வள்ளி மணாளன் அட்சரமாலை விரிவுரை ValliManalan Atcharamalai Virivurai
உ
எல்லாம்
சிவமயம்
வேலும் மயிலும் துணை
திருச்சிற்றம்பலம்
வள்ளி மணாளன் அட்சரமாலை
ராகம் : நாட்டை
பள்ளியிலுறையும் பிள்ளாய் பணிந்தேனுனையே வலமாய்
புள்ளி மயிலேறி புவனமதை நொடியில் வலமாய் வந்த
வள்ளி மணாளன் அட்சர மாலையையோதியுய்ந்திடயெமக்கு
அள்ளி தாரும் ஞானமும் சொல்லும் நல்லபடியே.
பள்ளியில் உறையும் பிள்ளாய் பணிந்தேன் உனையே வலமாய்
புள்ளி மயில் ஏறி புவனம் அதை நொடியில் வலமாய் வந்த
வள்ளி மணாளன் அட்சர மாலையை ஓதி உய்ந்திட எமக்கு
அள்ளி தாரும் ஞானமும் சொல்லும் நல்ல படியே.
(கருத்துரை)
கல்வி அறிவும் வித்தையும், கலைகளும் போதிக்கும் இடமாகிய
பள்ளியில் முதலாவதாக இருக்கும் பிள்ளையாராகிய விநாயகப் பெருமானே! உனைப்பணிந்து
வலமாய் வந்தேன். அன்று புள்ளி மயில் ஏறி உலகை ஓர் இமை பொழுதில் வலம் வந்த, வள்ளியின் மணவாளனாகிய முருகப் பெருமானின் தமிழ் எழுத்துக்களைக் கொண்டு
தொகுத்த, அட்சரமாலை என்னும் நூலைப் படித்து, பாடி, நற்கதி அடைந்திட எனக்கு ஞானமும் சொற்களும்
வாரி வழங்கிட அருளினைத் தருவாய் (என்றவாறு)
ராகம் : ஹம்ஸத்வனி
அகர உகர
மகர வடிவாகிய சோதியே வள்ளிமணாளனே!
சிகரயுருவாய் நின்ற சூரனை சேவலும் மயிலுமாய்
தகரயயிலை கடாவி வசமாக்கி தனி பேற்றை
யருளிய
புகர புங்கவ! காவாய் பொன்னொளிர்
ஆதியே. 1
அகர உகர மகர வடிவு ஆகிய சோதியே வள்ளிமணாளனே!
சிகர உருவாய் நின்ற சூரனை
சேவலும் மயிலுமாய்
தகர அயிலை கடாவி வசம் ஆக்கி தனி
பேற்றை அருளிய
புகர புங்கவ காவாய் பொன் ஒளிர்
ஆதியே.
ஆதி முதனாளிலரனார் நுதலிலுதித்த வள்ளிமணாளனே!
மேதினியிலிது தகுமோ
யெமை நோக்காதிருத்தல்
போதியாயினி யோர் சொற்புனிதா!
குமரா! நீயும்
சோதியாய் தோன்றி காவாயினி மூத்த
இபமுடனே. 2
ஆதி முதல் நாளில் அரனார் நுதலில் உதித்த வள்ளி மணாளனே!
மேதினியில்
இது தகுமோ எமை நோக்காது இருத்தல்
போதியாய் இனி ஓர் சொல் புனிதா!
குமரா! நீயும்
சோதியாய் தோன்றி காவாய் இனி
மூத்த இபம் உடனே.
இபமா மடந்தையை புணர்யெழில்மிகு வள்ளிமணாளனே!
யெமை கபடாகிய சூதும் வாதும்யென்றும்
நாடாது நலியாது
சுபஞான சொற்குமரா! சுடரொளிர்
சுப்பிரமணியா! யானு
மபயமுந்தன் பொற்பாதமே
தீராயெந்தன் ஈனமே. 3
இபமா மடந்தையை புணர் எழில் மிகு வள்ளி மணாளனே!
எமை கபடு ஆகியசூதும் வாதும் என்றும்
நாடாது நலியாது
சுப ஞான சொற் குமரா! சுடர்
ஒளிர் சுப்பிரமணியா ! யானும்
அபயம் உந்தன் பொற்பாதமே தீராய்
எந்தன் ஈனமே.
ஈனமிகுத்தப்
பிறவியினி சூழாதறுக்கும் வள்ளிமணாளனே!
ஏனமும் கொம்பும் விருப்போடு மணியு மீசன் மகனே!
தானமுந் தவமுமியற்றிடயடியேன் பாலென்றும்
ஊனமும் பிணியுமூடாது காவாயினி உய்யவே. 4
ஈன
மிகுத்தப் பிறவி இனி சூழாது அறுக்கும் வள்ளி மணாளனே!
ஏனமும் கொம்பும் விருப்போடு
அணியும் ஈசன் மகனே!
தான முந்தவமும் இயற்றிட அடியேன் பால்
என்றும்
ஊனமும் பிணியும் ஊடாது காவாய் இனி
உய்யவே.
உய்ய ஞானத்து சிவபோதமதை யருளாய் வள்ளிமணாளனே!
பொய்யுருவாகிய புலால்
குரம்பையைக் கொண்டடியேன்
மெய்யுருவென்று நம்பி மேதினியில் வீணேயுழன்
றய்யுறுவேனோ! நீயும்
புகுவாயெந்தன் ஊனத்தசைக்குள்ளே. 5
உய்ய
ஞானத்து சிவபோதம் அதை அருளாய் வள்ளி மணாளனே!
பொய் உருவு ஆகிய புலால் குரம்பையைக்
கொண்டு அடியேன்
மெய் உருவு என்று நம்பி மேதினியில் வீணே உழன்று
ஐ உறுவேனோ! நீயும் புகுவாய் எந்தன்
ஊனத் தசைக்கு உள்ளே.
ஊனத்தசைக்குள்ளேயொன்பது வாசலிட்ட வள்ளி மணாளனே!நீயும்
ஈனனெனையேனென்று கேட்காதிருப்பது தானேனோ? வினையா
லான மலத்தை யழிக்கவே யருளயுனாறிரு விழியால்
வானவர் தம்தலைவா! வருவாய் குருவாய் காவாய் எனையே. 6
ஊனத் தசைக்கு
உள்ளே ஒன்பது வாசல் இட்ட வள்ளிமணாளனே! நீயும்,
ஈனன் எனை ஏன் என்று கேட்காது இருப்பது தான் ஏனோ? வினையால்
ஆன மலத்தை அழிக்கவே அருளாய் உன் ஆறு இரு விழியால்
வானவர்தம் தலைவா! வருவாய் குருவாய் காவாய் எனையே.
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே!
தேவர்களின் தலைவா! தசையால் அமைந்துள்ள இவ்வுடலின் உள்ளே ஒன்பது வாசல்களை
பொருத்திப் படைத்தவனே! இழி செயல்களை புரிகின்ற என்னை ஏன் என்று கேட் காதிருப்பது
தான் ஏனோ? நீயே குருவாய் வந்து வினையால் ஆகிய மலத்தை உன்
பன்னிரண்டு விழிகளால் அழித்து என்னைக் காத்து அருள்வாய் (எ-று).
எனையடைந்த யூழ்வினைகளையறுப்பாய் வள்ளிமணாளனே!
புனைந்த மலர் மாலைகளை
பொன்னடிக்கே சாற்றிப் போற்றா
துனையே நாவாலிசைத்து வணங்கித் துதித்திடாது பூவுலகில்
வினையேனாதாரமாய் தேடியப் பொருள் தான் ஏது? 7
எனை அடைந்த ஊழ் வினைகளை அறுப்பாய் வள்ளி மணாளனே!
புனைந்த மலர்
மாலைகளை பொன் அடிக்கே சாற்றிப் போற்றுது
உனையே நாவால் இசைத்து வணங்கித் துதித்து
இடாது பூவுலகில்
வினையேன் ஆதாராமாய் தேடியப் பொருள் தான் ஏது?
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! தொடுத்த மலர் மாலைகளை பொன் போன்ற உன் திருவடிகளில் சாற்றி, போற்றி வழிபடாமல், உன்னை என் நாவால் பாடி வணங்கி துதிக்காமல், உலகில் பழமையாகிய வினைகளால் கட்டுப்பட்டு இருக்கும் நான், எனக்கு ஆதரவாகத் தேடிய பொருள் தான் எது? கூறுவாய், என்னை வந்து சேர்ந்த இவ்வினைகளை விலக்கி அருள்வாய் (எ-று)?
ஏது?
ஏது புத்தியெனக்கினி சொல்லிடாய் வள்ளிமணாளனே!
