Posts

Showing posts from 2017

தீர்த்தகிரீச்சுரர் Theerthagireechurar

Image
சேர்த்த ஓர்குடமதில் குருதி நரம்பொடு கோர்த்த சுவருயிரை நச்சு வீரீலாகி லார்த்தபொருள் உமக்குத் தருமோ அருளை? தீர்த்தமாடீ ரும்மைதொடருந் தீவினை தீருமே !

அர்தநாரீச்சுரர் ArthaNareechurar

Image
கார்கண்டர் என்றேத் துஞ்சரா சரனை வார்சடையைச் சுற்றியவனைச் சொற்பே ரீவானை தார்நாயகனை நற்தமிழால் நெகிழ ஓத சீர்செல்வம் மனைமாட்சி அனைத்து மடைவீர்!

மகாலட்சுமீச்சுரர் MagaLatchumeechurar

Image
புகாததுஓர் ஒளி பிழம்பாகிய கிரண குகா கமலச் சுடர் மேல் இச்சை வைமீர் சுகா யனுட்டான ஞானமாம் மூலப் பொருளானானை சிகாமணியே! சிவமே! என்னீர் சேமம் பெறுவீர்!

ஐசுவரியேச்சுரர் Isuwariyechurar

Image
பூசுநீறுமோர் புனித யாறுமுடைய அரனே ! மாசு இலா தோர் சுத்த கூவிளச் செச்சை யேனே ! ஈசுவரனே ! அடியேன் வறுமை அகன்றிட நீ பேசு கவியொடருள் சகல ஐசுவரியங்களை !

திருஎரும்பீச்சுரர் ThiruErumbechurar

Image
கயவரை பார்த்தே எரித்த ஓம்காரணனே ! சுயபரஞ் சுடரே என்றேச் செப்பீரும் துயருரும் பகையுந் தீயஎலாம் நீங்கி உயரும் நும்வாழ்வு பெருகும் நிதியுமதியுமே !

திருஆதிநாதேச்சுரர் ThiruathiNathechurar

Image
உருவமுமோர் நான்காய் உறை ஓங்காரனை பருவங்களை சுற்றினானை பேச்சில்தேனை நாத சுருதியில் இருப்பானை ஆதிநாதனை சிவ கிருபை தருவானை கருதிதொழ விதியறுப்பீர்!

திருகச்சபேச்சுரர் ThiruKatchabechurar

Image
சுரும்பினோர் இசையினி லயிக்கு மரனேநீ கரும்பின் சுவையேப் போலச் சொற்பேறு சருவியச் சாத்திரமுஞ் சகல கலைகளுங் குருவாய் இருந்து போதிக்க மதியில்உறைக!

தேவசேனாபதீச்சுரர் DevaSenaPatheechurar

Image
சிந்திப்பர் தமக்கு இரங்கி வரமுந் தந்திடுஞ் சுத்த சிவமேச் செந்தீயே! பந்தமெனா ஓர்பற்றை நின்சேவடியில் வைக்க வந்திடுவாய் அடியன்முன் தேன் சொறிந்தே!

கல்யாணசுந்தரர் Kalyanasundarar

Image
வல்லானை வார் சடையானை விமலனை வீரனை சொல்லானை தேன் தமிழிலுறையுந்திரள் சுவை நல்மணந் தருந் தாயானானை நவின்றேத்த இல்லறந்தனிலின்பங்களெலாந் தருவான்!

நித்தியசுந்தரர் NithyaSundarar

Image
அத்தியையோர் அருட் பார்வையால் விரவிய சித்தனே! நிதமுமுருகி யுந்தனை பேசும் சத்திய சீலர்பால் திருக்கண் நோக்கும் உத்தமனே! எனிடர்தீர நினதருளை பொழிக!