திருப்பழநியங்கிரி பவழ மாலை Thiru Palaniyangiri Pavaza Malai
உ
திருப்பழநியங்கிரி பவழ மாலை
விநாயகர் காப்பு
வேழமுண்ட என்ற திருப்புகழ்
வேழமுண்ட என்ற திருப்புகழ்
சூழ வரும் வினையோடு சுமையான இப்பிறவியும்
பேழ யறும் பழநிமலை பவழமாலையைப் பாட
வேழமுக விநாயக! வேண்டிய ஞானமதை
ஆழமொடு அடியேற்கருளுக குறைவிலாமலே!
முருகன் அருளால் விதியை வென்று நற்கதி அடைய
அணிப்பட்டணுகி என்ற
திருப்புகழ்
கதியைப் பெருவதற்கருளை உன்கடை விழியாற் காட்டி
விதியை வெல வேண்டிய வழியைச் சொல வருகவே!
நதியைச் செஞ்சடையிற்சூடி நகைத்தவர் மைந்தா உலகில்
அதியற்புத சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 1
முருகன் நற்றாளை பற்றிட
அகல்வினை என்ற திருப்புகழ்
நற்றாளை பற்றுவதும் நாயேனுக்கரிய பொருளோ?
குற்றாலத் துறையுங் குமரா! கோழிகோடி யழகா!
கற்றார்க் கெளியவா! கனிவாயிற் பகர்வாய் ஓர் சொல்
போற்றா ளொளிற் சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 2
முருகன் அருளால் வழிபாடு பயனுற்று பதிஞானம் பெற
அருத்தி வாழ்வொடு என்ற திருப்புகழ்
பராவிய வழிபாடு பயனுற்றொறு பதிஞான
வராவழி சித்திக்க உன்னருளை வாரிச் சொரிகவே!
கராபட கொன்றை முடி கடவுளார் மெச்சிய கமழுங்
குராப்புனை சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 3
முருகன்
அருளால் அவன் திருவுருவை தரிசிக்க
அபகார நிந்தை என்ற திருப்புகழ்
நினைந்தருள் பெறுவதற்கு நிலமதிலே நிலையான
முனையேதுந் தேடியுந் திரிந்தும் முடியாது தொடரும்
வினையோடுழலு மடியேற்குன் வடிவை காட்டிடுக!
எனையாளுஞ் சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 4
முருகனே தாய் போல் வந்து தாயை புரிய
வாரணந்தனை என்ற
திருப்புகழ் .
நாயேனுள் நீயருள் தோணிடும்படி நாளும் வந்து
தாயேப் போல் பரிவாக தயை புரியாதாயின்
ஒயேனினி யானுமுயர் கருணை புரிக! உமையின்
சேயேயென் சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 5
மனதை முருகனுக்கு அடிமையாக்க
வஞ்சனை மிஞ்சிய என்ற திருப்புகழ்
சுகந்தனையே
யுகந்துடல் மெலிந்து குருகி சேர்ந்தயிவ்
வகந்தனை யுனக்கே அடிமையாக்கிடாது மாய
சகந்தனை பற்றி மகிழ்ந்துஞ் சுற்றியும் மாளாது அருளை
உகந்திடுக! சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 6
நித்தம் முருகனை பாடும் அன்பை பெற்றிட
கோல குங்கும என்ற திருப்புகழ்
நித்தம் பாடுமன்பது தந்தாண்டு நிர்மலமாம் நினது
உத்தம ஞான பாதமதிலே அழுது உருகிட
எத்தனாமெனை யேற்றி இன்புற்றிட அருளிடுக!
அத்தனே! சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 7
முருகன் அருளால் நினைத்த காரியம் முடிந்திட
போதகந்தரு என்ற திருப்புகழ்
வீறு கொண்ட விசாகா! வேடர்கள் குல தலைவா!
ஏறு கொண்ட யிறையவரிளைய புதல்வா! குமரா!
நீறு கொண்ட யழகா! நினைத்தது முடித்திடுக நிந்தஞ்
சாறு கொளுஞ் சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 8
முருகன் பாதங்களுக்கு ஆய்ந்த மலரால் அர்ச்சிக்க
நாலிலங்க என்ற திருப்புகழ்
மோன
சுந்தர யோகமது தந்து மூழ்கி நிதந்நிதம்
ஆன
மலர்கள் ஆய்ந்தெடுத்திரு பாதமதில் சாற்றி
கான
மொடு தீபமுமிட்டு கைதொழுதிட யருளுக!
ஞான
குருவே! சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 9
முருகனை பாமாலைகளால் பாடி சாற்றிட
மூல மந்திரம் என்ற திருப்புகழ்
கூர்மை
தந்தினி யாண்டு நின்றனது உயர்கருணைமிகு
பார்வைதனை
அடியன்பால் பொழிந்து பாமாலைகளை
கோர்வையொடு
கழற்க்குச் சொறிய அருளுக! தேனொழுகுந்
தார்
அணியுஞ் சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 10
முருகன் அருளால் ஆசையும், கோபமும் அழிந்த்திட
வேயிசைந்து என்ற திருப்புகழ்
பூசையுஞ்
சிலவே புரிந்து பெறுகிடும் மதமொடு
ஆசையுங்
கோபமுமறவே யொழிக்க அருள் புரிக!
ஓசையுங்
கொடுத்தவளுக்கினியோனே! உருகுவார்
மாசையகற்றிடுந்
திருப்பழநியங்கிரி பவழமே! 11
முருகன் அருளால் மதிநிலை கெடாது இருக்க
உலகபசுபாச என்ற திருப்புகழ்
மதிநிலை கெடாமலொரு மனதொடு உருகியழுது
துதிசெய விழைகிலேனை துணையேதுமிலாதனை
கதியிலி தமியனேனை கருணையொடு பார்த்திடுக!
நதிகுமர! சிவ திருப்பழநியங்கிரி
பவழமே! 12
முருகனுடைய பார்வையை பெற்றிட
நாதவிந்து என்ற திருப்புகழ்
தேவ
குஞ்சரி பாகா! தென்மொழிகுமரா! என
மூவர்
போற்றும் முருகா! முனிசித்தர்கள் காவலா!