தீதில்லா தெளிந்த ஞான மோன
முத்திக்கு
ஈதுயுத்தி யென்றுன்னையேயறியாது தெரியாது
போது போக்கிய
புலையனேனையினியேனுங் காவாய் ஐயனே. 8
தீது இல்லா தெளிந்த ஞான மோன
முத்திக்கு
ஈது உத்தி என்று உன்னையே அறியாது
தெரியாது
போது போக்கிய புலையனேனை இனியேனும்
காவாய் ஐயனே.
ஐயுமுறு நோய் தீண்டாதகற்றியருள்வாய் வள்ளிமணாளனே!
பையுமுடன் வைத்த
பாம்பணிந்த பரமனை வணங்கி
கையுமிரு காலுமுன்றன் கழற்கே
தொண்டு புரிய
வையுமுன்திரு பொற்பாதங்களை
முடிமேல் ஒருநாளே. 9
ஐயும் உறு நோய் தீண்டாது அகற்றி அருள்வாய் வள்ளி மணாளனே!
பையும்
உடன் வைத்த பாம்பு அணிந்த பரமனை வணங்கி
கையும் இரு காலுங் உன்றன்
கழற்கே தொண்டு புரிய
வையும் உனது இரு பொற் பாதங்களை
முடிமேல் ஒரு நாளே.
ஒருபொழுதும் மறவேனுந்தன்
திருப்புகழைவள்ளிமணாளனே!
கருநோயறுத்து மெய்ப் பொருள் காணவேயென்
இருவினை
களைந்திணையடியைப் பற்றியுய்ந்திட
தருவாய் வாழ்வும்
ஞானமுமிசையும் நினைத்தபடி ஓதிடவே.10
ஒரு பொழுதும் மறவேன் உந்தன் திருப்புகழை வள்ளிமணாளனே!
கரு நோய் அறுத்து மெய்ப் பொருள்
காணவே என்
இரு வினை களைந்து இணை அடியை பற்றி
உய்ந்திட
தருவாய் வாழ்வும் ஞானமும் இசையும்
நினைத்தபடி ஓதிடவே.
ஓது முத்தமிழினுள்ளொளிக்குள்ளேயிருக்கும் வள்ளிமணாளனே!
யேதுருவில்லேதமும்
துன்பமுயெமையணுகாதிருக்க
மாதுருவாய் நின்ற மறை நாயகன்மைந்தாயென்றன்
தீதுரு
பிறவிக்கிருப்பாயென்றுமோர் ஒளடத மாகவே. 11
ஓது முத்தமிழின் உள் ஒளிக்கு உள்ளே இருக்கும் வள்ளிமணாளனே!
ஏது
உருவில் ஏதமும் துன்பமும் எமை அணுகாது இருக்க
மாது உருவாய் நின்ற மறை நாயகன்
மைந்தா என்றன்
தீது உரு பிறவிக்கு இருப்பாய்
என்றும் ஓர் ஒளடதமாகவே.
ஒளடதமாய் துணையாயடியேனுக்கிருக்கவே வள்ளிமணாளனே!
எவ்வகையில்
யானும்யிப்புவியிலுய்வேனெனயியம்பாய்
வெவ்வினைகளை வேறாக்கி விரும்பிய
படியேயுந்தனாமங்களை
செவ்வையாய் புகன்றிடயருளாயினியுதியாதிருக்க ஓர்கருவிலே. 12
ஒளடதமாய்
துணையாய் அடியேனுக்கு இருக்கவே வள்ளிமணாளனே!
எவ்வகையில் யானும் இப்புவியில்
உய்வேன் என இயம்பாய்
வெவ் வினைகளை வேறு ஆக்கி விரும்பியபடியே உந்தன் நாமங்களை
செவ்வையாய் புகன்றிட அருளாய்
இனியும் உதியாதிருக்க ஓர் கருவிலே.
துணையாகவும், யான் இனியும் பிறப்பு எனும் ஒரு கருவிலே தோன்றாமல்
இருக்கவும், துன்பம் அளிக்கும் என் வினைகளை வேறு படுத்தி உன்
நாமங்களைச் சிறப்பாகக் கூறவும், நீயே ஒரு மருந்தாக இருந்து, அடியேன்
எந்த வகையில் ஈடேறுவேன் என்பதையும் கூறி அருள்வாய் (எ-று)
ராகம் : சண்முகப்பிரியா
கருவாய் தாயுதிரத்திலுதித்துருவாய் வளர்ந்து வள்ளிமணாளனே!
குருவாயுளமதிலுனையே யிருத்தி வழிபடாது முன்ன
மிருவினையால் கட்டுண்டு மாயையில்
சிக்கியயான்மாவை
முருகாய் மணக்க செய்யாதிருப்பதென்ன காரணமோ? 13
கருவாய் தாய் உதிரத்தில்
உதித்து உருவாய் வளர்ந்து வள்ளிமணாளனே!
குருவாய் உளம் அதில் உனையே இருத்தி வழிபடாது முன்னம்
இரு வினையால் கட்டுண்டு மாயையில் சிக்கிய ஆன்மாவை
முருகாய் மணக்க செய்யாது இருப்பது என்ன காரணமோ?
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! கருவாக தாயின் உடலில் தோன்றி
ஆளாக வளர்ந்தயான், உனை குருவாக என் உளமதில் இருத்தி தொழாமல், முன் பிறப்பில் செய்த
வினைகளால் கட்டுப்பட்டு மாயை எனும் துன்பமதில் அகப்பட்டு அலையும் இந்த ஆன்மாவை
அழகாக மணம் வீசும்படி செய்யாமல் இருப்பது தான் என்ன காரணம்? கூறாய் (எ-று)
காரணமதாக வந்து யானிப்புவிமீதில் வள்ளிமணாளனே!
பூரணமாகிய
மெய்ப்பொருளையுணர்ந்து ய்ந்திடயோர்
ஆரணம்
கருணையோடென்றெனக்குபதேசிக்க வருவாய்
வாரண முகத்தோன் தம்பியே
வரமருளும் கிரி யோனே. 14
காரணம் அதாக வந்து யான் இப்புவி மீதில் வள்ளி மணாளனே!
பூரணம் ஆகிய
மெய்ப் பொருளை உணர்ந்து உய்ந்திட ஓர்
ஆரணம் கருணையோடு என்று எனக்கு
உபதேசிக்க வருவாய்
வாரண முகத்தோன் தம்பியே வரம்
அருளும் கிரியோனே.
கிரிவலம்
வருமடியார்க்கு வரங்களருளும் வள்ளிமணாளனே!
எரிவாய் நரகக்குழியில் யானும் வீழாதீடேறவும்
தெரியாது செய்த பிழைகளை பொறுத்து
தினமுனை பாடிடவும்
பரிவாயருளாய் ஞானமும் போதமும் நாதமும் கீதமுமே. 15
கிரிவலம்
வரும் அடியார்க்கு வரங்கள் அருளும் வள்ளி மணாளனே!
எரிவாய் நரக குழியில் யானும்
வீழாது ஈடு ஏறவும்
தெரியாது செய்த பிழைகளை பொறுத்து தினமும் உனை பாடி|டவும்
பரிவாய் அருளாய் ஞானமும் போதமும் நாதமும் கீதமுமே.
கீத நாத
விநோத பெருமானாகிய வள்ளிமணாளனே!
வாத பித்த நோய் கலந்த
வாழ்வுறாதுயுந்தன்
பாத தாமரையையடியேன் மனதில் சிந்தித்து
தொழுதிட
வேத கற்பக சொரூபமே வினையேனுக்கு
யருளாய் குமரனே!. 16
கீத நாத
விநோத பெருமான் ஆகிய வள்ளிமணாளனே!
வாத பித்த நோய் கலந்த வாழ்வு உருது
உந்தன்
பாத
தாமரையை அடியேன் மனதில்
சிந்தித்து தொழுதிட
வேத கற்பக சொரூபமே வினையேனுக்கு
அருளாய் குமரனே!
குமர குருபர முருக சரவணபவனாகிய வள்ளிமணாளனே!
எமராசன் விட்ட கடையேடுயடியேனை சாரும் போழ்து
இமராசன் புதல்வியளித்த வேலாயுதம் காக்குமென்றே
அமராரணைய நீயும் தோன்றி கருணையுடன் கூறுமே. 17
.குமர குருபர முருக சரவணபவன் ஆகிய வள்ளிமணாளனே!
எமராசன் விட்ட கடை ஏடு அடியேனை சாரும் போழ்து
இமராசன் புதல்வி அளித்த வேல் ஆயுதம் காக்கும் என்றே
அமரார் அணைய நீயும் தோன்றி கருணையுடன் கூறுமே.
(க-ரை) குமரனே! குருபரனே! முருகனே! சரவணபவனே! வள்ளிக்கு
மணவாளனே! யமன் விடுகின்ற பாசம் எனும் முடிவாகிய ஏடு
அடியேனை வந்து சேரும் போது, மலைகளுக்கு அரசனான இமராஜன்
புதல்வியாகிய உமையம்மை அளித்த சக்தி வேலாயுதம் காத்து
இரட்சிக்கும் என்று தேவர்கள் சூழ என் முன் தோன்றி கருணையுடன்
கூறுவாயாக (எ-று
கூறுமாறு கூறிய கவிகளனைத்தும் குமரா வள்ளிமணாளனே!
