எழு முனிவர் பூசித்தானை சிவ குமரனுந் தொழுத நற்சுனையை யுடையச் சிவனை சொல்லீர்! பழுதற ஓத புகழடைவீரும் குலமும் விழுதென படர தனமும் வேண்டியதீவானே! எழு முனிவர் பூசித்தானை சிவ குமரனுந் தொழுத நற்சுனையை உடையச் சிவனை சொல்லீர் பழுது அற ஓத புகழ் அடைவீர் உம் குலமும் விழுது என படர தனமும் வேண்டியது ஈவானே ! நற்சுனை - நல்ல நீரூற்று, குளம் , விழுது - வேர், கிளை, பழுதற - குற்றமில்லாது, தனம் - செல்வம், ஓத - பாட, படித்து. கருத்துரை: - சப்தரிஷிகளான ஏழு முனிவர்கள் அத்திரி, பாரத்வாஜர், ஜமதக்கினி, கௌதமர், காசியபர், வசிஷ்டர், விசுவாமித்திரர் ஆகியோர் தொழுது வணங்கிய ஈசனை, சிவகுமாரனாகிய முருகப்பெருமான் துதித்து பூசித்த நல்ல நீர் ஊற்றாகிய குமார தீர்த்தத்தை கொண்ட ஈசனை போற்றி புகழ்வீர். இங்கு வீற்றிருக்கும் வேம்புலீச்சுரனை பழுது இல்லாமல் பக்தியோடு பாடி பரவி வழிப்பட்டால் உங்கள் குலம் ஆலம் விழுது போல் படர்ந்து என்றும் தழைத்து...