விருபாட்சீச்சுரர் மாலை Virupatchechurar Malai
விருப்பாட்சீச்சுரர் மாலை அத்திமூர்- போளுர். சுவாமி - விருப்பாட்சீச்சுரர் அம்பாள் - பருவதவரத்தினி பண் - கொல்லி இராகம் - நவரோஸ் உ திருச்சிற்றம்பலம் ஆற்றி லேடெதிர்த்தானை ஆறங்க மானானை அகிலபுவன நாயகனை அருவுருவமானானை கூற்றை யுதைத்தானை கொடிய முயலகனை மிதித்தானை கோறிய பொற்கிழி தந்தானை கோள்களை படைத்தானை காற்றிலுயிரை வைத்தானை கனியமுது தந்து என்றுங் காலடியில் வைத்தானை காசிபர் கைதொழுத அத்திமூர் வேற்கண் மங்கையாள் பருவதவர்த்தினி யுடனுறையும் விருப்பாட்சீச்சுரனை தொழுதிட வினை மாளுமே! (1) ஆற்றில் ஏடு எதிர்த்தானை ஆறு அங்கம் ஆனானை அகில புவன நாயகனை அரு உருவம் ஆனானை கூற்றை உதைத்தானை கொடிய முயலகனை மிதித்தானை கோறிய பொற்கிழி தந்தானை கோள்களை படைத்தானை காற்றில் உயிரை வைத்தானை கனி அமுது தந்து என்றுங் காலடியில் வைத்தானை காசிபர் கை தொழுத அத்திமூர் வேற்கண் மங்கையாள் பருவதவர்த்தினி உடன் உறையும் விருப்பாட்சீச்சுரனை தொழுதிட வினை மாளுமே! ஆறு - வைகை, பொற்கிழி - பொன் மூட்டை, புவனம் - உலகம், கோள் - கிரகம் அரு - உருவமற்ற, கனி - மாங்கனி, கூற்றை - இயமன், கோறிய - வேண்டிய, ஆறு