ஊறுமாறு நாவினில் பிழையற சரளமாயோதிடவேயளிக்க
ஏறுமாறு மயிலினில் வேலொடும் யானும் வேண்டதுயர்
ஆறுமாறு யருளாயினி தவிக்காது தூண்டிற் கெண்டையாகவே. 18
ஊறுமாறு நாவினில் பிழை அற சரளமாய் ஓதிடவே அளிக்க
ஏறு மாறு மயிலினில் வேலொடும் யானும் வேண்ட துயர்
ஆறு மாறு அருளாய் இனியும் தவிக்காமலே தூண்டிற் கெண்டையாகவே.
இராகம் : இந்தோளம்
கெண்டையங் கண்ணாள் ஒரு சேரணைத்த வள்ளிமணாளனே!
வண்டினம் பாடும்
வடிவழகாயுனைப் பாடாது நாடாது
பண்டையம் பழவினையால் கட்டுண்டு
மதிமயங்கினேனே நின்
தண்டையந்தாளிணைக்குதவா வெறுங் கேதகை யாகவே. 19
வண்டினம் பாடும் வடிவழகா! உனைப் பாடாது நாடாது
பண்டையம் பழவினையால் கட்டுண்டு மதி மயங்கினேனே நின்
தண்டையந் தாள் இணைக்கு உதவா வெறுங் கேதகையாகவே.
கேதகைய
பூமுடித்தோர் மயலில் சிக்காது வள்ளிமணாளனே!
ஏதகையதோர்சொலுபதேசித்தருளாயினி
வேதகையும் விளங்கிய சின்முத்திரையும்
கொண்ட பரமனின்
பாதகையும் பரவிய ஞானபலமும் திண்ணமாய் கைத்தருணமே. 20
கேதகைய
பூமுடித்த ஓர் மயலில் சிக்காது வள்ளிமணாளனே!
ஏதகையது ஓர் சொல் உபதேசித்து அருளாய்
இனி
வேத கையும் விளங்கிய சின்
முத்திரையுங் கொண்ட பரமனின்
பாதகையும் பரவிய ஞானமும் பலமும் திண்ணமாய் கைத்தருணமே.
கைத்தருணசோதியத்திமுக
வேதனுக்கிளைய வள்ளிமணாளனே!
தைத்தயயிலால் தவங்கள் பலவியற்றிய யசுரனை
நைத்து நற்பேறு நல்கிய
வரையொணாபாதங்களை யென்றும்
வைத்துயுளத்திலுருகிட வாராது நீங்கும் கொடிய னவே. 21
கைத்தருண
சோதி அத்திமுக வேதனுக்கு இளையவள்ளிமணாளனே!
தைத்து அயிலால் தவங்கள் பல இயற்றிய
அசுரனை
நைத்து நற்பேறு நல்கிய வரை ஒணா பாதங்களை என்றும்
வைத்து உளத்தில் உருகிட வாராது நீங்கும் கொடியனவே.
(க-ரை) வேதங்களுக்கு நிகரான ஒளி பொருந்திய துதிக்கையைத் தன்னிடத்தே கொண்ட யானைமுகப் பெருமானாகிய விநாயகனுக்கு இளையவனான வள்ளி மணவாளனே! அறிய பல தவங்களை இயற்றிய சூர பதுமனை வேல் கொண்டு குத்தி, இரு கூறாய்ப் பிளந்து, நல்ல பேற்றினை அருளிய சொல்லுதற்கு இயலாத அவனது திருப்பாதங்களை என்றும் உள்ளத்தில் புகுத்தி நினைந்து உருகினால் கொடியது என்று சொல்லக் கூடியவை அனைத்தும் நீங்கி விடும். (எ-று)
கோடியமறலியுமவனது கட்கமும் வருமுன் வள்ளிமணாளனே!
பிடிநடையாள் பேருவகையோடு பெயர்த்தளித்திட்ட
இடியு மின்னலும் தோற்குமெனவே வேலாயுத மெடுத்திட்டு
கடிநகையோடு காத்திட வாரும் கல்யாணி பெற்ற கோமளமே! 22
கொடிய மறலியும் அவனது கட்கமும் வருமுன் வள்ளி மணாளனே! பிடி நடையாள் பேர் உவகை யோடு பெயர்த்து !அளித்து இட்ட
இடியும் மின்னலும் தோற்கும்! எனவே வேல் ஆயுதம் எடுத்து இட்டு
கடி நகையோடு காத்திட வாரும் கல்யாணி பெற்ற கோமளமே..
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! என்றும் கல்யாண சொரூபம் நிறைந்த உமையம்மை பெற்ற கோமளமே! கொடியவனான, யமனும், அவனது கைவாளும் என் முன்னே வருமுன் பெண் யானைக்கு நிகரான நடையினை உடைய பார்வதியாள் பெரு மகிழ்ச்சி பொங்க எடுத்து அளித்து அருளிய இடியும் தோற்கும்படியான ஒலியும் மின்னலும் மங்கும்படியான ஒளியும் உடைய வேலாயுதத்தை கையினில் எடுத்து புன்னகைத் தவழ எனை காத்திட வாரும். (எ-று)
கோமள பரிமள சுகந்தமணியும் மார்பனே! வள்ளிமணாளனே!
சோமனொடருக்கன் முதலாய கோள்களும் தன்நிலை மாறிட
தூம மொடு நெய் தீபமுமிட்டிணையிலாயுந்தன்
நாம மொடு பாடிடயருளாய் பதிகள் எங்கெங்கிலுமே. 23
கோமள
பரிமள சுகந்தம் அணியும் மார்பனே வள்ளிமணாளனே!
சோமனொடு அருக்கன் முதலாய கோள்களும்
தன் நிலை மாறிட
தூமமொடு நெய் தீபமும்
இட்டு இணைஇலா உந்தன்
நாமமொடு பாடிட
அருளாய் பதிகள் எங்கு எங்கிலுமே.
(க-ரை)
அழகும், மணமும் கூடிய சந்தனம், அர்த்தர்,போன்றவைகளை தன் மார்பினில் அணிந்த வள்ளிக்கு மணவாளனே! தூபம் நெய்தீபம் முதலியவைகளை வைத்து உந்தன் நாமங்களை நீ வாழும் பதிகள் தோறும் சென்று தொழுதிடவும், பாடிடவும் சூரியன் சந்திரன் முதலான ஒன்பது கிரஹங்களும் என்னை வருத்தாமல் தன் நிலை மாறிடவும் அருள்வாய் (எ-று )
எங்கேனு மொருவர் வந்திரக்கும் வேளையில் வள்ளிமணாளனே!
அங்கே யவர்க்கீந்திட யருளாயின் முகமொடு பொருளும்
பங்கேருகனை புடைத்து படைப்பை நடத்திய பிரணவக்குமரா!
சங்கே முழங்கிய சாரங்கன் மருகா! கூறினேன் சரணங்களே! 24

சங்கே முழங்கிய சாரங்கன் மருகா! கூறினேன் சரணங்களே!

எங்கேனும் ஒருவர் வந்து இரக்கும் வேளையில் வள்ளிமணாளனே!
அங்கே
அவர்க்கு ஈந்திட அருளாய் இன்முகமொடு பொருளும்
பங்கேருகனை புடைத்து படைப்பை நடத்திய
பிரணவக் குமரா!
சங்கே
முழங்கிய சாரங்கன் மருகா ! கூறினேன் சரணங்களே!
ராகம் :
பாகே ஸ்ரீ
சரணகமலாலயத்தை
சிந்தையிலிருத்திட வள்ளிமணாளனே!
பரகருணைபெருவாழ்வை பரிவாகவே யெமக்கு கொடுத்து
தரணியில் புகழ்பெற்ற நின் திருத்தலங்களின் மகிமை பாடிட
வரமாயருள்வாய் நயமுடன் சேர்த்து நற்சாலமுமே. 25
சரண கமல ஆலயத்தை சிந்தையில் இருத்திட வள்ளி மணாளனே!
பரகருணை பெரு
வாழ்வை பரிவாகவே எமக்கு கொடுத்து
தரணியில் புகழ் பெற்ற நின் திருத்தலங்களின் மகிமை
பாடிட
வரமாய் அருள்வாய் நயமுடன் சேர்த்து நற் சாலமுமே.
சால நெடுநாளலைந்துன்னருளைப் பெறவேவள்ளிமணாளனே!
