அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi
அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி Arulmigu Angalamman Anthathi [ PDF ] புற்றுக் கோயில் உறையும் அருள்மிகு அங்காளம்மன் அந்தாதி. விநாயகர் காப்பு. பூரண கும்பமதில் பொலிவுற்றிடும் பவானியை நாரணன் சோதரியை நளினமிகு நங்கையை, ஆதி ஆரண முதல்வன் ஆரணங்கை அங்காளியைப் பாட வாரண முகத்தனே! வரம் சித்தி ஞானம் அருளுக! மானே ! மரகதமே ! மாசிலாயென் மாணிக்கமே ! மலர் தேனே சொரிந்தேன் திகைப்புற்று நின் திருப்பாதங்களில் யானே பெறுவது யாவும் இனிதே யமைய வருளுக! வானே புகழ் அங்காளியே வரந்தருங் கற்பகமே! (1) கற்றைவார் சடையனார் கனியே! கண்மணியே! கதியே! நற்தவத்தோர் போற்றும் நங்கையே நாடும் பொருளுஞ் சுற்றமும் நீயே என்றிருந்தேன் சொல்லொணா இடர் வரும் அற்றைக்கு வந்து அருளுக அங்காளியே என்னுளே ! (2) என்னுளே வாழ் ஈசன் இடபாகத்தவளே ! இமகிரி மன்னன் பெற்ற மாதுளம் பூவிதழ் முகத்தவளே ! அன்னமே! அங்காளியே ! அலங்கார வல்லியே!. உன்னையே தொழுதேன் உய்வித்து அருளாய் பொற்பதமே ! (3) பதமே நாடி தினம் பாங்குடனே சொன்னேன் குறைகளை இதமாக ஓர் சொல் பகராயோ? எளியேன் முன் இரங்காயோ? உதய சூரியன் ஒளி பிழம்பாய் ஓங்காரரூபமாய் அதரமே திறவாய் அங்கா