தணிகைவேல் முருகன் அருள் மாலை Thanigaivel Murugan Arul Malai
விநாயகர்
காப்பு
நீபமாலையுந்
நீருங் கொண்டு நித்தம்
நினை வணங்கித் தொழுது
தூப
தீபங்கள் சாற்றினே னென் துரிசறுத்து
துணை புரியுந் தொடரும்
பாபங்களை
நீக்க வல்ல தணிகை வேல்
முருக னருள்மாலை சிறந்திடவே
ஆபத்சகாய
ஆனை முகனே
யநு தினமு மருள் செய்வாயே.
அரும்புங் காலையில் நின்னானந்த தரிசனங் கண்டு
பரவச
மெய்தினேன் தணிகை வேல்முருகா!
கரும்புங் கற்கண்டுங்
கனியின் ரசமுந் தன் நிலையிற்
றோற்கும்
நின் திருப்புகழைக் கேட்டு
சுரும்பும் பண்பாடுஞ்
சுப்ரமண்யா வென்றே
சுழிமுனைக்
காதாரமாய் நின்ற பொருளே
விரும்பு மென் மனம்
வேண்டிய படியே யுனைப்
பாடும்
பணியே பெற்றிட யருள்வாயே! 1
உல்லாசமாய்
கலாப புரவி மிசை வள்ளி தெய்வ
யானையுடன் வலம் வருந் தணிகை வேல்முருகா!
கல்லால
நிழற் கீழன்று சன காதியர்க்கு கருணையோ
டறமுரைத்த ரன்மைந்தா ஆறுமுகவா!
நல்லாசையாற்
நா நிறைய நின் திருப்புக ழெனுந்
நற்கருப்பஞ்சாறுந் தேனுங் குழைத்து மனதாற்
சொல்லா
லிசைத் தோதி வுய்வு பெற்றிட சுடர்
வேலவா யெமக் குபதேசித் தருள்வாயே! 2
ஏயா தெனை நீ யெந்நாளு மேன்றுக் கொண்
டின்னருளே புரிவாய் தணிகை வேல்முருகா!
மாயா
யுலகினில் மயங்கித் திரிந்து மன மொரு
நிலைக் கொள்ளா திங்கு மங்குமாய்
ஓயா
துழன்று நலியு முன்மத்தனை நின் திருப்புக
ழெனும் மலர்களைக் கொண்டு நாளும்
வாயாற்
பாடி பணிந்து பதமே தொழு தர்ச்சிக்க
பரம கல்யாணியின் புதல்வா யருள்வாயே! 3
வந்தனை செய்து வணங்கி
யர்ச்சித்து துதிப்போருக்கு
வரங்கள்
பல வளிக்குந் தணிகை வேல்முருகா!
அந்தகனை காலா லிடறி தன்
னடியானுக் கருளே
புரிந்த
அண்ணலின் மைந்தா யயில்வேலவா!
வெந்த நீறை விருப்போ
டணிந்து நின் திருப்புகழைப்
பாடும்
யேதமிலா யடியார்க் கென்றும்
எந்த துன்பமு மில்லை
யின்பமே யெந்நாளு மென
யின்னருள்
புரிந்திட வந்த ருள்வாயே! 4
நல்லா
ரெனப் பேறு பெற்ற நல்ல டியார்க்கு
நல்லருளே புரியுந் தணிகை வேல்முருகா!
பொல்லா
ராயினும் புண் சொல்லே சொல்வா
ராயினும் போதாச் செயலேப் புரிவா ராயினும்
இல்லா
ராயினும் இருப்பா ராயினும் எல்லோர் மனமு
மெம்மன மெனகொண்டு நினையா ராயினும்
கல்லா
ராயினு முனைக் காணா ராயினுந் நின் திருப்புகழை
யோதுவாராயின் பெருவாழ் வருள்வாயே! 5
பூவினைக் கொய்து நின்
பொன்னடிக்கே நித்தம் சாற்றி
போற்று
கின்றேன் தணிகை வேல்முருகா!
காவினை வைத்து கல்லிணை
யெழுப்பி நற்கருமங்கள்
பலச்
செய்திட நல்குவாய் கந்தா! என்
நாவினைத் திருத்தித்
திகட்டாத் திருப்புக ழெனுந்
தேன
முதை தினமு மோதிட யெந்நாளுந்
தீவினைகள் வந்தெமை
யென்றுந் தீண்டா துந்தன்
திருவடியிற்
சேர்த் தெமைக் காத்த ருள்வாயே! 6
முப்போதுந்
திருமேனியில் முழு வெண்ணீ றாடி மகிழும்
முத்துக் குமரா! தணிகை வேல்முருகா!
தப்பாம
லுன்றன் திருப்புகழை தின மென் நாவினிற்
றவறாம லன்பா லிசைத்து வுச்சரிக்க
எப்போது
மென்றனுள்ளே யிறைவா நீ யினிமையுடன்
கேட்க குருவா யெழுந்தருள வேண்டும்
அப்போ
தென்றன் மனதை யொருநிலைப் படுத்தி
நின்றன் பாத மலரை வுறுதியாய் யருள்வாயே! 7
நினைந்தார்க்
கருளுந் நீல மயில்வாகனா! நித்ய கல்யாணிப்
பெற்ற தணிகை வேல்முருகா! காலனை
சினந்தார்க்
குபதேச முரைத்த ஞான பண்டிதா! நித்தம்
வாசமலரே யாய்ந்து வகையாக மாலைகளை
புனைந்தார்க்கு
புண்ணிய லோகமருளும் போர் வேலவா!
நித்தம் திருப்புக ழெனுந் தேன் மழையில்
நனைந்தார்க்கு
நரகில் புகா வண்ணந் நற்கதியுந் நற்
பேரும் புகழுந் நாதப் பொருளே யருள்வாயே! 8
செண்டை யடித்து மேருவை
துகளாக சிதறிடவேச்
செய்த
உக்கிர குமரா! தணிகை வேல்முருகா!
கண்டை நிகர்த்த நின்
திருப்புக ழமுதை யிசையெனுந்
தேனைக்
கூட்டி சுவைத் தின்புறாமற்
றண்டை யூன்றி தளர்
நடையிட்டுத் தாளு மோய்ந்து
யொளியுமிழந்
தொருநா ளொடுங்காமுன் யென்
பண்டை வினைகளை
பார்த்தறுத்திட பட்சமுடன்மயி
லேறி
வள்ளி தெய்வயானையுடன் வந்தருள்வாயே! 9
கடுகில் பிள வளவேனுங்
கற்றிலேன் கந்தா! கதிர்
வேலவா!
கார்த்திக்கேயா! தணிகை வேல்முருகா!
சுடுகில் விறகின் தீ
முன்னமே தெரியாது போல
வருந்
துயரமும் வறுமையும் வாட்டுதே
விடுகில் வினையேன்
பிராணன் விதி வசத்தால்
ஆறுமுகவா!
என் வினைதீர நீ வேலொடு
சடுதில் தோன்றி யினி
பிறவாநிலை தந்து நின் சரண
பொற்கமலங்களில்
சேர்த்த ருள்வாயே! 10
பரங்குன்றில் பவழமாய்
தெய்வயானையுடன் மகிழ்ந்து வீற்றி
ருக்கும்
பன்னிரு விழியோனே தணிகை வேல்முருகா!
கரங்குவித்து
சிரந்தாழ்த்தி சிந்தையி லிருத்தி வழிபடும்
டியார்கள்
மனக் குறையைத் தீர்த்து
வரங்கள் பலவே கொடுத்து
வாழ்வும் வளமுஞ் சிறக்க
வருளும்
வானவர் தலைவா! எனைத்
தரங்கண்டு தமியேன் படு
துயர் களைந்து வறுமையுஞ்
சிறுமையுந்
நீங்கிட வன்மையுட னருள்வாயே! 11
மண்ணின் மேற் மறையவர்
போற்றிற்றுதிக்கும் மாசிலா
மணியே!
மாணிக்கமே! தணிகை வேல்முருகா!
கண்ணின் மணிபோல் காத்தி
ரட்சிக்க கருணை கூர்
முகங்கள்
கொண்டு வாரும் கந்தா!
பண்ணிய பழி பாவங்கள்
யாவும் பரிவோடு நீக்க
வேலொடு
பரிமேற் வந்தருளுங் கடம்பா!
எண்ணிய தெண்ணியவாறீடேற
யிப்பூ வுலகினிற்
யினியாகிலும்
பிறவா வரந் தந்த ருள்வாயே! 12
இறந்த பிறவி யுண்டாகி
லெமக் கினி ஈசனின்
யினிய
மைந்தா! தணிகை வேல்முருகா!
கறந்த பாலுந் தேனும்
மலருங் கொண்டு நித்தங்
கழற்
கென்று மன்பா லர்ச்சித்து
சிறந்த தொண்டே புரிந்து
நினை வணங்கித் தொழுங்
கன்ம
மில்லா யடியாரை யெந்நாளும்
மறந்த மனமு மதியு மினி
வேண்டாது மற்றொப்
பில்லா
மாணிக்கமே யெமக்க ருள்வாயே! 13
எந்தையெம் மரனாரின்
யினிய நுதலிலு தித்த யிளையோ
னாகிய
யெழில் வேலவா! தணிகை வேல்முருகா!