காலமும் வெகுவாய்
கழிந்தே போனதே கார்த்திகேயா! யறியேனே
பாலகனாயூமைக்கருள் புரிந்த பரமன்மைந்தாதினம்
ஓலமிட்டேனுனையே நினைந்து தீரா யென்னுடனாகிய சினமே. 26
சால நெடுநாள் அலைந்து உன் அருளைப் பெறவே வள்ளி மணாளனே!
காலமும்
வெகுவாய் கழிந்தே போனதே கார்த்திகேயா! அறியேனே
பாலகனாய் ஊமைக்கு அருள் புரிந்த
பரமன் மைந்தா! தினம்
ஓலம்
இட்டேன் உனையே நினைந்து தீராய் என் உடன் ஆகிய சினமே.
கனத்ததெத்தனை கபடுகளொடிருமாப்புமிழிநோயு சேர்த்து
எனத்துளெத்தனை வகையாய் புக்கிடினும் நில்லா தொழிய
மனத்துளுன்னை புகுத்திடவேயெழுவாய் அணி சீரெனவே. 27
சினத்தது எத்தனை இச்சிறு மணி உடல் தான் வள்ளி மணாளனே!
கனத்தது
எத்தனை கபடுகளொடு இருமாப்பும் இழி நோயும் சேர்த்து
எனத்துள் எத்தனை வகையாய்
புக்கிடினும் நில்லாது ஒழிய
மனத்துள் உன்னை புகுத்திடவே எழுவாய் அணிசீர் எனவே.
சீர்சிறக்கு மேனி பசேல் பசேலென்றிடவே
பார் வியக்க சோதி பிழம்பாய்
தாமரையிலுதித்து
போர் மிகுத்த சூரனோடு
பொருதி பேற்றினை யளித்த
கார் வண்ணன்
மருகா! வள்ளிமணாளனே! வினைகளை சுட்டிடுமே. 28
சீர் சிறக்கு மேனி பசேல் பசேல் என்றிடவே
பார்
வியக்க சோதி பிழம்பாய் தாமரையில் உதித்து
போர் மிகுத்த
சூரனோடு பொருதி பேற்றினை அளித்த
கார் வண்ணன் மருகா!
வள்ளிமணாளனே! வினைகளை சுட்டிடுமே.
சுட்டது போலாசையை விடாது வளர்த்து வள்ளிமணாளனே!
பட்டது போதுமய்யாயினி படமுடியாது புவியினி
லிட்டமுடனிட்டது
பிடியளவேயாயினும் யேற்று
பெட்டகமாய் திகழ
பிரியமுடனுந்தன் கிருபையைச் சூழுமே. 29
சுட்டது போல் ஆசையை விடாது வளர்த்து வள்ளிமணாளனே!
பட்டது போதும் ஐய்யா இனி
படமுடியாது புவியினில்
இட்டமுடன் இட்டது பிடி அளவே ஆயினும் ஏற்று
பெட்டகமாய் திகழ
பிரியமுடன் உந்தன் கிருபையைச் சூழுமே.
சூழும் வினைகட்கேற்பறொடரும் வல்வினைகளை வள்ளிமணாளனே!
வீழும்படிச்
செய்வாய் விரை மாமலர் பாதங் கொண்டு
பாழும் பிறவி படுமாயை தான்யென்
செயுமே
வாழும் நெறியும் பின் முறையாய் வந்து
செனித்திடுமே. 30
சூழும் வினைகட்கு ஏற்ப தொடரும் வல்வினைகளை வள்ளி மணாளனே!
வீழும்படிச் செய்வாய் விரை மாமலர் பாதங் கொண்டு
பாழும் பிறவி படு மாயை தான் என்
செயுமே
வாழும்
நெறியும் பின் முறையாய் வந்து செனித்திடுமே.
செனித்திடுஞ் சகலயுயிர்கட்குச் சரணாகதியாய் வள்ளிமணாளனே!
இனித்திடுமினிய வடிவழகும் வரமருளும் பன்னிரு கரங்களும்
குனித்திடுந் திருநீறு தாங்கிய நுதலும் குமிழ் மென்னகையும்
தனித்திடும் போது நல்குமே பெருங்கருணையும் சேமமுமே. 31
செனித்திடுஞ் சகல உயிர்கட்கு சரணாகதியாய் வள்ளி
மணாளனே!
இனித்திடும் இனிய வடிவு அழகும் வரம் அருளும்
பன்னிரு கரங்களும்
குனித்திடுந் திருநீறு தாங்கிய நுதலும் குமிழ்
மென் நகையும்
தனித்திடும் போது நல்குமே பெருங் கருணையும்
சேமமுமே.
(க-ரை)
அனைத்தும் இழந்து, ஆதரவு அற்று தனித்திடும் போது, உலகில் தோன்றிடும்
சகல உயிர்களுக்கும் சரணாகதியாய் இருக்கும் வள்ளி மணாளனது, தித்திக்கும்
இனிய வடிவழகும், வரமருளும் பன்னிருகைகளும், வளைந்த திருவெண்ணீறு அணிந்த நெற்றியும், மலர் இதழென
ஒட்டிய புன்னகையும் தருமே நிறைந்த கருணையோடு நலன்கள் அனைத்தையும். (எ-று )
சேம கோமள பொற்பாதங்களை நினைந்து வள்ளிமணாளனே!
தாமமொடு தீபமுமிட்டுத் தவறாது வணங்கிடவேயுந்தன்
நாமமு மெந்தனுளேயென்று மகலாதிருத்திடவே
சோம சுந்தரேச்வரர் மைந்தா! பகர்வாயோர் சொல்லே. 32
சேம கோமள பொற் பாதங்களை நினைந்து வள்ளி மணாளனே!
தாமமொடு தீபமும் இட்டுத் தவருது வணங்கிடவே உந்தன்
நாமமும் எந்தன் உள்ளே என்றும் அகலாது இருத்திடவே
சோம சுந்தரேச்வரர் மைந்தா! பகர்வாய் ஓர் சொல்லே.
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! சோம சுந்தரேச்வரர் மைந்தனே! எல்லா நலன்களையும் தரக்கூடிய
உனது சுந்தர மிக்க பொன்னை யொத்த நின் திருப்பாதங்களை நினைந்து மலர்களொடு தீபமும் தவறாமல்
வைத்து தொழுதிடவும், என்னுள்ளே உந்தன் நாமம் என்றும் நீங்காது இருத்திடவும் கூறாய் ஒரு சொல்லே (எ-று )
சொற்பிழை வராமலுன்றன் திருப்புகழைவள்ளிமணாளனே!
கற்பவர் தமை கருணையோடு நாடி நல்லருளே புரிவாய்
நற் தவத்தவர் தொழும் நற்பயனே! நல்மருந்தே! நல்முத்தே!
அற்பனின் பிழை பொறுத்தருளாயானந்த சோதியே! 33
சொற் பிழை வராமல் உன்றன் திருப்புகழை வள்ளிமணாளனே!
கற்பவர் தமை கருணையோடு நாடி நல் அருளே புரிவாய்
நற்தவத்தவர் தொழும் நற்பயனே! நல் மருந்தே! நல்முத்தே!
அற்பனின் பிழை பொறுத்து அருளாய் ஆனந்த சோதியே!
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! ஆனந்தமயமான சோதியின் வடிவே! நல்ல தவத்தைச்
செய்தவர்கள் வணங்கும் நல்ல பயனாய் இருப்பவனே! நல்ல மருந்தே, நல்ல முத்தைப்
போன்றவனே! சொற்களின் பிழை இல்லாமல் உந்தன் திருப்புகழை கற்பவர்களைக் கருணையுடன்
தேடிச் சென்று நல்ல அருளைத் தருவாய். அதோடு இந்த அற்பனுக்கும் உனது அருள் புரிவாய்
(எ-று)
அஞ்சுவித பூதமு மதன் செயல்களுமுணர்ந்து வள்ளிமணாளனே!
நெஞ்சமதில் வேண்டியதை புகுத்தி வேண்டாததை விலக்கி
தஞ்ச மடைந்தேனுன்னையே நம்பி தயவுடனேயருளாய்
கஞ்ச மலர்ப் பாதங்களையினி வாராமல் இடரே. 36
அஞ்சுவித பூதமும் அதன் செயல்களும் உணர்ந்து வள்ளி மணாளனே!நெஞ்சம் அதில் வேண்டி யதை புகுத்தி வேண்டாத அதை விலக்கி
தஞ்சம் அடைந்தேன் உன்னையே நம்பி தயவுடனே அருளாய்
கஞ்ச மலர்ப் பாதங்களை இனி வாராமல் இடரே.
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! ஐம்பொறிகளின் செயல்பாடுகளை அறிந்து உள்ளத்தில் தேவையானவற்றைச்
செயல் படுத்தி,
தேவை இல்லாதவற்றை விலக்கி, உன்னையே நம்பி தஞ்சம் அடைந்தேன். இனி
அடியேனுக்கு உந்தன் மணம் பொருந்திய மலர்களுக்கு ஒப்பான திருப்பாதங்களை அருளித்
துயரங்களை நீக்குவாய் (எ-று)
அஞ்சுவித பூதமு மதன் செயல்களுமுணர்ந்து வள்ளிமணாளனே!