பாவலர்
புகழுமேதினில் தலைவா! பாருமெனை
சேவலா!
சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 13
உய்வதற்கு முருகனே வழி நடத்திட
பகர்தற்கு என்ற திருப்புகழ்
பரிதனிலற்புதமாக
வந்தருள்புரி பவஞான
கரிதமையா!
என கழலுருகுமடியரொடளவ
வரியனெனை
வழி நடத்தி உய்யவொரு வாழ்வருளுக
அரிமருக!
சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 14
முருகன் அருளால் இடர்கள் நீங்கிட
சிவனார் மனங் என்ற திருப்புகழ்
இடரானதுந்
தொலைய அருள்ஞான இன்பமதெனது
உடனாகிய
உள்ளமதில் பெருகி உருகிடும் நாளை
சடனாகிய
அடியேன் சார்வதுவுமென்னாளோ?
சுடரான
சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 15
முருகன் அருளால் ஊழ்வினை, பிணி, துயர் யாவும் களைந்திட
காரணிந்தவரை என்ற
திருப்புகழ்
தாழ்வடைந்து
அலையத் தகுமோ இது? என்னுடனான
ஊழ்வினையகலாதிருப்பதுவும் உனக்கழகோ?
சூழ்பிணியுஞ்
சொல்லொணாத துயர்கள் யாவுங் களைவாய்!
வீழ்கனலில்
வந்த திருப்பழநியங்கிரி பவழமே! 16
முருகனை அழுது தொழுது வணங்கி அடியாரோடு சேர
ஆறுமுகம் என்ற
திருப்புகழ்
உனையேவர் புகழ்வார் தம்யுளமாற நினைந்தேந்தி
வினையேனை
அவரோடு வைத்து உருகி விருப்போடு
தினையளவேயாயினும்
அழுது தொழ நோக்கிடுக!
புனைமலர்
பாத! திருப்பழநியங்கிரி பவழமே! 17
முருகன் அருளால் திருக்கோயில் வலம் வந்து தொழ
ஆலகாலமென என்ற திருப்புகழ்
திருத்தாளை
நாளும் வழுத்தியுளமதில் தொழுதிடவும்
திருகோயில்
இருகாலுந் தேடியே வலம் வரவுந்
திருகோலமிரு
கண்ணுஞ்சேர திகைத்து நோக்கிடவுந்
திருக்கண்
நோக்குக! திருப்பழநியங்கிரி பவழமே! 18
முருகன் அருளால் மாதர்பால் மயங்காதிருக்க
கனமாயெழுந்து என்ற திருப்புகழ்
வைப்பெனவே நினைத்துப் புகழுமொரு
வரமது தந்து
கைப்பொருளொடு கருதிய நல்லெண்ணமும் வேறாகி கார்
மைக்குழலார் மதிநுதலில் மயங்காது அருளிடுக!
மெய்ப்பொருளே! சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 19
முருகன் அருளால் குடர்பிணி, அடர்பகை, கோள்களின்
தாக்கம் அணுகாதிருக்க
ஆதாளிகள் என்ற
திருப்புகழ்
இடர்சூழா வகையருள் எனக்கினி இப்படிமீதில்
குடர்பிணியொடு கோள்களின் செயலதுவுந் தேடிவரும்
அடர்பகையுமகலி
நினது தாளை பெற்றுய்ந்திடவே
சுடரொளிருஞ் சிவ திருப்பழநியங்கிரி
பவழமே! 20
முருகன் அருளால் மாதர் மயலிலிருந்து விடுபட
அதலவிதல்
என்ற திருப்புகழ்
அடிமையுனை யன்றி பிரபஞ்சமதை நம்பி ஆசையொடு
கொடிதான தெரிவையரை கூசாமல் அணைந்துருகி
மிடியோடு மெலிந்துழலும் மதியிலியை நோக்குவாய்
படிபோற்றுஞ் சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 21
முருகன் அருளால் துயர் அகன்று சிவஞானஒளி பெற
அரிசனவாடை என்ற திருப்புகழ்
துயரற நினது பொற்பாதந் தொழுதுருகி அடியேன்
உயர்வான சிவஞான ஒளியை உள்ளுணர்ந்து மூழ்கி
அயராத ஆனந்த வெளிக்கே புக அருள் புரிக!
வயல்சூழ்ந்த சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 22
முருகன் அருளால் பித்துஒழிந்து சிவசரண பாதம் பெற
அறமிலா நிலை கற்று என்ற திருப்புகழ்
பித்தொழியுமாறொரு பேருவகை பொருளாளிணைந்து
இத்தொழிலாகிய பாடும் பணியாலேற்றி தொழ யுன்
சத்தொடு உயர்சிவ சரண பாதமதை தரவேணும்
முத்தொளிர் முனைமிகு திருப்பழநியங்கிரி பவழமே! 23
முருகன் அருளால் உபதேசமும், ஞானசித்தியும் பெற
அவனிதனிலே என்ற
திருப்புகழ்
திரியுமடியேனை யுனது அடிமையென தொண்டாற்ற
அரியபத உபதேசமொடு அருள் ஞானசித்தியும்
வறியேனுய ஒரு வகையுறும் பெருவழ்வுந் தருக
பரிமேலேறுந் திருப்பழநியங்கிரி பவழமே! 24
முருகனே கடைசி காலமதில் மறவாது காத்திட
ஒரு பொழுதும் என்ற திருப்புகழ்
பிறவியற நினைகுவனெனையுமிப்
புவனமதில் பல
உறவினொடுழலவுஞ்
செய்த நீ உடல்பிணியில் குறுகி
மறலி வரும்
நாளிலுமெனை மறவாது காவாய்!