முந்தை வினைகளும் மும்
மலமு மூண் டெனை வாட்டுதே
மூலப்பொருளே
முத்தமிழோனே! எமக்கு
தந்தையுந் தாயுமா
யிருந்து யலையலையாய் நாளுந்
தொடருந்
துன்ப மெல்லாந் நீங்கி யென்
சிந்தையை யொருசேர
யிருத்தி நின் தாளை யென்றும்
பணிய
பரமன்மைந்தா! பரிவோ டருள்வாயே! 14
சேரு மிடமி துவே வென்ற
றியாமற் றவிக்கிறேன்
சேந்தா!
செவ்வேலவா! தணிகை வேல்முருகா!
பாரு மெமை பரிவோ
டுன்றன் பன்னிரு விழியி
லோர்விழியாற்
நின்பதமே தந்திட நித்தம்
நீரும் பூவுங்கொண்டு
நின்றன் கழற்கு பூசித்து
தொழுதிடவே
யென்று மெமக் கெல்லா நலமுஞ்
சீருஞ் சிறப்பும்
வாழ்வில் பெற்று சினமும் மதமுந் தவிர்த்து
சிறியேனை
யாட்கொண்டருள்வாயே! 15
பைவுரும் பாம்பணிந்த
பரமன் புதல்வா! பல குன்றிலு
மமர்ந்தோனே!
தணிகை வேல்முருகா!
சைவரும் வைணவருஞ்
சேர்ந்தே துதிக்குஞ் சக்தி
வேலாயுதா!
சற்குரு வாகிய சண்முகா! சரவணா!
கைவருங் கலைகளுங் கண்
கவர் வித்தைகளுங் கற்றுத்
தேர்ந்தாலுங்
காலத்தாற் நில்லா தோர்நாள்
ஐவரு மடங்க
நின்றனரவிந்த மலர்ப் பாதமதை
யெமக்கு
தந்து காத்தருள்வாயே! 16
வாச மலரும் பொழிலும்
வண்டின் ரீங்காரமு மெங்கும்
யெழிலாய்
சூழ்ந்த தணிகை வேல்முருகா!
நேசமுட னன்று மானிக்கு
சண்டேச்சர பதமே யளித்
தாட்
கொண்ட அரனின் மைந்தா!
பாசமுடன் கார்த்திகை
பெண்க ளொரு சேர யணைத்து
மகிழ
விளையாடும் பாலமுருகா! நின்
ஓசை தரும்
மலர்ப்பாதமும் வேலும் மயிலும் யென்றும்
யெங்குந்
துணையா யிருக்க யருள்வாயே! 17
சோதிப் பிழம்பாய்
சுடரின் கருவாய் மணியாய் தோன்றிய
தூயவனே
தணிகை வேல்முருகா! முடியில்
பாதிமதி சூடிய
பரமனைநாளும் நற்றமிழாலிசைத்து
தொழு
தேற்றி நன்மைகள் பலபுரிந்த
வேதியர்கள் வியக்கும்
வேதங்களை யோதா துணர்ந்த
ஞான
சம்பதனாக வுதித்த நின்றனை நாவாற்
ஓதி வுய்வு பெறவு
முறுநோ யகலவுந் தீதிலா
வளமும்
வாழ்வுந் தந்த ருள்வாயே! 18
மாளா நாளருளும் மணியே!
மணியி னொளியே! ஒளியின்
சுடரே
மருக்கொழுந்தே! தணிகை வேல்முருகா!
மீளாத் துயர் கொண்டு
மண்ணுலகில் மதி கெட்டுப்
பித்தரைப்போல்
மயங்கி திரிந்து வதங்கி
நாளார் வந்தணுகி நலியா
முன் நின்றன் தாளிணைக்கே
சிறந்த
தொண்டே புரிந்து பணிந்திட
ஆளாய் யடியேனையும்
ஆண்டு கொண்டு கருணை
பொழிந்து
கடைக் கண் பார்த்த ருள்வாயே! 19
வற்றாத செல்வங்களை
வரமாய் தந்தருளும் வள்ளி
மணாளா!
வடி வழகா! தணிகை வேல்முருகா!
உற்றா ரெமக்கொருவரு
மில்லை யுனையே துணை
யென்று
வுறுதியாய் நம்பினேன் நானும்
நற்றாள் பற்றினேன் நயந்
தென்பாற் நல்லாசீரொடு
நன்மைகள்
பலவுந் தன்னையே வென்ற
கற்றார் நல்லுறவுங்
கன்ம மில்லா பெரு வாழ்வுங்
கிடைத்திடவே
கந்த சுவாமியே யருள்வாயே! 20
வள்ளிக்கு வேடை கொண்டு
வேங்கை மரமாய் நின்ற
யினிய
பிரானாகிய தணிகை வேல்முருகா!
முள்ளில் போட்டது
முயன்றெடுத்தாலுமு ழுவதுமாய்
கிட்டாது
போல யன்பில் லாமற் றானம்
அள்ளி யள்ளி
யடியார்க்கு கொடுத்தாலும் வரும் பயன்
முழுதுங்
கிட்டுமோ ஆறுமுகவா! உனை
வெள்ளி முளைக்கு முன்பே
விரைந் தெழுந்தன்பாற்
றொழுது
வேண்டியதை பெற யருள்வாயே! 21
செந்தில் பதிவாழ்
செந்தமிழ் குமரா! சிவகாமிபெற்றச்
செல்வப்
புதல்வா! தணிகை வேல்முருகா!
முந்தி யான் செய்த
முழுவினையின் பயனாய் மூர்க்கனாகி
செய்வ
தறியாம லலைகிறேனே என்
புந்தியில் வந்துதித்து
பொல்லா வினைகளை போக்கி
காத்திட
வாரும் போர் வேல் சண்முகா!
அந்தியில் நீயே
யடியேனுக் காதரவா யிருந்து நின்
திருவடியின்
கீழிருத்தி யருள்வாயே!
22
எந்த நாளி லெமக் கோலை
வரு மென்று தெரியாது
சண்முகா!
தணிகை வேல்முருகா!
அந்த நாளி லெமக் காதாரமா
யிருந்து யபய
மளித்திட
வாரு மையா ஆறுமுகவா!
வந்த நாளி லென் செய்தே
னிவ்வுலகில் வாழ்நாளை
வீணே
கழித்தே னல்லாது யெமக்கு
தந்த நாளி லினியாகிலு
முனை தரிசித்து பாடி
தொண்டே
புரிந்திட பரிவுட னருள்வாயே! 23
முன்னை முற்பிறப்பி
லென்னென்ன பாவங்கள் மூடன்
செய்தேனோ
தெரியாது தணிகை வேல்முருகா!
என்னை யிப்பிறவியிற்
சொல்லொனா வறுமை தான் வாட்டி
வதைக்குதே
வள்ளிமணவாளா! வேலவா!
தன்னை யிழந்து தன்னோடு
தாங்கிய யனைத்து மிழந்து
நிர்கதியாய்
யான் தவிக்கும் வேளையில்
உன்னை சரணடைந்தேன்
யெம்மை கருணையுட
னிரட்சித்து
கமல பாதங்களை தந்த ருள்வாயே!
24
சேயாகி
செந்தா மரையிலுதித்த செழுஞ் சுடரே!
செட்டி மகனே! தணிகை வேல்முருகா!
காயாகி
கனியு முன்னரே கணக்கிட்டு வாதாடுங்
கயவரைப் போல வரும் செல்வ செழிப்பால்
பேயாகி
திரியும் பித்தரோ டிணங்கி பெருவாழ்வு
பற்றாமற் நாளும் வீணாய் நாட்களை கழித்து
ஓயாம
லலைந்து திரிந்து சிறுவாழ்வு பற்றி நலிந்து
போகாமற் பெருவாழ்வு பற்ற யருள்வாயே! 25
கோளுங் கோமகனுஞ் சிறை
நீங்கிட திருவருளே புரிந்த
தேவர்கள்
தலைவா! தணிகை வேல்முருகா!
ஆளு மாவணமுங் காட்டி
யடியாரை யாண்டு யடிமை
கொண்ட
அரன் மைந்தா! பகைவர்
வாளும் வேலு மென்முன்னே
யென்செயும் வடிவேலா!
கந்தா!
கடம்பா! குமரா! குகா! வென்று
நாளு முனைப் போற்றி
துதிக்கிறேன் நல்லருளே புரிந்து
யினி
நற்கதி பெற்றிட யருள்வாயே! 26
வன் றொண்டனின் வாசமுள்ள
தமிழை வருணனிடம்
சேர்த்த
ஈசன் மகனே! தணிகை வேல்முருகா!
நன் கிருபையா மெமக்கு
உன்கிருபை யல்லாது நாடுவதும்
வேறு
ளதோ யுலகில் ஆறுமுகவா!
பின் வாங்கி யோடிய
யசுரர்தமை பின்துரத்தி வீழ்த்திய
சக்தி
வேலாயுதனே! மயிலேறும் வீரனே!
என்
வறுமையாந்துயர்நீங்கி வாழ்வும் வளமும் பெற்
றுனையென்றும்
மறவா திருக்க யருள்வாயே! 27
உறித்த
பழங்களுந் தேனுந்தினையு முரிய நேரத்தில்
கொள்ளும் உத்தமா! தணிகை வேல்முருகா!
குறித்த
நேரத்தில் குறிப் பறிந்து வேண்டியதை
வேண்டிய வாறே நல்குமெந்தை சிவனாரின்
முறித்த
வில்லை முன்னமே யறிந்த முனிவனுக்கு
சூளுரைத்த மாயோன் மருகா! முருகா! உனைப்
பறித்த
மலர்கள் கொண்டு பலநாளும் பண்ணிசைத்
தர்சித் தானந்தம் கொண்டிட அருள்வாயே! 28
வேதங்கள் தொழும் வேடனாக
வந்து விஜயனை யாட்
கொண்டவன்
புதல்வா! தணிகை வேல்முருகா!