நெஞ்சமதில் வேண்டியதை புகுத்தி வேண்டாததை விலக்கி
தஞ்ச மடைந்தேனுன்னையே நம்பி தயவுடனேயருளாய்
கஞ்ச மலர்ப் பாதங்களையினி வாராமல் இடரே. 36
அஞ்சுவித பூதமும் அதன் செயல்களும் உணர்ந்து வள்ளி மணாளனே!நெஞ்சம் அதில் வேண்டி யதை புகுத்தி வேண்டாத அதை விலக்கி
தஞ்சம் அடைந்தேன் உன்னையே நம்பி தயவுடனே அருளாய்
கஞ்ச மலர்ப் பாதங்களை இனி வாராமல் இடரே.
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! ஐம்பொறிகளின் செயல்பாடுகளை அறிந்து உள்ளத்தில் தேவையானவற்றைச் செயல் படுத்தி, தேவை இல்லாதவற்றை விலக்கி, உன்னையே நம்பி தஞ்சம் அடைந்தேன். இனி அடியேனுக்கு உந்தன் மணம் பொருந்திய மலர்களுக்கு ஒப்பான திருப்பாதங்களை அருளித் துயரங்களை நீக்குவாய் (எ-று)
தொடர் பிறவித் தீயில் சிக்கி வேகாது தடுத்து
படர் முல்லையாயுந்தன் பாதார விந்தங்களில் படர
சுடர்வேலவா! கருணையோடருளாய் தீமைகள் நாடாமலே.37
இடர் மொய்த்து இருவினையோடு இக்கடம் வள்ளி மணாளனே!
தொடர் பிறவித் தீயில் சிக்கி வேகாது தடுத்து
படர் முல்லையாய் உந்தன் பாத ஆதார அரவிந்தங்களில் படர
சுடர் வேலவா! கருணையோடு அருளாய் தீமைகள் என்றும் நாடாமலே
தொடர் பிறவித் தீயில் சிக்கி வேகாது தடுத்து
படர் முல்லையாய் உந்தன் பாத ஆதார அரவிந்தங்களில் படர
சுடர் வேலவா! கருணையோடு அருளாய் தீமைகள் என்றும் நாடாமலே
நாடா பிறப்பை பெற்று வள்ளிமணாளனைவழிப்பட்டுய்யாது
ஓடாய் தேய்ந்து யாக்கையு மழியு முன்னரே நீயும்
பாடாய் நாவே! பரவசங் கொண்டுயானந்தமாய் யாடி
சூடாயவனிருபாதங்களை முடிமேல் பூரணவடிவாகவே! 38
ஓடாய் தேய்ந்து யாக்கையு மழியு முன்னரே நீயும்
பாடாய் நாவே! பரவசங் கொண்டுயானந்தமாய் யாடி
சூடாயவனிருபாதங்களை முடிமேல் பூரணவடிவாகவே! 38
ஓடாய் தேய்ந்து ஆக்கையும் அழியும் முன்னரே நீயும்
பாடாய் நாவே! பரவசங் கொண்டு ஆனந்தமாய் ஆடி
சூடாய் அவன் இரு பாதங்களை முடிமேல் பூரண வடிவாகவே!
வள்ளி மணாளனை வழிப்பட்டு நல்ல பேற்றினை அடையாமல் நீ , தேய்ந்து போகும் மண் ஒட்டைப் போல் அழிவதற்கு முன் முழுமையான வடிவத்துடன் கூடிய அவனது திருப்பாதங்களை முடிமேல் சூடிக் கொண்டு ஆடியும்,
நாவே! நீயும் பரவசங்கொண்டு பாடியும் தொழுவாய் (எ-று)
வடிவது காட்டி வள்ளியை வயப்படுத்தி மணந்த வள்ளிமணாளனே!
கொடியது வாராது கூர்வேல் கொண்டு குறித்த நேரத்தில்
பொடியது யாக்கி கவியினைத் தரவேயவனியில் முழங்கும்
இடியது போல சிகண்டியிலேறி வாராய் ஏடு களுடனே! 39
கொடியது வாராது கூர்வேல் கொண்டு குறித்த நேரத்தில்
பொடியது யாக்கி கவியினைத் தரவேயவனியில் முழங்கும்
இடியது போல சிகண்டியிலேறி வாராய் ஏடு களுடனே! 39
வடிவது காட்டி வள்ளியை வயப்படுத்தி மணந்த வள்ளி மணாளனே!
கொடியது வாராது கூர்வேல் கொண்டு குறித்த நேரத்தில்
பொடி அது ஆக்கி கவி இனைத் தரவே அவனியில் முழங்கும்
இடி அது போல சிகண்டியில் ஏறி வாராய் ஏடுகள் உடனே!
கொடியது வாராது கூர்வேல் கொண்டு குறித்த நேரத்தில்
பொடி அது ஆக்கி கவி இனைத் தரவே அவனியில் முழங்கும்
இடி அது போல சிகண்டியில் ஏறி வாராய் ஏடுகள் உடனே!
மணந்து கொண்ட வள்ளிக்கு மணவாளனே! கொடியன என்று சொல்ல
கூடியவைகள் எனை அணுகாமல் மயிலினில் ஏறி உனது கூரான வேலால்
பொடி செய்தும், கவிகளைத் தருவதற்கு ஏடுகளைக் கொண்டும்,
இடி போல் முழங்கி இவ்வுலகினில் வருவாய் (எ-று)
கேடுற்று கேள்வியுமற்று கீழ் பிறப்புற்று வீணே
காடுற்று கருகாது கான மயில் வாகனா! யுந்தன்
வீடுற்றிருக்கருளாய் வினையேதும் அடையாதே. 40
ஏடுமலர் உற்று இணைஅடிகளை நித்தம் தொழாது வள்ளிமணாளனே!
கேடு உற்று கேள்வியும் அற்று கீழ் பிறப்பு உற்று வீணே
காடு உற்று கருகாது கான மயில் வாகனா! உந்தன்
வீடு உற்று இருக்க அருளாய் விணை ஏதும் அடையாதே.
கேடு உற்று கேள்வியும் அற்று கீழ் பிறப்பு உற்று வீணே
காடு உற்று கருகாது கான மயில் வாகனா! உந்தன்
வீடு உற்று இருக்க அருளாய் விணை ஏதும் அடையாதே.
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! காட்டில் வாழும் மயில்மேல் அமர்ந்தவனே!
இதழ்களுடைய மலர்கள் போன்று சேர்ந்துள்ள உனது இரு பாதங்களை தினமும், தொழாமல், கீழான பிறப்பு எய்தி, துன்பங்களை அடைந்து, கேட்பார் அற்று, இடுகாட்டை அடைந்து, தீயினுள்ளே (இவ்வுடம்பு) கருகிப்போகாமல், வினைகளை விலக்கி, உந்தன் முத்தி வீடாகிய திருவடிகளைத் தருவாய் (எ-று)
வெந்து போகாமல் தடுத்து, வரும் தீமைகள் என்றும் அணுகாமல் படர்ந்து,
இருக்கும் முல்லை மலருக்கும், தாமரை மலருக்கும் நிகரான உனது
திருப்பாதங்களில் யான் படருவதற்கு (அ) இருப்பதற்கு கருணை யோடு அருள்வாய் (எ-று)
இணங்கித் தட்பொடு இளந்தாமரை மொட்டுக்களை வள்ளிமணாளனே! வணங்கி உந்தன் திருப் பாதங்களுக்கு சமர்ப்பித்தேன் ஏற்று அருளாய் அணங்கொடு அமரர்கள் சுழ வலம் வருவோனே! எமை நற் குணங்களொடு தூயவன் ஆக்கி வினைகளைப் போக்காய் காணாமலே.
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! இரு தேவிமார்கள் சூழ தேவர்களோடு வலமாக வருபவனே! ஒன்றோடு ஒன்று இதழ்கள் சேர்ந்து குளிர்ந்து பூக்குந் தருவாயில் உள்ள தாமரை மலர்களை உந்தன் திருப்பாதங்களுக்கு சமர்ப்பித்தேன். அதை கருணையுடன் ஏற்று, என்னை நல்ல குணங்களோடு தூயவனாகச் செய்து, என் வினைகளை விலக்கி தெரியாமல் போகும்படி செய்வாய் (எ-று)
காணாத தூரமதை கடக்கவே வள்ளிமணாளனே! யேனோ வீணாகயுயிருமுடலும் வழியே தெரியாதலைகிறதே
பூணாத பூடணமதை பூணவேயடியேனுக் கருளாய்!