புறவியில் மணங்கொள்
திருப்பழநியங்கிரி பவழமே! 25
முருகனிடம் மனதுயுருகி அவன் பேரருளில் திளைக்க
முருகனிடம் மனதுயுருகி அவன் பேரருளில் திளைக்க
தமருமமரும்
என்ற திருப்புகழ்
எனது தனிமை
கழியவுமிணையிலா பேரருளை
உனது பார்வையால்
உரிய நேரமதில் பெற்றிடவும்
மனது யுருகி அதில்
மூழ்கி திளைத்திடவுந் தாராய்
நினதடியை சிவ திருப்பழநியங்கிரி
பவழமே! 26
முருகன் அருளால் பிறப்பு இறப்பு அகன்றிட
திடமிலி என்ற திருப்புகழ்
இருவினை யகற்றியல் கதியைப் பெற்றிணைப்பதம் பெறவுமென்
கருவினையை அறுத்துனது கழற்கு தொண்டே புரியவும்
திருவாய் மலர்ந்து தெளியவே என் சிற்றறிவுக்குணர்த்தி
கருணையைப் புரிக! திருப்பழநியங்கிரி பவழமே! 27
முருகன் அருளால் இகபர சௌபாக்கியம் பெற
வசனமிகு என்ற திருப்புகழ்
இகபர சௌபாக்கியமருளி யென்றுமுன் அடியிலெனது
அகமதை யிருத்தி அன்பாலழுதுந் தொழுதும் உருகியுங்
குகனே! குருபரனே! யென கூறிட அருளாய்!
ககனம்புகழ் சிவதிருப்பழநியங்கிரி பவழமே! 28
முருகன் அருளால் தைபூசமதில் மலர் சாற்றி வழிபட
ஓடியோடி
என்ற திருப்புகழ்
நேசமாகி நினதடியாரொடு நீக்கமறிணைந்து
வாசமாகிய மலர்களை வடிவழகாய் தொடுத்து
பூசமதில் பொன்னடி பரவயருளுக! அவுணர்குல
நாசனே
சிவதிருப்பழநியங்கிரி பவழமே! 29
முருகனே உள்ளகோவிலில் குடிகொள்ள
முருகனே உள்ளகோவிலில் குடிகொள்ள
வரதாமணி
என்ற திருப்புகழ்
சகலாகம நூலின் சாரமாயுறை ஈசர்க்கு
நிகராகிய சொருப நீலமயில் வாகனா
குகனாலய பொருளாய் குடிகொளவே வாராய்!
அகராதிபா! திருப்பழநியங்கிரி பவழமே! 30
முருகன் அருளால் ஐம்புலன்களோடு கலவாதிருக்க
கரிய
பெரிய என்ற திருப்புகழ்
செறிவுமறிவு முறவு மளித்து சிறியேனை யுனது
வறிதிலா புகழினை வாயார பாடவும் வைத்து
பொறியோடெனை கலவாது உன் பொன்னடியில் சேர்ப்பாய்
அறிவருளுஞ் சிவதிருப்பழநியங்கிரி
பவழமே! 31
முருகன் அருளால் மாதர்களால் வரும் இடர் நீங்கிட
இலகிய களப என்ற திருப்புகழ்
மாதர்கள் கசனையை மனதிலேற்றி நாளும் மெலிந்து
ஓதமிகு பாதமதை யுணரா தொழிந்து உலகில்
ஏதமொடலையு மெனதிடரானவை அறுத்திடுக!
நாதமே சிவதிருப்பழநியங்கிரி பவழமே! 32
முருகன் அருளால் பொய் சூது கொலை புரிபவர் உறவு அற்றிட
கறுத்த
குழலணி என்ற திருப்புகழ்
புலையவர் வழியின்பமும் புறமது என்றுஞ் சொல்பவர் நட்புங்
குலையென பொய் சூது கொலை
களவு புரிபவர் உறவும்
நிலையென வழுவாதறுத்து நீயெனை காத்திடுக!
மலைமகிழ்குமர! திருப்பழநியங்கிரி பவழமே! 33
முருகனின் கருணையை பெற்று ஆண்டுஅருள
கலகக்கயல்
என்ற திருப்புகழ்
கருணைப்படி யெனையாள கார்மேக புரவிதனில்
இருமாதர் புடைசூழ ஈராறு தோளுடனே
திருமார்பில் நீப மலர் மாலையொடு தொன்றிடுக!
குருகுகொடியுடை திருப்பழநியங்கிரி பவழமே! 34
முருகனின் தரிசனம்
பெற்றிட
குரம்பை
மலஜலம் என்ற திருப்புகழ்
தழைத்த நயனமுமிரு மலர் சரணமுந் திருநீறுங்
குழைத்த செவ்வாயினிற் குறுநகை முறுவலும் மார்பினில்
இழைத்த மணி முத்தாரமுமிருகர வேலுங் கொடியும்
அழைத்துக் காட்டுக! திருப்பழநியங்கிரி பவழமே! 35
முருகன் திருவடிகளை பெற்று ஈடேற
களபமுலை
என்ற திருப்புகழ்
எனது தலையிலுனது பதங்கள் வைத்து ஈடேறவும்
மனதுனது நாமங்கள் மறவாது நினைத்துருகவும்
தனது நிலையறிந்து தளராது தொண்டுகள் புரியவும்
நினது கண் பாரும் திருப்பழநியங்கிரி பவழமே! 36
முருகனின் உருவம் மனதினில் உருவகப்படுத்த
குன்றுங்
என்ற திருப்புகழ்
இரு மலரடி பரவியும் மனதினில் பேரின்பமொடு
ஒரு மனதாக உனதுருவம் உருவக படுத்தியும்
உருகியு மழுதுந் தொழுதும் வீழ்ந்தும் வணங்க யருளுக
முருகனே! சிவதிருப்பழநியங்கிரி பவழமே! 37
முருகனின் பார்வையை பெற்று துயர் விலகிட
சீயுதிரம் என்ற திருப்புகழ்
துயர் விழுந்து
மாளுமெனை யன்புகொண்டு தோகை மயிலில்
புயலாயிரு மாதர்
புடைசூழ வந்து அடியேன்
உயர்வுபெற
கருணைமிகும் உனது பார்வையை பாரும்
மயில்வீரனே!