பாதந்தான் தேடி
யெங்குங் காணா பரந்தாமனின் சிந்தை
மகிழ்
மருகா! முத்துக்குமார சுவாமியே!
நாதன் நாமம் நமசிவாய
வென நாளுந் நற்றமிழா
லுரைத்து
நற்கதி பெற்றிட யெந்நாளும்
ஏதமிலா பெருவாழ் வளித்
தென் யிருவினைகளை
களைய
இளைய குமரா! வந்தருள்வாயே! 29
கல்லினுள் தேரையையுங்
கருப்பை வுயிரையுங் காக்குங்
கருணை
வடிவே கந்தா! தணிகை வேல்முருகா!
வில்லினுள் பூட்டிய
அம்புதான் வீணாகாமற் யசுரரை
வீழ்த்திய
மாலோன் மனம் மகிழும் மருகா!
நெல்லிக் கனியை நித்த
முண்டு நிணந் சூழ் நிலையா
இக்குரம்பையை
வளர்த்தாலு மொருநாள்
சொல்லி வைத்தாற் போல்
காலன் வருங்கால் சுப்பிரமண்யா!
நின்
திருவடிதனை சூட்டி யருள்வாயே! 30
பாரின் மேற்
பல்லாயிரத்துக் கோடி வுயிர்களை
பரிவோ
டிரட்சிக்குந் தணிகை வேல்முருகா!
நீரின் மேலெ ழுத்தாய்
நிலையாச் இச் செல்வம்
நிற்குங்கால்
நிற்கும் போகுங்கால் போகும்
சேரின் உன்றன டியாரோடு
முழுவதுமாய் மும்மலந்
நீக்கி
மோன முக்திக்கு வழி காட்டிடுந்
தாரின் நின் தாமரை பொற்
பாதங்களை தவறாமற்
றுதிக்கும்
பெரும் பாக்கியம் ருள்வாயே! 31
சிங்கார வேலும் மயிலுஞ்
செஞ்சேவற் கொடியு முடைய
செல்வ
முத்துக்குமரா! தணிகை வேல்முருகா!
வங்கார மார்புங் கடம்பு
மோராறு முகமு மீராறு
புயமும்
பன்னிரு விழியுங்கொண் டசுரரை
சங்கார மாடி கிரௌஞ்ச
வெற்பை பிளந்து சூரனுடலை
யிரு
கூறாக்கிய சுப்பிரமண்யா நீ!
பொங்கார மாய்
யென்முன்னே தோன்றி பொற்பாதம்
நல்கி
ஓர் போதகச் சொல் லருள்வாயே! 32
போகமா முனிவர் போற்றி
யருளிய புனித வடிவே! தென்
பழநி
ஆண்டவா! தணிகை வேல்முருகா!
ஏகமாய் பலவாய் சிவமா
யெம்பெருமானாய் யினிய
வடிவாய்
யிறைவனாய் யேகபாத மூர்த்தியாய்
நாகமாய் உடலெங்கு
மணியுந் நஞ்சை யமுதா
யுண்ட
சிவனாரின் செல்வப் புதல்வா! யான்
சோகமாய் சோம்பித்
திரியாமற் சுத்த சிவஞான பெரு
வாழ்வைப்
பற்றிட கருணையுட னருள்வாயே!
33
கற்றவர்க் கருளுங்
கனியே! கனியின் மொழியே! மொழியி
னுயிரே
கற்பகமே! தணிகை வேல்முருகா!
பற்றற் றாருக்கு
பாரினில் யாவுந் துச்சமா மென்பதை
துல்லியமாய்
சுத்த பரஞ் சோதியாய்
நற்றவத் தாராகிய திருவாதவூரருக்
குபதேசித்து தன்
னடியை
யீந்த ஈசன் மகனே! என்றும்
உற்றவருக்குறு துணையா
யென்று முடனிருந்து
உமையாள்
சுதனே யிரட்சித்தருள்வாயே!
34
புள்ளி மயிலேறி புவன
முழுதுந் நொடி போதினில்
வலமாய்
வந்த தணிகை வேல்முருகா!
துள்ளித் திரியு மானாக
தினைப்புனத்தி லிங்குமங்குங்
கவண்
வீசி லாய லோட்டி விளையாடிய
வள்ளிக்கு வேடை கொண்ட
வடிவழகா! வையாபுரிவாழ
மரர்
றலைவா! ஆறுமுகவா! அயில் வேலா!
வெள்ளிக் கரம் வாழ் வேத
கற்பகமே! வினையேன்
ஊழ்
வினையை மாய்த்த ருள்வாயே! 35
முத்திக்கு வித்தாகும்
முழுமுதற் மூலப் பொருளே! முத்துக்
குமார
சுவாமியே! தணிகை வேல்முருகா!
பத்திக்கும் நல்ல
பண்புக்கும் பல காலுமுனையே
பணிந்து
தொழுவா ரவர்க்கு மெந்நேரமும்
எத்திக்கும் நின்
திருப்புகழை விருப்போ டிசைத் தன்பா
லுருகும
டியார்க ளவர்க்கு யாவுஞ்
சித்திக்கும் நின்
சேவடி நீழலே சிவ குமரா!
சிறியேனுக்குந்
தயை புரிந்த ருள்வாயே! 36
சிக்கல்
சிங்கார வேலவா! செல்வ முத்துக் குமரா!
சிவ பாலா! தணிகை வேல்முருகா!
தக்கார்
எவரோ வவர்க்கு தவமும் வாழ்வுந் தந்து
தன்னடியினில் சேர்க்கும் ஆறுமுகவா!
எக்கார
ணத்தினா லிப்பிறப்பும் வாழ்வு மிவ்வை யகத்தில்
பெற்றே னென யியம்புவாய், பின்
அக்காரணத்தை
தவிர்த்த யடியேனி னிபிறவாம
லுய்நெறி காட்டி கருணை புரிந்த ருள்வாயே! 37
நொந்தார்க்
கருளுஞ் சேந்தா! சேவற் கொடியோனே!
விசாகா! வெற்றிக் குமரா! தணிகை வேல்முருகா!
கந்தா!
கடம்பா! கார்மயில் வாகனா! கார்த்திகேயா!
சுப்பிரமண்யா ! சிறுவாபுரி வாழ் சிவ பாலா!
எந்தாய்
மாயோன் மருகா! சுடர் வேலவா! சண்முகவா!
ஊமை சிறுவனுக்கு செந்தமி ழளிக்க
வந்தா
யன்று மயில் மீதினில் மலைமகள் புதல்வா!
அடியேன் படுதுயர் களைய யருள்வாயே! 38
கண்ணீந்து கண் பெற்ற
கண்ணப்பர் குலத்தலைவா!
குறத்தி
மணவாளா! தணிகை வேல்முருகா!
பெண் ணீந்து பிறையாக
தேயவே செய்த தக்கனை
சிதைத்
தழித்தோன் செல்வத் திருக்குமரா!
மண்ணீ ந்த மாபலிக்கு
தன்திருவடியை யீந்து
அகம்
நெகிழ்ந்து சிவபூசைபுரிந்து
கண்ணீந்து ஆழிப்படையைப்
பெற்ற கண்ணன் மகிழு
மருகா!
நின்திருவடியை சூட்டி யருள்வாயே!
39
என்னமோ
தெரியாதேழ்மையும் வறுமையு மெனைவாட்டி
வதைக்குதேவேண்டேனே
தணிகைவேல்முருகா!
இன்னமும் என்மேல் கருணை
சிறிதளவேனுங் காட்ட
லாகாதோ
கண் பார்த்தருளும் கதிர்வேலவா!
முன்னமே தெரியாத மூலப்
பொருளே மோன முத்திக்கு
வழி
காட்டிடும் முக்கண்ணன் மைந்தா!
தின்னமாய் உனையே
நம்பினே னென் வறுமை போக்கடித்
தினியா
கிலும் யிரட்சித்த ருள்வாயே!
40
சூரினை கொண்டு சூரனை
வதைத்த சிவ சுப்பிரமண்யா!
சுடர்
வேலவா! தணிகை வேல்முருகா!
தேரினை திறம்பட யோட்டி
தீயோரை யழித்து முடிவிற்
றருமங்
காத்த திருமால் மருகா!
நாரினையுறித்து நல்
மாலைகற் றொடுத்து நற்பதமே
சாற்றி
நயந்து வேண்டினேன் வேண்டா
வேரினை களைந்து
வெகுளியை துறந்திடயெனை
வெற்றி
டமாக்கி சொற்பதம் தந்த ருள்வாயே! 41
இது வென்ன
சோதனையோயெப்படித்தாங்குவதோ
சண்முகா!
இ(ற)ரங்கி வாரும் தணிகைவேல்முருகா!