சோணாடீசன் புதல்வா! சொன்னேன் கவிகளை அணியாகவே! 44
காணாத தூரம் அதை கடக்கவே வள்ளிமணாளனே! ஏனோ
வீணாக உயிரும் உடலும் வழியே தெரியாது அலைகிறதே
பூணாத பூடணம் அதை பூணவே அடியேனுக்கு அருளாய்!
சோணாடு ஈசன் புதல்வா! சொன்னேன் கவிகளை அணியாகவே!
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! திருவருணையில் வாழும் ஈசன் புதல்வனே! கண்ணுக்குத் தெரியாத தூரமதைக் கடந்து செல்வதற்கு வீணாக இவ்வுடலும், உயிரும் வழி தெரியாமல் அலைகிறதே! எளிதில் அணிந்து கொள்ள முடியாத ஆபரணமாகிய உனது திருவடிகளெனும் ஆபரணமதை அடியேன் தலையில் சூடி அணிந்து கொள்வதற்கு அருள்வாய் (எ-று)
அணி செவ்வியர்யறுவரயணைப்பில் தவழ்ந்து வளர்ந்து
பணியணை மீது துயிலும் பாற்கடல் பரந்தாமன் புதல்வியரை மணியோடிழையுமரகதமாய் மணந்த வள்ளிமணாளனே! யடியேன் பிணிகளை நீக்கி யருளாயுந்தனிணையிலா இணை களையே! 45
அணி செவ்வியர் அறுவர் அணைப்பில் தவழ்ந்து வளர்ந்து
பணியணை மீது துயிலும் பாற்கடல் பரந்தாமன் புதல்வியரை
மணியோடு இழையும் மரகதமாய் மணந்த வள்ளிமணாளனே!அடியேன் பிணிகளை நீக்கி அருளாய் உந்தன் இணையிலா இணைகளையே!
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! அழகில் செம்மை (அ) செழுமை பெற்ற கார்த்திகை மாதர்கள் அறுவரின் அணைப்பில் தவழ்ந்து வளர்ந்து, திருபாற்க்கடலில் பாம்பாகிய ஆதிசேடன் மீது படுத்து உறங்கும் பரந்தாமனாகிய திருமாலின் புதல்விகளை, ஒன்றோடு ஒன்றாகச் சேர்ந்து ஒளி வீசும் முத்துமணியும், மரகதமும் போல மணந்தவனே! அடியேன் நோய்களை நீக்கி அருள்வாய் உந்தன் ஒப்பு நோக்குவதற்கு முடியாத இரு பாதங்களாலே (எ-று)
இணையதில் மனதை யிரவும் பகலும் செலுத்து மடியார்களை அணைந்தன்பால் வள்ளிமணாளனையுயிருமுடலுமொன்றாய் பிணைந்து தொழுதிடஅவனது வேலும் மயிலுமெங்கும்
துணையாய் நிற்குமே! காணலாமே காணொணாததையே! 46
இணை அதில் இரவும் பகலும் செலுத்தும் அடியார்களை
அணைந்து அன்பால் வள்ளிமணாளனை உயிரும் உடலும் ஒன்றாய் பிணைந்து தொழுதிட அவனது வேலும் மயிலும் எங்கும்
துணையாய் நிற்குமே! காணலாமே காண ஒணாதது அதையே!
(க-ரை) இரவும் பகலும் வள்ளி மணாளனின் திருவடிகளில் மனதைச் செலுத்தும், அவனது அடியார்களை நாடிச்சென்று, அன்புடன் அவர் களோடு கூடி உயிரும் உடலும் ஒன்றாகச் சேர்ந்து, தொழுதால், அவனது வேலாயுதமும், மயிலும் எங்கும் துணையாக வரும். அதனால் காண முடியாதவைகளையும் காணலாம் (எ-று)
காணொணாத யுந்தன் திருவுருவைக் காணாது வள்ளிமணாளனே! பூணொணாததை பூண்டு பொல்லாக் குரம்பையை வளர்த்து பேணொணாதை பேணி காத்துனையே பாடாது
நாணொணாததை நாடாதழிவேனோ யருளாய் தண்டை களையே!.47
காண ஓணாத உந்தன் திருஉருவைக் காணாது வள்ளிமணாளனே! பூண ஓணாதது அதை பூண்டு பொல்லாக் குரம்பையை வளர்த்து பேண ஓணாதது அதை பேணிக் காத்து உனையே பாடாது நாண ஓணாதது அதை நாடாது அழிவேனோ அருளாய் தண்டைகளையே!
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! பார்ப்பதற்கு அரிதான உந்தன் வடி வத்தை பார்க்காமல், பாடாமல், வாழ்க்கைக்கு தேவையில்லாதவை களான பேராசை, பொறாமை, கோபம், பொய், வெகுளி, காமம், நிந்தனை, ஏமாற்றுதல், விரோதம் போன்றவற்றை, விரும்பி அணியும் ஆபரணம் போல் அணிந்து (ஏற்றுக்கொண்டு), அதனால் பொல்லாத இந்த உடலை வளர்த்து, பாதுக்காக்க படாதவைகளான பெண்களின் தொடர்பு, தீயோர் நட்பு, அளவுக்கு மீறிய செல்வம், இன்சொலாமை, இரக்க மின்மை, உயிர்களை வதைத்தல், களவாடுதல் போன்றவற்றைப் பாது காத்து, வெட்கப்படத்தகாதவைகளாகிய கோயிலுக்குச் செல்லுதல், இறைவனை வணங்குதல், கிரிவலம் வருதல், திருப்புகழைப் பாடுதல், அடியாரோடு இணங்கி இருத்தல், இறை தொண்டுகள் செய்தல், திருநீறு முழுமையாக தரித்தல், அஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல், நைவேத்ய பிரசாதங்களை புசித்தல் போன்றவற்றை விரும்பிச் செய்யாமல் அழிந்து போவேனோ? அவ்வாறு அழியாதிருக்க உந்தன் தண்டைகள் அணிந்த திருப்பாதங்களை அருள்வாய் (எ-று)
தண்டையணிப் பொற்ப் பாதங்களை சரணமென்றடைந்தவர்க்கு பண்டையம் பெரும் வினைகளை பரிவாகறுப்பான்வள்ளிமணாளன் கெண்டையங் கண்ணாள் பெற்ற விசாகனே! கதியென்றிருப்போர்க்கு கொண்டயாவியும் புகாதிருக்குமேயினியோர் தசையிலே. 48
தண்டை அணிப் பொற்ப் பாதங்களை சரணம் என்று அடைந்தவர்க்கு பண்டையம் பெரும் வினைகளை பரிவாக அறுப்பான் வள்ளிமணாளன் - கெண்டையங் கண்ணாள் பெற்ற விசாகனே! கதி என்று இருப்போர்க்கு கொண்ட ஆவியும் புகாது இருக்குமே இனி ஓர் தசையிலே.
(க-ரை) தண்டைகள் அணிந்த பொன் போன்ற திருப்பாதங்களை சரணம் என்று தஞ்சம் அடைந்தவர்களுக்கு, அவர்களது பழைய வினைகள் எல்லாம் கருணையுடன் அறுத்து விடுவான் வள்ளி மணவாளன்! கெண்டை மீனுக்கு நிகரான விழிகளையுடைய உமையவள் பெற்ற விசாகனையே கதி என்று இருப்போர்க்கு அவர் எடுத்த பிறவியின் ஆவியும் இனியும் ஓர் உடலில் புகாமல் இருக்க அருள் புரிவான் (எ-று)
இதழ்களுடைய மலர்கள் போன்று சேர்ந்துள்ள உனது இரு பாதங்களை தினமும், தொழாமல், கீழான பிறப்பு எய்தி, துன்பங்களை அடைந்து, கேட்பார் அற்று, இடுகாட்டை அடைந்து, தீயினுள்ளே (இவ்வுடம்பு) கருகிப்போகாமல், வினைகளை விலக்கி, உந்தன் முத்தி வீடாகிய திருவடிகளைத் தருவாய் (எ-று)
jhjkjkhjkh
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! சுடர் வேலவனே! இருவினைகளால்
என்னை துன்பங்கள் தொடர்ந்து, இப்பிறப்பு எனும் தீயில் அகப்பட்டு, வெந்து போகாமல் தடுத்து, வரும் தீமைகள் என்றும் அணுகாமல் படர்ந்து,
இருக்கும் முல்லை மலருக்கும், தாமரை மலருக்கும் நிகரான உனது
திருப்பாதங்களில் யான் படருவதற்கு (அ) இருப்பதற்கு கருணை யோடு அருள்வாய் (எ-று)
ஏடு மலருற்றிணையடிகளை நித்தம் தொழாது வள்ளிமணாளனே!
