சடையொடு யோர்பிறையும் புனலும் அரவும் இடையினில் சுழல் புலிகச்சுவுந் தேயும் உடைநாதனை உருகி வணங்கிட வினையகலி சுடலையினில் மறுபடி விழுவது தவிருமே! சடையொடு ஓர் பிறையும் புனலும் அரவும் இடையினில் சுழல் புலி கச்சுவுந் தேயும் உடை நாதனை உருகி வணங்கிட வினை அகலி சுடலையினில் மறுபடி விழுவது தவிருமே! புனல் – கங்கை, புலி கச்சு - புலித்தோல் ஆடை அரவு – பாம்பு, அகலி – நீங்கி, விலகி, சுழல் – சுற்றிய, சுடலை – சுடுகாடு, தேயு - நெருப்பு, தவிருமே - விலகுமே பொழிப்புரை:- சடையொடு ஓர் சந்திரனையும் நீரையும் (கங்கை) இடுப்பில் அணிந்த புலிதோல் ஆடையும் நெருப்பும் கொண்ட தலைவனை உருகி தொழுதிட வினை நீங்கி சுடுகாட்டில் மீண்டும் எரிக்கப் படுவது விலக்கப்படுமே . ! கருத்துரை:- திருமுடியில் செஞ்சடையொடு இளம்பிறையாகிய சந்திரனும், புனலாகிய கங்கையும், பாம்பும், இடைதனில் புலித்தோல் ஆடையும், திருக்கரங்களில் ஒன்றில் அக்கினியும் உடைய நாதத்தின்...