மது ரமானுனாறுமுகமும்
பன்னிருகரமும் தோளும்
வேலும்
மயிலும் சேவற்கொடியுங் கொண்டு
பது மராக பவழத்
திருமேனியிற் றிருவெண்ணீறுங்
கடப்ப
மலர் மாலையு மணிந் தெமக்
கெது வரினு
மெப்படியாயினுமென்துயர் களைந்து
பரிவோடு
கடைக் கண்ணாற் காத்தருள்வாயே! 42
வித்துக் கிரைத்தநீர்
விழலுக்கு பாய்ந்து வீணாகி போவது
போல
வேலவா! தணிகை வேல்முருகா! யென்
புத்திக் குரைத்த போதக
சொற்கள் வீணாய்
போய்விடாமற் யாவருமறிய வுலகிற் முதலாக வன்றே
சத்திக்கு சரிபாதி உட
லீந்த சந்திரசேகர னருமந்த
புதல்வா!
சண்முகவா! சற்குரு நாதா!
தித்திக்குந் தேன்பாகே!
திகட்டாத தெள்ளமுதே! யெனை
யென்றுந்
நிலையாய் நிறுத்தி யிருத்தி யருள்வாயே! 43
திருவேரகத்தில் சுவாமி
நாதனா யென்றுந் திகழுஞ் ஞான
சற்குரு
நாதா! தணிகை வேல்முருகா!
ஒருவோரகமாய்
பலிக்கென்றே திரிந்த பரமன் மைந்தா!
யுந்தன்
திருப்புகழை நித்த மோதி வினைதீர
உருவேறவே செபிக்கும்
உன்ன டியார்கள் மனக் குறையை
தீர்க்கும்
கந்தா கயிறொடு காலன்
வருங்கால் நீ யொயிலாகவே
மயிலேறி வேல் கொண்டு
வீசி
வினையேனை காத்த ருள்வாயே! 44
வாழ் நாளெல்லாம் வீணாகி
கொண்டே போகிறதே
யென்
செய்வேன் தணிகை வேல்முருகா! இந்த
பாழ் வாழ்வெனு
மிப்பிரபஞ்ச மாயையில் சிக்கி
மீளாத்
துயர் கொண்டடியேன் பரிதவித்து
சூழ் நாளெல்லாம்
சுப்பிரமண்யா! யுமக்கே யன்பா
லழுது
தொண்டு செய்வ தல்லாமற் வீணாய்
வீழ் நரகில் வினையேன்
விழுந்து வெந்து நொந்து
போகாமற்
வெற்றிவேலவா! காத்த ருள்வாயே! 45
விற்கொண்ட வேந்தனாக
வில் லொடித்த மாயோன்
மன
மகிழும் மருகா! தணிகை வேல்முருகா!
இற்றுண் டிரப்பவர்க்
கீய யெமக்கு சற்றேனுங்
கருணை
புரிய கூடாதா கார்மயில் வாகனா !
கற்கண்டு பாகாய்
கனியின் இரசமாய் யினிக்குந் நின்
திருப்புக
ழெனுந் தேனமுதை தினமுஞ்
சற்றுண்டு நின் சரண பாத
கமலங்களில் சாற்றி
போற்றி
வழிபட சரவணபவனே யருள்வாயே! 46
ஏறு மயிலேறி
யிருபுறமும் வள்ளி தெய்வயானையுடன்
வொய்யாரமா
யாடி வருந் தணிகை வேல்முருகா!
ஆறு முகமும் பன்னிரு
கரமுஞ் சக்தி வேலாயுதமுங்
கொண்டு
கிரௌஞ்ச வெற்பைப் பிளந்து
சீறுஞ் சூரபதுமனையும்
வதைத் திரு கூறாய் சமைத்து
சேவலும்
மயிலு மாக்கிய வேலவா!
மாறும் மண்ணுலகிற்
மதிமயங்கி திரிந்த லையாமற்
மற்றொப்
பில்லா மாணிக்கமே யெமக்கருள்வாயே! 47
நாகங்களை யெடுத் தாட்டி
திருநடமே பல புரியும்
அரனார்தம்
புதல்வா! தணிகை வேல்முருகா!
பாகம்பிரியாள் செல்வக்
குமரா! பழமேகொள யொரு
நொடியிற்
பார்வலம் வந்த வடபழநி ஆண்டவா!
போகங்களும் போதா
செல்வங்களுமே புவியிற் நிலையென்
றெண்ணி
பொழுதை வீணாய் போக்காம லிறுதியிற்
காகங்களுங் கழுகுங்
களித்துண்ணு மிக்குரம்பையினின்று
முயிரே
குமுன் வந்து காத்தருள்வாயே! 48
திரு முருகாற்றுப் படை
சொன்ன நக்கீரனுக்கு நல்லிலக்
கணங்களை
போதித்த தணிகை வேல்முருகா!
தரு முருகாவென
தவத்தோருஞ் சான்றோரும் போற்றுஞ்
சற்குரு
நாதா! சதுர்முகனை சிறை கொண்டோனே!
வருமுருகாவென பலவாறு
துதித் தொழுதே னாயினு
மிரக்க
மெள்ளளவு மில்லையோ யென்மேல்
ஒரு முருகாவென
யென்னுள்ளமது குளிர உற்ற
துணையா
யென்று மெழுந்தருள்வாயே! 49
பிறை சூடிய
பெருமைக்குறிய பெம்மான் பெற்ற கோலா
கால
குமரா! குருபரா! தணிகை வேல்முருகா!
மறை நான்கும் போற்றி
துதிக்குங் கூடல் மாநகரை யாண்ட
உக்கிரகுமாரா!
உமையாள்சுதனே! எமக்கு
குறை யொன்றுமில்லா
வாழ்வுங் குறுகிய சிந்தனையை
நீக்கிய
மனமு மென்றும் மறவாது பூசிக்குந்
நிறைவான குணமுந்
நித்தம் நின்னை வழிபடுந் நினைவும்
பலமும்
பாலகுமார சுவாமியே யருள்வாயே! 50
சருகாய் காய்ந்தொ
டிந்து யான் சாய்ந்து தோய்ந்து
போகாமற்
சரவணா! தணிகை வேல்முருகா!
ஒருநாள் காலன் கரிய
நிறத்தோடு சூலமும் பாசமுங்
கனல்
பொங்கும் விழியுங் கொண்டு
வருங்கால் குமரா! குகா!
கார்த்திக்கேயா! வென்று
ரைத்திட
யுடனே வேலொடு தோன்றிட யெனிரு
காலுங் கரமுஞ் சிரமுங்
குவித்து வணங்கிட நின்
றிருவடியிற்
நிலையாய் சேர்த்த ருள்வாயே! 51
வரையாய் கடலாய் நின்ற சூரனை வதைத்து மயில்
வாகனமாக்கிய தணிகை
வேல்முருகா!
யான்
நரையாய் நாக்குழற நாநில மலைந்து திரிந்து நற்
காரி யங்களை
செய்யாது நாளடைவிலுதவா
புரையாய் கரைந் திவ்வாக்கையு முயிரும் வேறு
வேறாகும் போது
யுந்தன் வேலும் மயிலும்
சுரையிற் றோன்றுஞ் சுத்த நாதமதைப் போற் றோன்றி
ஞானமும் போதமும்
தந்திட யருள்வாயே! 52
பைந்தமிழ் பாமாலைகள்
பாடி பணிந்து பரவச மடையு
மடியார்கள் சேருந்
தணிகை வேல்முருகா!
நைந்துருகி நற்றாள்
றொழுது முறையிட்டேன் யான் யென்
னென்ன பாவங்கள் முன்
செய்தோனோ தெரியாது
மைந்தரும் மாதரும் மாட
மாளிகையும் மாறுஞ் செல்வங்
களுஞ் சதமென் றெண்ணி
மகிழ்ந்திருந்தேனே
ஐந்தருவியா யென்
வாழ்நாளு மொவ்வொன்றா யோடி வீணாய்
கழிகின்றதே யானுய் யும்நாள ருள்வாயே! 53
கழிகின்றதே யானுய் யும்நாள ருள்வாயே! 53
சரவண
பொய்கையிற் முழுகி நீராடி நினை நித்தந்
தொழுவோர்க் கருளுந் தணிகை வேல்முருகா!
பரமனது
நெற்றிக் கண்ணி லுதித்து பாருலகில் பல
குன்றிலு மானந்தமா யமர்ந்த ஆறுமுகவா!
கரமது
பன்னிரண்டுங் கொண்டு சூரனை சேவலும்
மயிலுமாய் மாற்றி திருவருளே புரிந்த குமரா!
நரனெனை
நல்வழி படுத்தி தீவழி புகாமற் றிருவடி
தீட்சை தந்தாட் கொண்டருள்வாயே! 54
ஐந்தாம் படை வீட்டி
லதியற்புத வடிவமாய் நின்னருளை
வாரி
பொழியுந் தணிகை வேல்முருகா!
நைந்து ருகி யுனை
நாளுந் நினைந் தழுது தொழு
தானந்தவாரி
சொரிந்த ரற்றுகின்றேனே
மொய்ந்து வண்டுகள்
ரீங்காரஞ் செய்யுங் கடப்ப மலர்
மாலையை
றிருமார்பி லணிந்த திருக்குமரா! யான்
உய்ந்து போவதற் குரிய
யுற்ற வழியைச் சொல்லி
உயர்கருணை
புரிந்த ருள்வாயே! 55
வல்லா ராயினும் வறுமை
கூறினும் வாழ்வா ராயினும்
வணங்குவார்க்
கருளுந் தணிகை வேல்முருகா!
கல்லா ராயினுங் காணா
ராயினுங் கண்டா ராயினும்
விண்டா
ராயினும் நின்நாமம் விருப்போடு
சொல்லா ராயினுந் நினையா
ராயினுந் துதியா ராயினுந்
துதித்தப்பின்
மறந்தா ராயினுந் நிலையாக
நில்லா ராயினுந்
நீடுலகில் நின்னையே கதியென்று
சரணடைந்தாராயின் பிழை பொறுத்த
ருள்வாயே! 56
ஞானமுங் கல்வியும்
நல்லன யாவுஞ் சேர்ந்தே யளிக்கும்
சேந்தா!