கேடுற்று கேள்வியுமற்று கீழ் பிறப்புற்று வீணே
காடுற்று கருகாது கான மயில் வாகனா! யுந்தன்
வீடுற்றிருக்கருளாய் வினையேதும் அடையாதே. 40
ஏடுமலர் உற்று இணைஅடிகளை நித்தம் தொழாது வள்ளிமணாளனே!
கேடு உற்று கேள்வியும் அற்று கீழ் பிறப்பு உற்று வீணே
காடு உற்று கருகாது கான மயில் வாகனா! உந்தன்
வீடு உற்று இருக்க அருளாய் விணை ஏதும் அடையாதே.
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! காட்டில் வாழும் மயில்மேல் அமர்ந்தவனே!
இதழ்களுடைய மலர்கள் போன்று சேர்ந்துள்ள உனது இரு பாதங்களை தினமும்,
தொழாமல், கீழான பிறப்பு எய்தி, துன்பங்களை அடைந்து, கேட்பார் அற்று,
இடுகாட்டை அடைந்து, தீயினுள்ளே (இவ்வுடம்பு) கருகிப்போகாமல், வினைகளை
விலக்கி, உந்தன் முத்தி வீடாகிய திருவடிகளைத் தருவாய் (எ-று)
அடை படாதாவியும் கூட்டினுள்ளே வள்ளிமணாளனே!
இடை விடாது மாறி மாறி புகுந்திடரோடு
விடை பெறாது வீணாயுழலாதுலகெங்கிலும்
தடைபடாதயிலாலருள்வாய் சித்திகள் எட்டுமே! 41
அடை படாது ஆவியும் கூட்டின் உள்ளே வள்ளிமணாளனே!
இடைவிடாது மாறி மாறி புகுந்து இடரோடு
விடை பெறாது வீணாய் உழலாது உலகு எங்கிலும்
தடை படாத அயிலால் அருள்வாய் சித்திகள் எட்டுமே!
வள்ளிக்கு மணவாளனே! இந்த ஆவியானது ஓர் உம்பினுள்ளே புகாமல்,
இடை வெளி இல்லாமல், மாறி மாறி பல உடல்களில் புகுந்து, துயரங்களை
அடைந்து, முடிவு பெறாமல், வீணாக அலைந்து கொண்டு இருக்காமல்,
உலகில் தடை என்பதே இலாத வேலாயுதத்தைக் கொண்டு
எமக்கு சித்திகள் எட்டையும் அருள்வாய் (எ-று)
எட்டுடனொரு தொளையோடு கூடிய குரம்பையை நம்பி
கெட்டு நொந்தழியாது வள்ளிமணாளனே! காருமே பரிவாக
பிட்டுக்கு மண் சுமந்தோன் பிரிய புதல்வா! யடியேன் பட்டுப்போகாதிருத்திடுவாய் நின்னிருதாட்களை இணங்கியே. 42
எட்டுடன் ஒரு தொளையோடு கூடிய குரம்பையை நம்பி
கெட்டு நொந்து அழியாது வள்ளிமணாளனே! காருமே பரிவாக பிட்டுக்கு மண் சுமந்தோன் பிரிய புதல்வா! அடியேன்
பட்டுப் போகாது இருத்தி இடுவாய் நின் இரு தாள்களை இணங்கியே.
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! மதுரையில் அன்று பிட்டுக்காக மண் சுமந்தவன் பிரியமான புதல்வனே! ஒன்பது துளைகளையுடைய இந்த உடலை நம்பி யான் பல விதமாக கெட்டு நொந்து அழிந்து போகாமல், மலர்கள் பயன் அளிக்காமல் கருகிப் போவது போல் யானும் பட்டுப் போகாமல், கருணையோடு காத்து, உன்னிரு பாதங்களை அடியேன்பால் இடுவாய் ஓருசேர இணைந்து (எ-று)
ராகம் : பீம்ப்ளாஸ்
இணங்கித்தட்பொடிளந்தாமரை மொட்டுக்களை வள்ளிமணாளனே! வணங்கியுந்தன் திருப்பாதங்களுக்கு சமர்ப்பித்தேன் யேற்றருளாய் அணங்கொடமரர்கள் சூழ வலம் வருவோனே! யெமைநற் குணங்களொடு தூயவனாக்கி வினைகளைப் போக்காய் காணாமலே.43
கெட்டு நொந்தழியாது வள்ளிமணாளனே! காருமே பரிவாக
பிட்டுக்கு மண் சுமந்தோன் பிரிய புதல்வா! யடியேன் பட்டுப்போகாதிருத்திடுவாய் நின்னிருதாட்களை இணங்கியே. 42
எட்டுடன் ஒரு தொளையோடு கூடிய குரம்பையை நம்பி
கெட்டு நொந்து அழியாது வள்ளிமணாளனே! காருமே பரிவாக பிட்டுக்கு மண் சுமந்தோன் பிரிய புதல்வா! அடியேன்
பட்டுப் போகாது இருத்தி இடுவாய் நின் இரு தாள்களை இணங்கியே.
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! மதுரையில் அன்று பிட்டுக்காக மண் சுமந்தவன் பிரியமான புதல்வனே! ஒன்பது துளைகளையுடைய இந்த உடலை நம்பி யான் பல விதமாக கெட்டு நொந்து அழிந்து போகாமல், மலர்கள் பயன் அளிக்காமல் கருகிப் போவது போல் யானும் பட்டுப் போகாமல், கருணையோடு காத்து, உன்னிரு பாதங்களை அடியேன்பால் இடுவாய் ஓருசேர இணைந்து (எ-று)
ராகம் : பீம்ப்ளாஸ்
இணங்கித்தட்பொடிளந்தாமரை மொட்டுக்களை வள்ளிமணாளனே! வணங்கியுந்தன் திருப்பாதங்களுக்கு சமர்ப்பித்தேன் யேற்றருளாய் அணங்கொடமரர்கள் சூழ வலம் வருவோனே! யெமைநற் குணங்களொடு தூயவனாக்கி வினைகளைப் போக்காய் காணாமலே.43
இணங்கித் தட்பொடு இளந்தாமரை மொட்டுக்களை வள்ளிமணாளனே! வணங்கி உந்தன் திருப் பாதங்களுக்கு சமர்ப்பித்தேன் ஏற்று அருளாய் அணங்கொடு அமரர்கள் சுழ வலம் வருவோனே! எமை நற் குணங்களொடு தூயவன் ஆக்கி வினைகளைப் போக்காய் காணாமலே.
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! இரு தேவிமார்கள் சூழ தேவர்களோடு வலமாக வருபவனே! ஒன்றோடு ஒன்று இதழ்கள் சேர்ந்து குளிர்ந்து பூக்குந் தருவாயில் உள்ள தாமரை மலர்களை உந்தன் திருப்பாதங்களுக்கு சமர்ப்பித்தேன். அதை கருணையுடன் ஏற்று, என்னை நல்ல குணங்களோடு தூயவனாகச் செய்து, என் வினைகளை விலக்கி தெரியாமல் போகும்படி செய்வாய் (எ-று)
காணாத தூரமதை கடக்கவே வள்ளிமணாளனே! யேனோ வீணாகயுயிருமுடலும் வழியே தெரியாதலைகிறதே
பூணாத பூடணமதை பூணவேயடியேனுக் கருளாய்!
சோணாடீசன் புதல்வா! சொன்னேன் கவிகளை அணியாகவே! 44
காணாத தூரம் அதை கடக்கவே வள்ளிமணாளனே! ஏனோ
வீணாக உயிரும் உடலும் வழியே தெரியாது அலைகிறதே
பூணாத பூடணம் அதை பூணவே அடியேனுக்கு அருளாய்!
சோணாடு ஈசன் புதல்வா! சொன்னேன் கவிகளை அணியாகவே!
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! திருவருணையில் வாழும் ஈசன் புதல்வனே! கண்ணுக்குத் தெரியாத தூரமதைக் கடந்து செல்வதற்கு வீணாக இவ்வுடலும், உயிரும் வழி தெரியாமல் அலைகிறதே! எளிதில் அணிந்து கொள்ள முடியாத ஆபரணமாகிய உனது திருவடிகளெனும் ஆபரணமதை அடியேன் தலையில் சூடி அணிந்து கொள்வதற்கு அருள்வாய் (எ-று)
அணி செவ்வியர்யறுவரயணைப்பில் தவழ்ந்து வளர்ந்து
பணியணை மீது துயிலும் பாற்கடல் பரந்தாமன் புதல்வியரை மணியோடிழையுமரகதமாய் மணந்த வள்ளிமணாளனே! யடியேன் பிணிகளை நீக்கி யருளாயுந்தனிணையிலா இணை களையே! 45
அணி செவ்வியர் அறுவர் அணைப்பில் தவழ்ந்து வளர்ந்து
பணியணை மீது துயிலும் பாற்கடல் பரந்தாமன் புதல்வியரை
மணியோடு இழையும் மரகதமாய் மணந்த வள்ளிமணாளனே!அடியேன் பிணிகளை நீக்கி அருளாய் உந்தன் இணையிலா இணைகளையே!