திருப்பழநியங்கிரி பவழமே! 38
முருகனுடைய சரண கமலங்களை பெற்றிட
முருகனுடைய சரண கமலங்களை பெற்றிட
புடவிக்கணி
என்ற திருப்புகழ்
பிரணவ இரகசியமன்புற்று செவியுற்ற புரந்தகன்
கிரணமுடை கயிலையை விடுத்து கலாபமேறியுன்
சரணகமலங்களை சிறியேனுக்குந் தர வாராய்
இரணகுலநாச! திருப்பழநியங்கிரி பவழமே! 39
முருகனின் ஆறுமுகங்களை மனதில் வைத்து தொழ
கோலமதி
என்ற திருப்புகழ்
கழலிணைகள் ஒருசிறிதுங் கருத்தை விட்டு அகலாது
உழலவுமுனதாறு முகமென்னுள் வைத்து மறவாது
தொழவும் எனக்கென்று அருள்வாய்! தியாகேச்சுரர் பெற்ற
குழவியே! சிவதிருப்பழநியங்கிரி பவழமே! 40
முருகனின்
அடிமையாய் இருந்து ஈடேற
தோகை
மயிலே என்ற திருப்புகழ்
ஏதுமிலியாயினும் யானுனடிமை ஈடேற
ஈது நற்றருணமெனையும் நோக்காய்! அன்றிருப்பொழுதுந்
தூது சென்றவர் மைந்தா! திருமால் மருகா! இராகு
கேது போற்றிய
திருப்பழநியங்கிரி பவழமே! 41
முருகன் அருளால் அடியாரொடு கூடும் வகை அறிய
முருகன் அருளால் அடியாரொடு கூடும் வகை அறிய
சீறலசடன் என்ற திருப்புகழ்
அடியாரொடு கூடும் வகையுமுனதாறு முகமும்
வடிவேலொடு வரிமயில் வாகனமும் நீபமலர்
அடியிணைகளும் இருமாதர் அணைய உன் தரிசனமுங்
கடிதிலருளுக! திருப்பழநியங்கிரி பவழமே! 42
முருகன் அருளால்
பிறவி ஒழித்திட
பாரியான
என்ற திருப்புகழ்
சீறுவார் கடையிற் சென்று செல்வமிழந்து சீர்குலைந்து
நாறுமிவ்வுடற் கொண்டு நாணாது அழியுமிப்பிறவி
போறும் போறும் இனி வேண்டேனே! போக்கிடுவாய்
நீறுகொளுஞ்சிவ திருப்பழநியங்கிரி பவழமே! 43
முருகன் அருளால்
உய்ந்திட
புடைசெப்பென என்ற திருப்புகழ்
மெய்க்களிறுக்கிளையோனே! மயிலேறும் மருகனே
செய்ப்பதியில் வாழ் செல்வமே! சிலைநுதலழகோனே!
கொய்ப்புனஞ் சென்று அன்று குறத்தியை மணந்தோனே
உய்விப்பாயெனையுந் திருப்பழநியங்கிரி பவழமே! 44
முருகன் அருளால்
பழுதற உணர்ந்திட
கடலைச்சிறை
என்ற திருப்புகழ்
பழுதற உணர்வித்துனது பதமலரை பற்றி உருகி
அழுதழுதுனதுருவமதை எனதகமதிலிருத்தி
எழுமொரு பேரானந்த சித்தியோடிணைந்திட நீ
வழுவாதருளுந் திருப்பழநியங்கிரி பவழமே! 45
முருகன் அருளால் மணமாலையை பெற்றிட
தகைமைத் என்ற திருப்புகழ்
பிணையல் தரவே புயலெனவொரு
பருமயிலேறி
அணைந்திடுமிரு
மாதரொடு அயிலுங் கொடியுமேந்தி
இணையிலா
ஆறுமுகமோடு இறங்கியே வந்து
துணைபுரிகவே
திருப்பழநியங்கிரி பவழமே! 46
எல்லாம் இழந்த வேளையில் முருகனே ஆதரவாயிருக்க
இருசெப்பென என்ற திருப்புகழ்
தவமற்று தன்நிலையற்று தன்னோடு இதுநாள் உறைந்து
உவரற்று உணர்வற்று உரையற்று உடலற்று உறவற்று
அவமற்று ஐம்பொறியுமற்று ஆதரவற்று செலுங்கால்
சிவமுற்றுயவருள்
திருப்பழநியங்கிரி பவழமே! 47
முருகன் அருளால் மனதில் அவன் நினைவு அழியாதிருக்க
இலகுகனி
என்ற திருப்புகழ்
நிலையழியு நெஞ்சில் நினது நினைவழியாதிருக்கவும்
அலைபாயுமுளமதில் ஆகாதெண்ணங்கள் அழியவும்
விலையிலா யுன் நாமங்கள் வேண்டி பெறவு மருளுக!
கலைமிளிருஞ் சிவதிருப்பழநியங்கிரி பவழமே! 48
முருகன் அருளால் பிணியகன்று சிவபழமாகிட
உயிர்க்கூடு
என்ற திருப்புகழ்
மணி பொருவு பதத்து ஆன மயிலில் வந்தென் பெயரா
பிணியை அகற்றி சிந்தையுள் புகுந்து சிவபழமாக்கியும்
பணியாத பொறிகளை படிவித்தும் உய்ந்திடவுஞ் செய்வாய்
அணியருவி சூழ் திருப்பழநியங்கிரி பவழமே! 49
முருகன் அருளால் அவன் அடியருள் ஒருவனாகிட
கருப்புவிலில்
என்ற திருப்புகழ்
உனைபுகழுமெனைப் புவியிலொருத்தனாம் வகையருள
முனைவளர் மான் மகளொடும் மேலவர்குல மகளொடும்
வினை தீர்க்கும் வேலும் மயிலொடும் வீரமொடு வருக
தினை விரும்பிடுந் தென்திருப்பழநியங்கிரி பவழமே! 50
முருகன் அருளால் வறுமையும், பிணியும், மூப்பும் விலகிட
கதியை
விலக்கு மாதர்கள் என்ற திருப்புகழ்
அரவு பிடித்த தோகை மயிலொடு அரற்றுங் கோழியை
கரமே பிடித்து கொற்றவை கொடுத்த கூர்வேலைக்கொண்டு
விரட்டுக என்னுடனான வறுமையும் பிணியும் மூப்பும்
பரவுநெடுங்கதிர் திருப்பழநியங்கிரி பவழமே! 51
முருகன் அருளால் அவனை பணிந்து உய்ந்திட
கடலைபொரி என்ற திருப்புகழ்
அடலசுரர் குலம் முழுதும் மடியவொரு அயிலை விடு
சுடர்வேலா! என சொல்லால் இன்னிசையால் மனதால்
உடலால் உருகியும் பணிந்தும் உய்ந்திட கருணை புரிக!