சேவலா! தணிகை வேல்முருகா!
ஏனமுங் கொம்புமணிந்த யிறைவனுக்
கன்று பிரணவப்
பொருளுரைத்த
சற்குருநாதனே! யென்
ஊனமும் நீங்கிட நீயே
உறு துணையாய் அருவ
முருவமுமாய்
யென்னுள்ளேயே யமர்ந்து பேசா
மோனமும் பெற்று முத்தி
வீடேறி நின்சரண பாதார
விந்தங்களில்
நிலையாக யிருந்திட யருள்வாயே!
57
எண்டிசையும் மெச்சும் சூரனை யயிலால் மயிலாக்கி
யருளா
லாண்டு கொண்ட தணிகை வேல்முருகா!
தண்டிகையில் தரணி
முழுவதுஞ் செந்தமிழிசையைப்
பரப்பிச்
சைவ நெறியை யோங்கச் செய்தோனே
கண்டிகையுங் கமண்டலமு
மேந்திய குறுமுனிக் கன்று
தமிழோ
சையைத் தெளிவுற ருரைத்த முருகவேளே!
வண்டிசையும் வாழையும்
வளர்ந் தோங்கும் வயலூர் வடி
வழகா!
யே தமில்லா பெருவாழ் வருள்வாயே! 58
பணியணை மீது துயில்
கொண்ட பாற்கடல் பரந்தாமன்
மருகா!
பார்வதியாள்குமரா! தணிகை வேல்முருகா!
அணியணியாய்த் திரண்டு
வண்டுகள் மொய்த்திசைக்கும்
கடப்ப
மாலையை தாங்கியத் திருமார்பா! யுலகில்
மணிமாட மாளிகையு
மாதர்களின் மயக்கமுந் துறந்து
நின்னை யேகாந்த நிலையில் சிந்திக்க யெம்மையும்
பணிகொண் டாண்டருள்தரும் காலமெக் கால மென
நின்னை யேகாந்த நிலையில் சிந்திக்க யெம்மையும்
பணிகொண் டாண்டருள்தரும் காலமெக் கால மென
யறியேனே
சிறியேனுக் குணர்த்தி யருள்வாயே! 59
படரல்லியு முல்லையும்
கடம்பும் மருக்கொழுந்தும் சந்தன
முந்
திருவெண்ணீறு மணியுந் தணிகை வேல்முருகா!
சுடர்மா மணியாயொளிரும்
வேலாயுதத்தை யேவி சூர
னையுங்
கிரௌஞ்சவெற்பையுபிளந்த தேவசேனாபதே!
குடர்நினங்களை சேர்த்து
பக்கமதி லென்பெனும் கழியைக்
கொண்டு
நரம்பெனும் நூலாற்றைத்த வாக்கைதான்
இடர்பட் டெமன்
வந்தெய்தும் போது வள்ளி தெய்வயா
னையுடன்
வேலொடு மயிலேறி வந்த ருள்வாயே! 60
சிறிதாயினு மடியேனுக்
கிரக்கம் காட்ட லாகாதோ!
கந்தா!
குமரா! கடம்பா! தணிகை வேல்முருகா!
தறிகெட்டு தாறுமாறா
யோடு மென் மனமானது
நிலையாயுரு
கொண்டோரிடத்தில் நின்றிட
குறியா தொன்று
மறிந்திலனே குமரேசா! குணமதாக்கி
பாரும்
பரிவுடன்நின் பன்னிரு விழியா லினி
அறியாது சிறியேன் செய்த
பிழைகள் யாவையும்
பொறுத்து
இரட்சித் தாண்டு கொண்டருள்வாயே! 61
எயினர் குலக் கொழுந்தை
குணமதாக்கி விருப்பமுடன்
மணமே
புரிந்த மலர்மார்பா! தணிகை வேல்முருகா!
குயிலும் குகா!
குருபரா! கார்த்திக்கேயா! சண்முகா!
என்று
கூவி யழகா யழைத்திடவே
மயில்வாகன பெருமானே!
சற்றேனும் பாருமையா! மலை
போல
தொடரு மென் மாளா வல்வினைகளை நீ
அயிலது கொண் டேவி
பொடியாக்கி யடியேனை நின்றன்
பொற்பாதமதில்
நிலையாக சேர்த்தருள்வாயே! 62
ஆவிதா
னல்லல்பட்டலைந்து கூடுவிட்டு பிரியுமுன்
ஆறுமுகவா! அமரர் தலைவா! தணிகை வேல்முருகா!
தூவிமா
மலர்களை நின் செந்தூர பாதமதில் நித்தம்
தூயவனாய் பணிந் தன்பா லேத்துவேனோ?
ஏவிவே
லாயுதத்தை யெமனணுகா தெனை னின்சேவடி
நீழலி லிருத்தி வந்த நாளில்
பாவி
நான் பலநாளும் செய்த பாவங்களை பொறுத்து படு
துயர் களைந்து பட்சமுடன் இரட்சித் தருள்வாயே! 63
மந்திரப் பொருளால்
மறையவர்கள் போற்றி துதிக்கும்
மாசிலா
மணியே! தணிகை வேல்முருகா! நின்
சிந்தூர பாதமதில்
சிலம்புந் தண்டையு மணிந்து சக்தி
வேல்
கொண்டு சீறிவரு மசுரரை யழித்து
இந்திரன் பதவியை மீண்டு
மளித்த தேவசேனாபதயே!நினை
எவ்வேளையிலு
மெங்கே நினைக்கினுந் தவறாது
வந்தருளும வடிவேலவா!
அக்கணமே யெமக்கு வற்றாத
செல்வமுஞ்
ஞானமும் கல்வியும் தந்தருள்வாயே! 64
செங்கழனி பதியி
லென்றுஞ் செழிப்புற்றிருக்குஞ் செவ்
வேளே!
செழுஞ்சுடரே! தணிகை வேல்முருகா!
பங்கேருக னெனை
யிப்படிப் படைத்தானே யென
பாரினில்
பரிதவித்துப் பலநாளு மலைந்து திரியாமல்
செங்கோட்டுச் செல்வக்
குமரா! உனை யென் நாவாலு
மாய்ந்த
நன்மலராலுந் தினந்தின மர்ச்சித்து
மங்காத வாழ்வு வளமும்
பெற்றிட சற்றேனுன்
திருக்
கடைக்கண் பார்வை செலுத்தி யருள்வாயே! 65.
சோலைமலையில் வள்ளி தெய்வயானையுட
னொயிலாய்
வாழுஞ்சிவசுப்பிரமண்யா!
தணிகைவேல்முருகா! கடும்
பாலையில் பச்சிளங்
கொடியைக் கண்டு பரவச
மெய்தும்
பறவைகள் போலா னந்தமுங் கொண்டு
காலையில் நின்
கருணைகூர் கமலமுகங்க ளாறுஞ் சக்தி
வேலு
மயிலுங் கண்டு களிப்புற்றேன் கந்தா!
மாலையில் பலவண்ண மலர்களை
சேர்த்து நின்திருவடிக்கே
சாற்றினே
னென்னையு ஆண்டருள்வாயே! 66
வைத்திய நாதனாய்
வந்தென் வல்வினைகளை மாய்த்து
மறுபடியுந்
தொடராம லறுக்குந் தணிகை வேல்முருகா!
தைத்தியருந் தானவரும்
வானவருந் தவத்தாற் றொழுதேத்தி
நின்திருவடியே
தஞ்ச மடைந்த வடிவேலவா! யான்
பைத்தியமாகி பாரினில்
பிதற்றி யலையாமல் நின்னரவிந்த
பாத
மலர்களை நினைந் துருகி நாளும்
ஐக்கியமா யென்னுள்ளே
யென்று மிருத்தி யானந்தவாரி
சொரிந்து
பெரும் பேற்றை யடைய யருள்வாயே! 67
கேளாய் ஈராறு செவிகளி
லொன்றிலேனும் என் மனக்
குறையை
தணிகை வேல்முருகா! கேட்டு
வாளா திராய் யென்
வறுமையைப் பார்த்தி னியேனும்
வலிந்
தாட் கொள்ளுவாய் பன்னிரு
தோளாய் முகம்பார்த்து
மூடன் யான் செய்த முன் வினைகள்
யாவையுந்
நீக்கி காத்திட யடியே
னாளாய் யுமக்கே
யடிபணிந் தல்லும் பகலு மன்பாற்
றொழுது
பலநாளும் தொண்டேபுரிய யருள்வாயே! 68
தகதகவென நீலமயிலேறி திருநடனமாடி வரும் குமரா!
யடியார்க்கு
நல்ல பெருமானாகிய தணிகை வேல்முருகா!
பகபகவென வுதிரங்
குதித்தோட பருவேலெய்தி பல
யசுரர்களை
மாய்த் தழித்த பாலகுமார சுவாமியே!
சுகசுகமென யிப்புவன
மெனச் சோம்பித் திரிந்த லைந்து
வீணாய்
செலுந்நாள் செலவிடாம லுனையென்றும்
குக்குகவென யகங்
குளிர்ந் தன்பாலாடிப்பாடி யானந்
தமாய்
துதித்திட யெமக்கு வரமே யருள்வாயே! 69
வளமையும் வற்றாத
செல்வமும் வாழ்வு மின்சொல்லு
முன்னை
துதிப்போர்க் கருளுந் தணிகை வேல்முருகா!