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! அழகில் செம்மை (அ) செழுமை பெற்ற கார்த்திகை மாதர்கள் அறுவரின் அணைப்பில் தவழ்ந்து வளர்ந்து, திருபாற்க்கடலில் பாம்பாகிய ஆதிசேடன் மீது படுத்து உறங்கும் பரந்தாமனாகிய திருமாலின் புதல்விகளை, ஒன்றோடு ஒன்றாகச் சேர்ந்து ஒளி வீசும் முத்துமணியும், மரகதமும் போல மணந்தவனே! அடியேன் நோய்களை நீக்கி அருள்வாய் உந்தன் ஒப்பு நோக்குவதற்கு முடியாத இரு பாதங்களாலே (எ-று)
இணையதில் மனதை யிரவும் பகலும் செலுத்து மடியார்களை அணைந்தன்பால் வள்ளிமணாளனையுயிருமுடலுமொன்றாய் பிணைந்து தொழுதிடஅவனது வேலும் மயிலுமெங்கும்
துணையாய் நிற்குமே! காணலாமே காணொணாததையே! 46
இணை அதில் இரவும் பகலும் செலுத்தும் அடியார்களை
அணைந்து அன்பால் வள்ளிமணாளனை உயிரும் உடலும் ஒன்றாய் பிணைந்து தொழுதிட அவனது வேலும் மயிலும் எங்கும்
துணையாய் நிற்குமே! காணலாமே காண ஒணாதது அதையே!
(க-ரை) இரவும் பகலும் வள்ளி மணாளனின் திருவடிகளில் மனதைச் செலுத்தும், அவனது அடியார்களை நாடிச்சென்று, அன்புடன் அவர் களோடு கூடி உயிரும் உடலும் ஒன்றாகச் சேர்ந்து, தொழுதால், அவனது வேலாயுதமும், மயிலும் எங்கும் துணையாக வரும். அதனால் காண முடியாதவைகளையும் காணலாம் (எ-று)
காணொணாத யுந்தன் திருவுருவைக் காணாது வள்ளிமணாளனே! பூணொணாததை பூண்டு பொல்லாக் குரம்பையை வளர்த்து பேணொணாதை பேணி காத்துனையே பாடாது
நாணொணாததை நாடாதழிவேனோ யருளாய் தண்டை களையே!.47
காண ஓணாத உந்தன் திருஉருவைக் காணாது வள்ளிமணாளனே! பூண ஓணாதது அதை பூண்டு பொல்லாக் குரம்பையை வளர்த்து பேண ஓணாதது அதை பேணிக் காத்து உனையே பாடாது நாண ஓணாதது அதை நாடாது அழிவேனோ அருளாய் தண்டைகளையே!
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! பார்ப்பதற்கு அரிதான உந்தன் வடி வத்தை பார்க்காமல், பாடாமல், வாழ்க்கைக்கு தேவையில்லாதவை களான பேராசை, பொறாமை, கோபம், பொய், வெகுளி, காமம், நிந்தனை, ஏமாற்றுதல், விரோதம் போன்றவற்றை, விரும்பி அணியும் ஆபரணம் போல் அணிந்து (ஏற்றுக்கொண்டு), அதனால் பொல்லாத இந்த உடலை வளர்த்து, பாதுக்காக்க படாதவைகளான பெண்களின் தொடர்பு, தீயோர் நட்பு, அளவுக்கு மீறிய செல்வம், இன்சொலாமை, இரக்க மின்மை, உயிர்களை வதைத்தல், களவாடுதல் போன்றவற்றைப் பாது காத்து, வெட்கப்படத்தகாதவைகளாகிய கோயிலுக்குச் செல்லுதல், இறைவனை வணங்குதல், கிரிவலம் வருதல், திருப்புகழைப் பாடுதல், அடியாரோடு இணங்கி இருத்தல், இறை தொண்டுகள் செய்தல், திருநீறு முழுமையாக தரித்தல், அஷ்டாங்கமாக விழுந்து வணங்குதல், நைவேத்ய பிரசாதங்களை புசித்தல் போன்றவற்றை விரும்பிச் செய்யாமல் அழிந்து போவேனோ? அவ்வாறு அழியாதிருக்க உந்தன் தண்டைகள் அணிந்த திருப்பாதங்களை அருள்வாய் (எ-று)
தண்டையணிப் பொற்ப் பாதங்களை சரணமென்றடைந்தவர்க்கு பண்டையம் பெரும் வினைகளை பரிவாகறுப்பான்வள்ளிமணாளன் கெண்டையங் கண்ணாள் பெற்ற விசாகனே! கதியென்றிருப்போர்க்கு கொண்டயாவியும் புகாதிருக்குமேயினியோர் தசையிலே. 48
தண்டை அணிப் பொற்ப் பாதங்களை சரணம் என்று அடைந்தவர்க்கு பண்டையம் பெரும் வினைகளை பரிவாக அறுப்பான் வள்ளிமணாளன் - கெண்டையங் கண்ணாள் பெற்ற விசாகனே! கதி என்று இருப்போர்க்கு கொண்ட ஆவியும் புகாது இருக்குமே இனி ஓர் தசையிலே.
(க-ரை) தண்டைகள் அணிந்த பொன் போன்ற திருப்பாதங்களை சரணம் என்று தஞ்சம் அடைந்தவர்களுக்கு, அவர்களது பழைய வினைகள் எல்லாம் கருணையுடன் அறுத்து விடுவான் வள்ளி மணவாளன்! கெண்டை மீனுக்கு நிகரான விழிகளையுடைய உமையவள் பெற்ற விசாகனையே கதி என்று இருப்போர்க்கு அவர் எடுத்த பிறவியின் ஆவியும் இனியும் ஓர் உடலில் புகாமல் இருக்க அருள் புரிவான் (எ-று)
ராகம் : பெஹாக்
தசையாகிய கற்றையொடு நரம்பென்பும் சேர்த்து வள்ளி மணாளனே! பசையாகிய யுதிரமு மோட யுச்சி முதல் பாதம் வரை
இசைவாணியின் கணவன்யிருவினைகளொடென்னையும் படைத்தானே
திசையறியாயெமக்கு திசையாயிருப்பாய் தாரணியிலே! 49
தசை ஆகிய கற்றையொடு நரம்பு என்பும் சேர்த்து வள்ளிமணாளனே! பசை ஆகிய உதிரமும் ஓட உச்சி முதல் பாதம் வரை
இசை வாணியின் கணவன் இருவினைகளொடு என்னையும் படைத்தானே திசை அறியா எமக்கு திசையாய் இருப்பாய் தாரணியிலே.
(க-ரை) வள்ளிக்கு மணவாளனே! சரஸ்வதியின் கணவனான பிரம்ம தேவன் மாமிசமும் நரம்பும், எலும்பும், சேர்த்து கட்டிய கட்டுப் போன்ற இந்த உடலில் பசை போன்று ஒட்டும் தன்மை வாய்ந்த இரத்தத்தையும் உச்சி முதல் பாதங்கள் வரை பாய்ச்சி, இருவினைகளோடு என்னையும் படைத்து விட்டானே! உலகினில் வழி அறியாமல் இருக்கும் எனக்கு ஒரு வழியாய் இருப்பாய் (எ-று)
தாரணிக்கதி பாதகமாகிய செயலே புரிந்து

ஓரணியா நின்ற யசுரரோடு திரண்டெழுந்து சமரே புரிந்து வேரணியாய் நின்ற சூரனை வேலாலிரு கூறிட்ட
பூரணி பெற்ற வள்ளி மணாளா! தருவாய் நின் திருவடிகளையே! 50
தாரணிக்கு அதி பாதகம் ஆகிய செயலே புரிந்து ஓர்
அணியாய் நின்ற அசுரரோடு திரண்டு எழுந்து சமரே புரிந்து வேர் அணியாய் நின்ற சூரனை வேலால் இரு கூறு இட்ட
பூரணி பெற்ற வள்ளிமணாளா! தருவாய் நின் திருவடிகளையே!
(க-ரை) இப்பூவுலகத்திற்கு மிகவும் கொடுமை வாய்ந்த செயல்களையே செய்யும் அசுரர்களோடு ஒரே வரிசையாக நின்று பெருகி எழுந்து போர் புரிந்து, பின் அசுரர்களுக்கு ஆணிவேராகவும், வேர்களை வரிசையாக உடைய மாமரமாக நின்ற சூர பதுமனை வேலாயுதத்தால் இரு பாகமாகப் பிளந்த, அனைத்து அம்சங்களையும் முழுவதுமாய் பெற்றுள்ள பார்வதி யாள் பெற்ற வள்ளி மணவாளனே! உன்னுடைய திருவடிகளைத் தருவாய் (எ-று)

.37