படர்புவியிலோங்குந் திருப்பழநியங்கிரி பவழமே! 52
முருகன் அருளால் பிரமன் படைத்ததை மாற்றிட
கரிய மேகமதோ என்ற திருப்புகழ்
கசடனாய் வயதுயொரு நூறு சென்றபின் காயமும்
இசைந்து வருமோ இணையடியை போற்றவும் பாடவும்?
திசமுகன் படைத்ததை மாற்றுந் திறனுனக்கல்லவோ? என்
விசனமுந் தீராய் திருப்பழநியங்கிரி பவழமே! 53
முருகன் அருளால் வலி, வாத, பித்த நோய்களால் வாடாதிருக்க
கரியிணைக் என்ற திருப்புகழ்
கலியுகத்தே புகழ்ச் சிவபதத்தே பதித்த வாழ்வை
சலியாதென்றுமுன் தொண்டுக்கே செலுத்தி உய்வடைய யான்
வலி வாதம் பித்தமெனும் நோய்களால் வாடி வதங்கி
நலியாதருள்க! திருப்பழநியங்கிரி பவழமே! 54
முருகன் அருளால் தனை உணருங் காலம் அறிந்திட
கருகி அகன்று என்ற திருப்புகழ்
வினையுடல் கொண்டு விதிவழிநின்று தளருமிவ்வாவியையுந்
தனையுணருங் காலந் தமியேனுக்கு என்று அருள்வாய்?
அனைத்துலகையும் படைத்தருள் புரியு மரனார்க்குரைத்த
புனைமலர் பாத! திருப்பழநியங்கிரி
பவழமே! 55
முருகன் அருளால் உடல் அழியாமுனரே அவனை பாடிட
கருவினுருவாகி வந்து என்ற திருப்புகழ்
அறு சமய நீதியொன்றையுமறியாது பலவித
உறுகண் வந்துடலுமுருகுலைந்து போகாமுனரே
நறுமணஞ்சூழ் நின் கழலைப் பாடி நினைய வருளுக!
சிறுவனே! சிவதிருப்பழநியங்கிரி
பவழமே! 56
முருகன் அருளால் மாயையில் மூழ்காது பிறவியை ஒழிக்க
கலக வாள்
விழி என்ற திருப்புகழ்
இருகண் மாயையிலே மூழ்காதிவ்வாக்கையுமினி
வருமநேக பிறவியை ஒழித்துன் பத மலர் சேர
தருகவே ஞானமுந் திரளான திருப்பாக்களும்
பருமயிலேறுந் திருப்பழநியங்கிரி பவழமே! 57
முருகன் அருளால் ஞான தரிசனம் பெற்றிட
கலைகொடு
என்ற திருப்புகழ்
ஞான தரிசனமளித்து வீறு திருவடி யருள
கானக் குறத்தியொடு கலாபமதில் என்று வருவாய்?
ஆன திருப்பதிகந்தர ஆளுடைபிள்ளையாய் வந்த
வானவர் புகழுந் திருப்பழநியங்கிரி பவழமே! 58
முருகன் அருளால் அரிய இசைஞானம் அறிந்திட
களபமுலை
என்ற திருப்புகழ்
எனது தலையிற் பதங்களருள உனது புகழ் பாட
அனவரதமும் அரிய இசையொடு ஞானமுந் தருக!
தனதடியார் பொருட்டு தவ வேடந் தாங்கிய தற்பரன்
கனகமணியே! திருப்பழநியங்கிரி பவழமே! 59
முருகன் அருளால் தொடரும் வினை அகன்று சிவத்த பதம் பெற
சிறு
பறையும் என்ற திருப்புகழ்
இனிய மொழி செப்பி சிவத்த பதமருள எனைசூழுந்
துனியும் பிணியுந் தொடரும் வினையுந் தீர்த்திடுக!
பனிபடரும் பொருப்பினில் பண்ணிசை முழங்க
ஆடும் பரன்
கனியிதழ் மைந்தா! திருப்பழநியங்கிரி பவழமே! 60
முருகன் அருளால் தெரிந்த செந்தமிழால் பாடவும்
கலவியிலி என்ற திருப்புகழ்
பலதிசை மெச்சத் தெரிந்த செந்தமிழ் பகரவுமன்றலர்ந்த
அலரெடுத்து அழகொளிர் மாலைகள் புனைந்து சாற்றவும்
நிலவுலகில் எனக்கு நீங்கா பணியாய் நீடுக!
உலகை வலம் வந்த திருப்பழநியங்கிரி பவழமே! 61
முருகன் அருளால் முன்வினை அகன்றிட
சுருளளக என்ற திருப்புகழ்
அகிலபுவனாதி யெங்கும் மெய் ஞான அமுதை வாரி
முகிலென பொழியும் நீ என் முன் வினையை தீராயோ?
எகினமாய் அன்று முடியறியாத அயனை குட்டிய
சிகி வாகனா!
திருப்பழநியங்கிரி பவழமே! 62
பொருள் எலாம் இழந்த வேளையில் முருகன் அருள் பெற
வனிதையுடல் என்ற திருப்புகழ்
கனபொருளெலாமிழந்திக் காயமுந் தவிக்கும் பொது
மனமிறங்கி வாருமைய்யா மதியிலியை ஏற்றவே!
அனலேந்தி ஆடுமரனார் நுதல் தீயோனே!