இளமையு மாக்கையுந்
நில்லா தென நினைந்தி ரவலர்க்
கன்ன
சொர்ணங் கொடுக்கவு முலகில்
உளவையு முள்ளாமல்
போவையு முவர் மண்ணாய்
கரையுந்
தினந்தினம் கைமாறுந் தேடிய செல்வத்தின்
அளவையு மதன் தன்மையு
மறிந்து தானிமி யற்றிடவுங்
கருணை
கூர்ந் தெமக் கருள்வாயே! 70
பருமயிலேறி பக்கமதில்
வள்ளி தெய்வயானையுடன் வேலுஞ்
சேவற்
கொடியுமாய் வருந்தணிகை வேல்முருகா!
ஒருநாளி லொருபொழு
தாகிலும் ஓம்முருகா வென்றென்
நாவா
லுச்சரித் துய்நெறியை பற்றிடவு மென்
இருநோய் மலத்தை
யொழித்து நின்திருப்பாத மலரை
யென்மேற்
பொருத்தி றொடரும் பிறவிக்கே துவாகிய
கருநோய் தீர்த்து
நல்லருள் புரிந்து யான் நற்கதியேயடைய
நாரணியின்
மைந்தா! வந்தருள்வாயே! 71
இன்ன காரணத்தி னாலிது
வந்த தென்ற றியாமல்
நொந்து
தவிக்கிறேனே தணிகை வேல்முருகா!
என்னதான் பழிபாவங்கள்
பாருலகில் யான் செய்தே
யிருந்தாலும்
பாராமல் பொறுத்து பதந் தந்து
முன்ன மிவ்வுயிர்
மும்மலச் சேர்க்கையினாற் மூழ்கி
முட்டுப்
பட்டுக் கட்டுண்டு குறுகி யிருந்தாலும்
பின்ன மிவ்வுயிர்
மீண்டுஞ் சிறை புகா வண்ணஞ்
சிறிதாகிலுங்
கண்பார்த் திரட்சித் தருள்வாயே!
72
மெய்ஞான விளக்கேற்றி
யுள்ளளமதில் மெய்ப் பொருளை
யறிந்திட
முத்திக்கு வழிகாட்டுந் தணிகை வேல்முருகா!
பொய்ஞான புல்லறிவுக்
கொண்டு புத்தி பேதலித்து போகும்
வழியே
பின்சென்றிப்பூவுலகி லிதுநாள்வரை
செய்ஞான மொன்று
மறிந்திலனே சிறியேன் சித்தி பெற்று
சிவானந்த
வாழ்வில் மூழ்கி யைக்கியமாகிட
உய்ஞானம் பெற்றுன்
அடியினில் சேர்ந்திட வழி யாதென
யடியேனுக்
கருணையுடனுபதேசித் தருள்வாயே!
73
ஆலாலமுண்டோ
னருமை மைந்தா! மாசில டியார்க ளுள்ள
மதில் தேடியே குடிகொளுந் தணிகை வேல்முருகா!
தாலாலோ
வென்றறுவ ரன்று தாலாட்ட செந்தழலாய்
தாமரையில் வந்துதித்து தவழ்ந்து வளர்ந்து சத்தி
வேலாலும்
மயிலோடும் வெற்றிக்கரங்க ளீராறுங் கொண்டு
சூரனை வதைத்த சுப்பிரமண்யா! யென்வினை தீர்த்துப்
பூலோகமதில்
பிறவாம லிறவாமல் நின்சேவடியின் கீழென்
றும் பாடி பணிந்திட நிலையாய் யிருத்தி யருள்வாயே! 74
சுடர்
மாமணி மார்பில் சுத்த வெண்ணீ றுங் குராவுங் கடப்ப
மலர் மாலையுமணிந்த தணிகை வேல்முருகா!
படர்
வாழையும் பலாவுந் தேனுந் தினையுந் நீரும்
பொழிலுமாக வேடர்கள் கூட்டமாக வாழும்
அடர்
கானகத்தி லாயலோட்டி திரிந்த வள்ளிமானுக்காக
யானைமுகவனை துணை கொண்ட குமரா! யென்
இடர்
சங்கைகள் யாவுந்நீங்கி யிருந்த யிடமில்லாம
லேகிடயிமை யவர் தலைவா யென்ற ருள்வாயே! 75
கருணை கூறுங் கமலமுகங்
களாறு மயிலு மபய
கரங்களுங்
கொண்ட தணிகை வேல்முருகா!
அருணையி லன்று
அருணகிரிக்காக வேலு மயிலுங்
கொண்டா
னந்த நடமாடி வந்த ஆறுமுகவா!
வருணனை யன்று நான்மாடக்
கூடலில் வேல் கொண்டு
வற்றிட
செய்த உக்கிரகுமரா! உமையாள்சுதனே!
தருணமிது வேளை யறிந்து
தயாபரா! யினியெம்மையுந்
தயவுடனே
தற்காத் திரட்சித் தருள்வாயே! 76
வள்ளிமலையில்
வேடனாய் 'வேங்கை
மரமாய் குறவர்கள்
தலைவனாய் வடிவெடுத்ததணிகைவேல்முருகா!
துள்ளித்
திரியு மான்களிடையே யாயலோட்டு மக்குறவர்
குலக் கொழுந்தை மணங் கொண்ட சுப்பிரமண்யா!
புள்ளி
மயிலேறி புவனமெலா மொருநொடியில் வலமாய்
வந்த பொன்னொளிர் மிகுங் குமரா! யெமக்கு
அள்ளித்
தாருமய்யா! நின்னருளை யென்றும் ஆறுமுகவா!
அடியேனானவ மலங்களை யொழித் தருள்வாயே! 77
சங்கின் வெண்மை
சுட்டால் தெரிவது போல சான்றோர்க்கு
பெருமையை
யருளுந் தணிகை வேல்முருகா!
மங்கி லென்மதியு மனமு
மாசுநீக்கி மந்திரப் பொருளால்
திருத்தி
மாளாநா ளருளும் மாணிக்கமே!
பொங்கில் கோபம்
பொருதிக் களைந்து பொன்போல
பொலியச்
செய்து போதகச்சொல் லருளி யரனார்
பங்கில் பாகங்கொண்டாள்
பாலகனே! பரிவோ டெனை
பார்த்து
பலநாளுந் தொண்டே புரிய யருள்வாயே! 78
எடுத்த விக்குரம்பையின்
வடிவும் வயதுஞ் செயலும்
நாளாய்
திங்களாய் கழிகின்றதே தணிகை வேல்முருகா!
உடுத்த வுடுப்பு
முற்றாரு முறவினரு முரியப் பொருளு
மிவ்வுலகி
லொவ்வொன்றாய் நீங்கும் பட்சத்தில்
விடுத்த விவ்வுயிர்
மீண்டுங் கருவாய் வந்துதித்து வாடி
வதங்காமல்
வடிவேலவா! நீயும் வேலொடு தோன்றி
தடுத்து தக்க
தருணத்தில் தமியேனை தற்காத் துந்தன்
தாமரை
பொற்பாதங்களில் சேர்த்த ருள்வாயே!
79
வீரியத்தில் வந்துதியா
விமலன் புதல்வா! வெற்றி
வேலாயுதா!
வினை தீர்க்குந் தணிகை வேல்முருகா!
சூரியனொடு சோமனு
மற்றுமுள்ள வானவர் யாவரையுஞ்
சிறை
மீட்ட தேவ சேனாபதயே! நயவஞ்சக
நாரியர் றம்மையலில்
சிக்கி நலிந்து போகாது நதிபுத்திரா!
நீயெமக்
கென்றுங் குருவாகி நற்
காரிய சித்தியும்
பரகருணை பெருவாழ்வுந்தந்து பன்னெடுங்
காலமும்
பாடிப் பணிந்திட யருள்வாயே! 80
வகைதத் தவரவர்
வல்வினைக்கேற்ப வரமளிக்கும்
வடிவே
லழகா! தணிகை வேல்முருகா! ஈசனை
பகைத்து பழிச்சொற்கள்
பலகூறிய தக்கனை சிரமரிந்த
வீரபத்திரன்
தமையா! வரைபோ லசுரரை
துகைத் தழித்த சக்தி
வேலாயுதத்தை கொண்ட சிவ
சுப்பிரமண்யா!
புர மூன்றையு மொன்றாகவே சேர்த்து
நகைத் தழித்த நமசிவாய
பெருமானின் நாமமதையுந்
நாளுந்
நினைத்து நாவாற்றுதிக்க யருள்வாயே! 81
புயவலிமையும் போர்
கோலமுங் கொண்ட சூர பதுமனை
யிரு
கூறாய் பிளந்த தணிகை வேல்முருகா!
முயலகனை காலாற்
மிதித்து முத்துத் தாண்டவங்கள்
பலவே
புரிந்த முக்கண்ண னினிய புதல்வா !
இயன்றவரை யிரவலர்க்
கின்னமுத ளித்திடவு
மெப்போதுந்
நின் நாமங்களை கூறு மடியா ரல்லாது
நயவஞ்சகர்
கயவர்நட்பையென்றுந்நாடாது நற்காரியங்களே
செய்யவுஞ்ஞானகுருவே
யெமக்கருள்வாயே! 82
நாகை காயாரோணத்தார்
நற்செவியி லன்று பிரணவ
பொருளின்
சார முரைத்த தணிகை வேல்முருகா!
