங்கள் இமவான் மகளான உமையம்மையோடு சேர்த்து வணங்கி, உங்களுடைய நல்வினை, தீவினை எனும் இரண்டு வினைகளையும் நீக்குவீர்களாக!
திருத்தல பெருமை:-
சுவாமி - இராமநாதேச்சுரர்.
அம்பாள் - பர்வதவர்த்தினி.
தீர்த்தம் - அக்கினி தீர்த்தம் முதல் 64 தீர்த்தங்கள்.
விருட்சம் - வில்வம்.
வழிபட்டோர் – இராமர், அனுமான், நால்வர், அருணகிரிநாதர் மற்றும் அனேக அடியார்கள்.
நூல் - தேவாரம், திருப்புகழ், லிங்காட்சரமாலை.
பாடியவர்கள் – திருஞானசம்பந்தர், திருநாவுகரசர், அருணகிரிநாதர், ஆரணியடியார்க்கடியவன்.
வழிபடும் பலன் - குழந்தை பாக்கியம், தோஷ நிவர்த்தி, காரியசித்தி, பாவநிவர்த்தி, தல யாத்திரை, பித்ருக்கள் ஆசிர்வாதம்.