கனகமணியே! திருப்பழநியங்கிரி பவழமே! 63
பிறவி கடலில் இவ்வுயிர் அவதியுற்று அலையும்போது
முருகன் அருள் பெற
முருகன் அருள் பெற
கனத்திறுகி
என்ற திருப்புகழ்
பவகடலுற்று அயர்வலே சலித்து இவ்வுயிர் பெரும்
அவதிக்குற்று அலையும்போது நீயும் உன் அயிலேடுத்து
இவனையுமடிமை கொண்டிட இறங்கியே வர வேண்டும்
நவ நிதியே! தென்திருப்பழநியங்கிரி பவழமே! 64
முருகன் அருள் புரிந்து காத்து இரட்சிக்க
முகிலளகத்
என்ற திருப்புகழ்
ஒளி திகழும் உனது பத்மகரங்களில் வேலுங்கொடியும்
நளினமொடு தாங்கி நாயேனை காக்க வருவாய்!
வெளியிலாடும் வேணியர்க்கு வேத பொருளை யுரைத்த
பளிங்கு மணியே! திருப்பழநியங்கிரி பவழமே! 65
முருகன் அருளால் இனிமையான குரல் பெற்று பாட
முருகன் அருளால் இனிமையான குரல் பெற்று பாட
குழல்கள்
சரிய என்ற திருப்புகழ்
இனிய உனதமுதரச புகழ் பாட எனது குரல்
இனிமை பெறவும் இவ்வுடலுஞ் சோர்வு அற உழைத்திடவும்
இனிவருங் காலநேர மனுகூலமாய் அமையவும்
இனிதே வருக! திருப்பழநியங்கிரி பவழமே! 66
முருகன் அருளால் பிறவி பயனை அடைந்திட
முருகு
செறி என்ற திருப்புகழ்
உவகை தருங்கலை பலவுமுணரவும் முன்வினைகூட
அவனியில் பிறவி எடுத்ததன் பயனை அடையவு மென்றும்
இவன் மறவாதுன் இணையடிகளை பாடவுந் தருக!
சிவவடிவமாந் திருப்பழநியங்கிரி பவழமே! 67
முருகன் அருளால் கைகுவித்து உளமுருகி தொழுதிட
தகரநறுமலர்
என்ற திருப்புகழ்
இருகைகுவிசெய் துளமுருகிட எழில்மிகு கோலமும்
பருமயில் வாகனமும் பாவையர் இருபுறஞ்சூழ
ஒருகை வேலும் ஒரு கை கொடியும் ஆறுமுகங்கொண்டு
வருகவே! சிவதிருப்பழநியங்கிரி பவழமே! 68
முருகன் அருளால் மனதும், உடலும் அடிமையுற்றிட
திமிரவுததி
என்ற திருப்புகழ்
நினதருளதருளி நீயெனை மனதொடிமை கொள
உனது கருணையொளிர் விழியால் சிறிது
பார்த்திடுக!
தனது குலமோங்க தாணுவை பூசித்த ராகவன்
மனது மகிழ் சிவதிருப்பழநியங்கிரி பவழமே! 69
முருகன் அருளால் மலர் தொடுத்து சாற்றி பூசை புரிவதற்கு
தலைவலி என்ற திருப்புகழ்
வாசமலர் வகை வகை எடுத்தே ஆபரணமாய்
நேசமுடனே தொடுத்து நிகரிலா நினதடிக்கு
பூசனையும் புரிந்திடுவதற்கருளுக அவுணர்குல
நாசனே! சிவதிருப்பழநியங்கிரி பவழமே! 70
முருகன் திருவருளால் அவன் சேவடியுள்ளிருதி ஆனந்தங்கொள
கொந்துத்
என்ற திருப்புகழ்
வந்தித்தருள் தருமுன்னிரு சேவடியை உள்ளித்திருத்தியான்
சிந்தித்து தொழுதுருகி சொல்லொணா பேரானந்தங்கொள
சுந்தர மயிலேறி சொகுசாய் என்முன் வந்து நிற்பாய்!
மந்திர பொருளே! திருப்பழநியங்கிரி பவழமே! 71
முருகன் அருளால் மனதிலுறையும் அறிய பொருளை அறிய
சகடத்திற்
என்ற திருப்புகழ்
சுகமுற்று கவலைப்பட்டு சேர்த்த பொருள்கெட்டு பிணியுற்று
அகமுற்ற அரிய பொருளை அறியாத அறிவிலியை
இகலுற்றேனை இனியேனும் பார்த்திடுக! நினடியில்
புகலுற்றிட சிவதிருப்பழநியங்கிரி பவழமே! 72
முருகன் அருளால் மனபிரமம் அற்று அவன் கருணை பெற்றிட
குறித்தமணிப் என்ற திருப்புகழ்
மனப்பிரமத்தையற பிரசித்தமுற நின் கருணைமிகு
கனத்த பார்வையை கடையேன் மீது சற்றே பார்க!
வனக்குற மகளோடும் வானவர்கோன் மகளோடும் வருக
தனத் திரளருளுந் திருப்பழநியங்கிரி பவழமே! 73
முருகன் அருளால் பிறப்பு இறப்பு அற்றிட
மருமலரினன்
என்ற திருப்புகழ்
இருவினை பொதிந்த இந்த சனன மரணந் துறந்து மனது
கருதிய இணையடியை கதியிலிக்குமருளுக! உயர்
அருவுருவாகிய பரம்பொருளின் அழலே! கற்பகத்
தருவாய் பொழியுந் திருப்பழநியங்கிரி பவழமே! 74
முருகன் திருவடிகளை நினைந்து உருகி பாடிட
விரை
மருவு என்ற திருப்புகழ்
உனது தண்டையணி பதமெனது உளமதில் நினைந்து
தினம் நெகிழ்ந்து நெகிழ்ந்து உருகி துதித்து பாடி யாடி
நினதருளை பெற தயை புரிக! நீலமேக வண்ணன்
மனம் மகிழுஞ் சிவதிருப்பழநியங்கிரி பவழமே! 75
முருகன் அருளால் மாதர்பால் இச்சை கொள்ளாதிருக்க
இருகனக
என்ற திருப்புகழ்
பிணியின் அகமேயான இப்பாழுடலை நம்பி யென்றுங்
கணிகையர் பால் இச்சை கொண்டு அழியாதொளிருமுனது
மணிபிரவாள பாதமதில் மூழ்க அருள் புரிக!