காகையுங் கூகையும்
களித்தே யுண்ணு மிம்மாயக்
கடத்தை
சதமென்று நம்பி யின்புற் றிறுதியில்
சாகைக்கே வழி தேடுவ
தல்லாமற்றுன்னதமாகிய
நின்
சச்சிதானந்த சொரூபத்தை பற்றி யுய்ந்திட
தோகை மயில் வாகனா
தொடருந்வினையை களைந்து
துரிசறுத்
தென்னை தூயவனாக்கியருள்வாயே! 83
உருக்கமுடனுன்னையே
வேண்டி பல நாளுமுறையிட்டே
னென்னுள்ளக்
கருத்தினை தணிகை வேல்முருகா!
செருக்குடன்
சிற்றின்பங்களாவையுந் நீக்கியருளுந்
சேந்தா!
உன்றன் ஞான பாதங்களில் சரண் புகுந்தேன்
எருக்கம்பாலு மேதுமில்லா
வேளையி லெடுத்தாள் வார்
போ
லெல்லா மிழந்த நிலையில் நீயெம்மை சீர்தூக்கி
இருக்க யிடமு முடுக்க
வுடையு முண்ணவுணவுங்
கொடுத்தொ
ருநிலை கொள்ள யருள்வாயே!
84
வஞ்சி குறமாதுதனை மணக்க
குறவர் கூட்டத்தில்
குறவனாய்
கோலங் கொண்ட தணிகை வேல்முருகா!
பஞ்சயிந்திரியங்களை
பக்குவப்படுத்தி பகர்கின்ற சிவா
கமங்களை
போதித்து நின்பொற்றாமரை பாதங்களை
நெஞ்சில் நினைத்து
சுவைத்து சுத்த நிர்குணம் பொருத்திய
பேரானந்தங்
கொண்டு தொழு துருகி
துஞ்சில் தூய
வெண்ணீறணிந்த திருமுகமும் வேலொடு
மயிலுஞ்
சேவற்கொடியந் தோன்றிட யருள்வாயே! 85
படுவேன் பாடுபடச்
சொன்னா லுன்னையே பலநாளுந்
நினைந்து
தணிகை வேல்முருகா! வூழ்வினையை
சுடுவேன் சுடச்சொன்னால்
தினம் திருப்புக ழெனுந்
நாமங்களாற்
பாடியாடி பணிந் தன்பா லழுது
நடுவேன் நடச்சொன்னா
லென்னுள்ளமதிற்றிடமாய்
சரவணபவ
வெனும் ஆறெழுத்தை யாசைகளை
விடுவேன் விடச்சொன்னாற்
வெற்றி வேலவா! வினையேன்
வெகுளியை
வேண்டியவா றொழித்து ருள்வாயே! 86
ஆடி தெப்போற்சவத்தில்
சரவணபொய்கை தெப்பலி
லழகாய் வலம் வருந்
தணிகை வேல்முருகா! உனை
பாடி பக்தர்கள்
புட்பகாவடிகள் கொண்டு பலவாராய்
பரவசமெய்தி யலையலையா
யானந்தமாய் யாடி வந்திட
தேடி வள்ளி
தெய்வயானையுடன் சென்று நின்னடியார்களை
வருத்தமுறாமற்றாட்கொண்
டருளுந்திருக்குமரா!
நாடி யுன்னை பலநாளு
முறையிட் றொழுத ரற்றினேனே!
சற்றாகிலு முகம்
பார்த்த ருள்வாயே!
87
கந்த கோட்டமதில்
கருணையை வாரிப் பொழியுங் கந்த
சுவாமியே!
தணிகை வேல்முருகா! எந்தன்
பந்த வினைகளை யுந்தன்
பன்னிரு விழியால் பார்த்தறுக்கும்
பழநியாண்டவா!
பரமகல்யாணியின் பாலகா! பரிவாக
எந்த நேரத்திலு
மெங்குமெனக்காதரவாய் தோன்றி யிவ்
வுலகி
லடியேன் படுதுயர் களைந்து வினையேன்
உந்தி தடத்திற்
றோன்றும் பிணியாயின யாவும்
உமையாள்
சுதனே! யுடனே தீர்த்த ருள்வாயே! 88
திருப்புகழ்
திருப்படித் திருவிழா காணுந் திருமாற் றனக்கும்
மருகா! தணிகை வேல்முருகா! அடியார்க்கு
தருப்புகழ்
சிவனார்தம் திருச்செவியில் பிரணவ முரைத்த
சிவசற்குரு நாதா! உய்நெறிக் கென்று முதவா
கருப்புகழ்
கூறி கயவர்தம் கடைவாசல் சென்று கையேந்தி
நிற்காமற் றுந்தனி ணையிலா பேரருளால்
வருப்புகழ்
வாக்கும் வடிவும் வளமும் பெற்றுனை
யென்றும் மறவாதிருக்க வரமருள்வாயே! 89
பாசனை பந்தமெனுந்
தொடராற் கட்டுண்டு பரிதவிக்கு
மெந்தனை
தணிகை வேல்முருகா! அசுரர் குல
நாசனே! யமரற் றலைவனே!
யயனை குட்டி சிறையி
லடைத்தவனே!
யானந்த சொரூபனே! நினை
வாசனை பொருந்திய வாடா
மலர்கள் கொண் டர்ச்சித்
தீடிலா
நின்பொற் பாத மலர்களுக்கு என்றென்றும்
பூசனை புரிந்து பொல்லா
யிக்குரம்பையினின்று வேறாகி
மீண்டும்பிறவாதிருக்கவோர்போதகச்சொல்லருள்வாயே! 90
வேயார் குழலுமைபங்கர்
விரும்பும் வெற்றிவேலா! வேடர்
குலக்
குறமகளை விரும்பிய தணிகை வேல்முருகா!
நேயா யடியவர்க்
கென்றுந் நிர்மலமான நாதவேத சொரூபா!
நிணமொடு
குறுதி நரம்பென்பால் பிணைந்தயிம்
மாயா யாக்கையாற் மீளாத்
துயர் கொண்டு மாண்டொழி
யாமற்
சேவேறு மீசர் நுதலிலுதித்த
தூயா யுன்னேயே துதித்த
ரியயுன் திருப்புகழை யன்பால்
பாடி
தொழுதேற்றிட யெமக்கருள்வாயே! 91
வீடுநாள் என்றோவென
யெமக்கு தெரியாது வேலவா!
விமலனார்
புதல்வா! தணிகை வேல்முருகா! உனையே
பாடுநாள் தவிர வேரொன்று
மறியேனே பராபரா! பந்த
மெனும்
கயிற்றால் கட்டுண்டு தவிக்கு மெனைச்
சாடுநாள்
வெகுதொலைவிலுள்ளதோ! வேண்டேனே
என்பா
லிந்த விளையாட் டென்று மன்பா லுனைக்
கூடுநா ளென் றென்பதை
கூர்வேல் கொண்ட குமரா!
சிறியேனுக்கு
ஞானத்தாலுணர்த்தி யருள்வாயே! 92
குராவுங்குவளையுஞ்
செங்கழு நீருஞ் சேர்த்து சித்திர
மார்பினிற்
சிறப்பாக அணியும் தணிகை வேல்முருகா!
தராதர மறிந்து
தக்கோர்க்குத் தன்னலம் கருதாதென்றுந்
தான
மிடுவார் தமக்கு யூழ்வினையின் பயனாக
வராது வரும் வல்வினைகளை
மாய்த்து வரங்கள் பல நல்கி
பேரானந்த
வாழ்வளித்துளமதில் குடிகொளும்
விராலி மலைவாழ் வீரா! வெற்பைத்துளைத்த
தீரா! அடியார்க்
கருளும்
குணசீலா! அடியேனுக்குமருள்வாயே! 93
என்பாற் பாவை
செய்தெடுத்தாட் டுவிக்கு மெந்தை
யெம் சிவனார் புதல்வா! தணிகை வேல்முருகா!
தன்பாற் வரும
டியார்கற்றுயர் தீர்த்தல் தன்தலையாய
கடனல்லவோ! தங்கமயில் வாகனா! யுனை
அன்பாற் றொழுதரற்றி
யென்குறைகளை கூறினேனே
என்பாற் கருணை காட்டி யருளும் கந்தா!
உன்பாற் நினைந்
தோலமிட்டோடாய் தேய்ந்தொழிந்தேனே
யினியாகிலு முருக்கமுடன் வந்த ருள்வாயே! 94
பொருள்வைத்தச் சேரியில்
வெகு பொருத்தமாயமர்ந்த
பொன் னொளிர் சுடரே! தணிகை வேல்முருகா!
இருள்வைத்து பின்னொளி
சேர்த்து ஏற்றதாழ்வும் வைத்த
தென்ன மாயமோ! அறியேனேயுன்றன்றிருவருளைநின்
சுருள்வைத்த
முடியினழகும் வெண்ணீறணிந்த நுதலும்
வேலு மயிலுங் காணும் பேறு பெற்றார்கள் மீது
அருள்வைத்து
அல்லல்நீக்கி யுனையென்றும் மறவா யானந்த
பெறுவாழ்வை
தந்த டியினில் சேர்த்த ருள்வாயே! 95
நேசமுடனின்திருவடிக்கே
நினைந்து நித்த மழுது தொழு
துளமதிற்றுருகினேனே தணிகை வேல்முருகா!