தணிகை வேலா ! திருப்பழநியங்கிரி பவழமே! 76
முருகன் அருளால் துக்கமும், குறைகளும் நீங்கிட
முத்துக்குச்சிட்டு என்ற திருப்புகழ்
மெத்த துக்கத்தை அனுபவித்து அனுபவித்து மெய் சோர்ந்தயென்
சித்தத்தை நீராய் உருக்கி உனக்கே சொரிந்தேன் நீ
புத்தம் புதிய மலராய் என்குறை போக்கிட வருவாய்!
நித்தந் தேரேறுந் திருப்பழநியங்கிரி பவழமே! 77
முருகன் அருளால் பூக் கொண்டு தொண்டு செய்ய
ஒருவரை என்ற திருப்புகழ்
உடலது சதமென உறநமன் நரகில் வீழாது
மட மதியாளனை நின் மலர்விழியாலடிமை கொண்டு
குடலையில் பூக் கொண்டு குறையற தொண்டாற்ற அருளுக
சுடர்மிகு கண்ணே! திருப்பழநியங்கிரி பவழமே! 78
முருகன் அருளால் அஞ்சா நெஞ்சமும் அறிவாற்றலும் பெற
கனககும்ப என்ற திருப்புகழ்
வஞ்சக நெஞ்சை ஒழித்து வாழும் வளமான வழ்வொடு
அஞ்சா நெஞ்சமும் அறிவாற்றலும் அருள வேண்டுமே!
நஞ்சினை மிடறினிலடக்கிய நாயகர் நுதலிலுதித்த
செஞ்சேவலா! தென் திருப்பழநியங்கிரி பவழமே! 79
முருகன் அருளால் உடலுறு பிணிகள் நீங்கிட
குருதி
மலசலம் என்ற திருப்புகழ்
மனது துயரற வினைகள் முறிந்திட நினது பதமுற
எனது உடலுறு பிணிகள் யாவும் இரிந்து சிதறிட
தினமுனை துதித்து பாடிட தேவியரொடு வருக!
உனதடியன் முன் தென்திருப்பழநியங்கிரி பவழமே! 80
முருகன் அருளால்
வெந்துயர் தீர
சிந்துர
என்ற திருப்புகழ்
சந்திர சூரியர் திக்கெட்டும் புகழ சிவனார் செவியில்
மந்திர பொருளுரைத்த நின் திருவாயால் மதியிலியின்
வெந்துயர் தீர வோர் சொல் பகராய்! வேல் கொண்ட ஞான
சுந்தர வடிவே திருப்பழநியங்கிரி பவழமே! 81
முருகன் அருளால் இகபரம் இரண்டிலும் பாடலின் சுவை பருகிட
ஞானங்
கொள் என்ற திருப்புகழ்
நாவின்பரச ஆனந்த நாத அருவியில் மூழ்கி
ஆவின் பாலொடு தேனும் அமுதென கூட்டி நினது
பாவின்ப சுவை பருக இகபரமிரண்டிலுந் தருக!
பூவின் பொலிவே! திருப்பழநியங்கிரி பவழமே! 82
முருகன் அருளால் சித்தி, செல்வம், சீவன்முக்தி பெற்றிட
நிகமமெனி
என்ற திருப்புகழ்
பத்தியால் மிக மொழியும் வளர்செஞ்சொற் பாக்களை நாவில்
நித்தியமும் இராக தாள லய நாதமொடு சாற்றி
சித்தியும் செல்வமும் பெற்று சீவனும் முக்தியுற அருளுக!
குத்திய குமரா! திருப்பழநியங்கிரி பவழமே! 83
முருகன் அருளால் பத்தியின் இணக்கம் பெற்றிட
நெற்றி
என்ற திருப்புகழ்
மெய்படு புத்தியின் இணக்கமே
பெற மூடன் எனக்குன்
உய்ப்படு தரிசனமும் உள்ளொளிர் சுடருங் காட்டிடுக
கொய்ப்படு அவுணருதிரஞ் செங்கடலாய் பெருகி வழிய
செய்ப்படு வேலா! திருப்பழநியங்கிரி பவழமே! 84
முருகன் அருளால் உலக மயக்கத்திலிருத்து விடுபட
இத்தாரணிக்குள்
என்ற திருப்புகழ்
பிணியது மூடிச் சத்தான புத்தியது கெட்டுயுலக
அணிகளில் அழுத்தி கிடக்குமடியேனை யாட்கொள
பணிமிதித்த பரியேறி பாங்குடனே வந்திடுவாய்!
மணியணி மார்பா!
திருப்பழநியங்கிரி பவழமே! 85
முருகன் அருளால்
பிறவியை ஆகற்றிட
பஞ்ச
பாதகன் என்ற திருப்புகழ்
பஞ்ச மாமலம் மாசமொடு கூடி வெகு இடர்ப்பட்டு
சஞ்சலமுங் கொண்டு பிறவி சகதியிலழுந்தாதினியுன்
கஞ்சமலர் பாதங்களை பற்றி கரையேற அருளுக!
வெஞ்சமர் வீரா!
திருப்பழநியங்கிரி பவழமே! 86
முருகன் அருளால் நல்ல நெறிகளை உணர்ந்து செயல்பட
குழலடவி
என்ற திருப்புகழ்
வெறிதுளம் விதனமதால் வாடி உடலும் மெலிந்து
அறிவொணா பிறவி பிணியாலுழன்று அழியாது
நெறியெலாமுணர்ந்து நினதடியிளிணைய வருளுக!
பொறி தோன்றலே!