பாசமுடன் பல நாளு
முனைப்பாடித் திரிந்தேனே பாலகுமரா!
என்மேற் பாராமுகமாயிருப்பது தானேனோ
வாசமுடன்மயிலேறி வள்ளி
தெய்வயானையுடன் வர
வேணுமே வயலூர்வாழ் வடிவழகா! பழவினையாற்
தோசமுடன் றொடரும்
துஞ்சலறுத்து தூயவனாக்கி நின்
திருவடிக்கு தொண்டே புரிய நற்கதி யருள்வாயே! 96
வாரூர் வனமுலையாள்
பங்கன் மைந்தனாய் வந்துதித்த வடி
வேலவா! தணிகை வேல்முருகா! மந்திர பொருளை
பாரூர் அறிய பலத்
திருப்புகழைச் சொன்ன அருணகிரிக்
கன்று பதேசித் தருளிய ஆறுமுகவா!
போரூரில் போர்க்
கோலங்கொண்டு கிரௌஞ்சமாய் நின்ற
தாரகனை வேல்கொண்டு கடாவிய வேலவா! உன்
தேரூரு மழகையுந் திவ்ய
தெரிசனமுங் காணும் பாக்கிய
மதை கந்தா! அடியேன் கண்களுக்க ருள்வாயே! 97
எட்டுக்குடியிலுயிரோவியமா
யொளிரு முன்னத வடிவே!
உண்மைப் பொருளே! தணிகை வேல்முருகா!
முட்டுப்பட்டேனென்
வாழ்நாள் முழுவதும் வீணாய் கழிந்தே
போனதே ஒருபயனையுங் கண்டிலனே சண்முகவா!
தட்டுத்தடுமாறி
யிப்பிரபஞ்ச வாழ்க்கையில் சிக்கித் தவியாய்
தவிக்கு மெந்தன் ஆவிதானொருநாள் வேறாகி
கட்டுடன் சேர்த்தங்கமதை
கரியாக்கி கரைத்து விடாமற்
நின்பொற் கழற்கு சேர்த்தருள்வாயே! 98
இடைக்கழியி லிருவினைகளை
களைய யேகாந்தமா யினிய
வடிவாய் நின்றோனே இறைவா! தணிகை வேல்முருகா!
நடைபயிலுங் குழவியாய்
வளர்ந்து நாளடைவி லாளாகி
வாலிபமும் வடிவுங் கழிந்து வயதும் முதிர்ந்து
கடையி லைம்புலன்களுந்
தன்செயலிழந்து செய்வதறியாது
தவித்தா விதான் கூடுவிட்டுப் பிரிந்து
விடைபெறும் வேளையில்
வேலவா! நீவேலுடன் மயிலேறி
யெமக்கு கதியாய் தோன்றி யிரட்சித்த ருள்வாயே! 99
நரிதனை
பரியாக்கி பரிதனை நரியாக்கி தன்னடியாரை யாட்
கொண்ட பரம்பொருளின் புதல்வா! தணிகை வேல்முருகா!
சிரித்து திரிபுரமதை
தீயெழச் செய்தவனுதலில் செந்தழலா
யன்றுலகமுய்ய வந்துதித்த உமையாள் பாலா!
விரித்து தோகையை வீறு
கொண்டெழும் நீலமயிலிலேறி
வந்தென் வினைகளை களைந்து வேண்டியபடி
பரிவாகவே யான் பலநாளுஞ்
செய்த பாவங்களை போக்கி
யட்டமா சித்திகளையுபதேசித்தருள்வாயே! 100
அட்டநேத்திரபுரத்தில்
வெகுவானந்தமாய் ஆறுமுகங்களுட
னமர்ந்த யற்புத வடிவே தணிகை வேல்முருகா!
தொட்ட மாத்திரத்தில் சில்பமுனிவருக்கு
பாரறிய கண்ணும்
விரலு
மீந்தருளிய என்கண் யெழில்வேலவா!
நட்ட மாத்திரத்தில்
முளையா நல்விதையாயினும் நாட்கள்
பலசெல்லு மானாலும் விதியெனுஞ் சுழியில்சிக்கி யென்
விட்ட குறையும் விடாத
குறையும் யாதாயினுந் துடைத்
துன்பமில்லா பேரானந்தப் பெருவாழ்வு தந்தருள்வாயே! 101
வந்தாரை வாவென் றழைத்து
வரங்கள் பலகொடுத்து
வணங்குமடியார்க்கருளுந் தணிகை வேல்முருகா!
நொந்தாரை நோக்கி நோய்
நீக்கி நுண்ணறிவையும் புல
னைந்தையு முனதாக்கி யன்றலர்ந்த வாசமுள்ள
மந்தாரை மல்லி முல்லை
மருக்கொழுந்து சண்பகம் முதலா
மலர்கள் கொண்டு நிட்டையுடனித்தம் நின்றன்
செந்தாமரை மலர்ப் பாதமதை
சிந்தையி லிருத்தி சிந்தித்
தர்சித்து தொழுது வணங்கிட யருள்வாயே! 102
உள்ளிருக்கு
மனத்தா லொன்றி நின்னையே யுணர்ந்து
யுணர்ந் தென்னையே மறந்தேன் தணிகை வேல்முருகா!
அள்ளி
தாருமயா நின்னருளை வேண்டிய மட்டு மென்றா
னந்தவாரி சொரிந்திடவே பார்ப்பவர்க ளெந்தனை
எள்ளி
நகையாடா வண்ண மிப்பாருலகில் பிறவியெனு
மீளா பெரும் பள்ளமதிலி னியாகிலு மடியேனை
தள்ளி
விடாமற் கருணை கூர்ந்து கடைக்கண் பார்வையாற்
றீடேற்றி நின்னிரு தாள்களை யருள்வாயே! 103
கத்தூரி கமழ்
சாமந்தியும் மருக்கொழுந்துங் கடப்ப மலரு
மணியும் மலர்மார்பா! தணிகை வேல்முருகா!
துத்தூரி துகுதுகு
தூவென எக்காளமூதிய யசுரரை சக்திவேல்
கொண்டு சிதைத்தழித்த சரவண பவானந்தனே!
வித்தூறி வினையா
லிரண்டாய் மூன்றாய் பிறப்பெய்தி
பாழ்பட்டுச் சிறைப்பட்டு வாடும் டியேன் சிந்தையில்
சித்தூறி சிவமாய்
பழமாய் செழுமையாய் நின் சேவடியை
நிலையாய் யிருத்தி யாட்கொண்டருள்வாயே 104
.உடலென்ற கும்பிக் கோயாம
லிரவுபகலும் உணவென்ற
யிரைதேடி திரிந் தலைந்து தணிகை வேல்முருகா!
கடலென்ற யிப்பெரும்
பிறவி சுழலில் சிக்கிக் கடக்கலாகாது
கதிகலங்கி மதிமயங்கி பேதையாகிய நானும்
படலாகுமோ யின்னமும்
பன்னிருகை வேலவனே! நீயும்
யுந்தன் வேல் கொண் டெந்தன் துயரங்களை
சுடல்வேண்டுமே
சுப்பிரமண்யா! மிக்குசோதிக்க வேண்டாமே
தாங்காது முறையிட்டேனெமை காத்தருள்வாயே! 105
உம்பர்கள் சிறை நீக்கி
யுரியவனுக்கு பதவியை யளித்து
தெய்வயானையை மணந்த தணிகை வேல்முருகா!
தம்பிரான் றோழனாகிய
வன்றொண்டன் இல்லாளில்ல
மதை தேடியன்றிருமுறை தூது சென்றருளிய
எம்பிரான் எந்தை ஈசன்
திருச்செவியில் சற்குருவாகி
பிரணவப்பொருளுரைத்த சுவாமிநாதப் பரம்பொருளே!
நம்பிரான் நம்மையு
மாள்வான் என்றே யுரைத்த யருள்
மாலைகளைவிருப்புடன் கேட்டு வினைநீக்கியருள்வாயே! 106
சொக்க தங்கமே! சுடர்
மாமணியே! மாசில்லா மாணிக்கமே!
குன்றுதோராடும் குமரனே! தணிகை வேல்முருகா!
சுக்குக்கு
நிகரானவைத்தியமில்லை சுப்பிரமண்யனுக்குநிக
ரான தெய்வமில்லையென்றுநின்றிருவருளா லுணர்ந்து
பக்குவமாய் பலகாலம்
பணிந் துருகி தொழுது பெற்ற
யருள்மாலைகளை யுளமார நினைந் தன்பால்
நெக்கு நெக்குருகி
சிந்தையில் புக்கச் செய்வோர்க்கு தக்க
வரமே நல்கி நின்றிருவடியில் சேர்த்த ருள்வாயே! 107
காற்பத்துநாழிகையில்
நின்பாலன்பால் சொன்னகவிக
ளனைத்த்தையும் விருப்பமுடன் தணிகை வேல்முருகா!
ஏற்பதுன் செயலே இனி
வேண்டேனேயிப்பிறவி வள்ளி
தெய்வயானையுடன் ஏறுமயில் வாகனாயிட்டமுடன்
நாற்பத்தெண் முக்கோண
சக்கரமதில் சரவணபவனாய்
நின்று ஆரணி யடியார்க் கடியவன் சிந்தையிலுணர்த்திய
நூற்றெட்ட ரருள்மாலைகளை
தினம் நிட்டையுடன் கேட்
டோ துவார்க்கு நினைத்தது யாவும் வரமாய் யருள்வாயே! 108
!