திருப்பழநியங்கிரி பவழமே! 87
முருகன் அருளால் நல்ல அறிவை பெற்றிட
மலரணி
என்ற திருப்புகழ்
மலர்கொடு நின் பொற்பாதத்தையே தொழுது மதி பெறயுன்
சொலர்கரிய பேரருளை சிறியேனுக்கு மருளுக
உலகுய்ய ஓராறு பொற் பாவையர் முலை பாலுண்ட
இலகுகனியே!
திருப்பழநியங்கிரி பவழமே! 88
முருகன் அருளால் மனக்கவலை நீங்கி அவன் பாதம் பாடிட
மனக்கவலை
என்ற திருப்புகழ்
மனக்கவலை யேதுமின்றி மலர் பதங்களை பாடிட
எனக்குரிய இடமும் பொருளுந் தந்து ஈடேற்றுவாய்!
புனக்குன்றில் ஆலோலம் பாடிய பொற்பாவை குறவள்ளி
தனக்கினியவா! திருப்பழநியங்கிரி பவழமே! 89
முருகன் அருளால் அன்பும், கருணையும் பெற்றிட
மந்தரமது என்ற
திருப்புகழ்
அன்புடைமை மிகவே வழங்கி என்றனையுமினிதாள
தன் பெருங் கருணை தந்து தமியேன் கருநோய் களைவாய்!
பொன்மேருவை செண்டாடி பாரதிர பரியேறிய
இன்னமுதோனே!
திருப்பழநியங்கிரி பவழமே! 90
முருகன் அருளால் வினை நீங்கி திருவருள் பேறு அடைய
பெரியதோர் என்ற
திருப்புகழ்
வினையிலே மருகி நொந்த வீணனும் உனது தாளை
நினைந்துருகி அழுது நாடும் பேற்றினை தந்தருளுக!
தினை வனங் காத்த மானின் தோளையணைந்தருளிய
புனைமலர் பாத!
திருப்பழநியங்கிரி பவழமே! 91
முருகன் அருளால்
வரும் துன்பங்கள் கருகிட
முருகு
செறிகுழல் முகிலென என்ற திருப்புகழ்
நிருபகுரு பரகுமர நெடிய நெடு ககன முகடு
அருவரைகள் சிதறவும் அயிலை விடு அறுமுகனென
வருமடியார் துயர்தீர வரும் நீ எனது மிடியுங்
கருகி விழ பாருந் தென்திருபழநியங்கிரி பவழமே! 92
முருகன் அருளால் முதுஞான வழி அறிந்திட
முகை
முளரி என்ற திருப்புகழ்
மொழியு முனதிரு தாளில் மூழ்கி நிதம் முதுஞான
வழியறிய வருகவே வள்ளி மானொடு மயிலேறி!
சுழியிலுதித்த அயனை சுருதி பொருள் வினவி குட்டிய
எழில் வடிவே! தென்திருப்பழநியங்கிரி பவழமே! 93
முருகன் அருளால் மூலாதார சுடரை அறிய
மூலங்கிள
என்ற திருப்புகழ்
பாலாங்கிளராறு சிகரமொடுறையுஞ் பராபர
மூலாங்கிள சுடரை முழுதும் அறிய கருணை புரிக!
வேலங்குசமாய் அவுணர் குலம் முழுதுங் வீழ்த்திக் கொன்ற
நாலங்குல நாவுறை பழநியங்கிரி பவழமே! 94
முருகன் அருளால் அவன் அடியை பாடி தனமும் பெற்றிட
முதிரவுழையை என்ற
திருப்புகழ்
மாய மனதுடைய மனித பிறவியில் மூழ்கி யான்
காய நிலையை கருத்தில் கொள்ளாதொழிவேனோ? சொல்
தூய உன்னடியைப் பாடும் தொண்டொடு போதிய
தாளமும்
ஈய வருவாய் திருப்பழநியங்கிரி பவழமே! 95
முருகன் அருளால் மூவாசையிலிருந்து விடுபட
வாதம்
பித்தம் என்ற திருப்புகழ்
சதிகாரர்கள் வெகு மோகர் சூழ்ந்து மூவாசையில்
மதியிழந்து யான் மகிழ்ந்து திரிந்து அழியாதுனது
பதிதோறுஞ் சென்றுபாடி பரவும் பணியை பெறவொரு
கதியருளுக!
தென்திருப்பழநியங்கிரி பவழமே! 96
முருகன் திருதாமரை பாதங்களினால் ஆள
விதமிசைந்து என்ற திருப்புகழ்
அழகாகிய தாமரை பாதங்களினாலெனை யாள
குழற் சுருபி குறப்பெண்ணொடுந் தேன்மொழியாளொடுமொளிர்
தழல் மேனியொடும் வேலுங் கொடியுந் தாங்கி வருக!
பழந்தமிழே!
தென்திருப்பழநியங்கிரி பவழமே! 97
முருகன் அருளால் பிறவி பயனை அடைவதற்கு
இருநோய்
மலத்தை என்ற திருப்புகழ்
கருநோயறுத்தெனது மிடிதூள் படுத்தி கருதிய
பொருளாலுன் தொண்டினை ஆற்றி பிறவி பயனை யடைய
பருமயிலேறி பாங்குடனே என்முன் வருகவே
குருவடிவாய்!
தென்திருப்பழநியங்கிரி பவழமே! 98
முருகன் அருளால் தாழ்வு, வறுமை, பிணி, நீங்கிட
நாராலே
என்ற திருப்புகழ்
தாழாதே நாயேன் நாவாலே தாள் பாட
சூழாதெனை என்றுஞ் சொல்லிய வறுமையும் பிணியும் நீ
ஏழாதிருப்பையோயுன் அடியேனை காக்க? சொல்வாய்
வீழா முத்தே! திருப்பழநியங்கிரி
பவழமே! 99
முருகன் அருளால் குருவருள் பெற்று சேவடியில் சேர
எருவாய்
கருவாய் என்ற திருப்புகழ்
உருவான உடலுமொரு யுழுகின்ற நிலமாகி
எருவான உணங்குதனை முப்போதுமிட்டிட்டு
சருகாகி யுதிராது சேவடியில் சேர்ப்பாய்
குருவான தென்திருப்பழநியங்கிரி பவழமே! 100
முருகன் அருளால் அவனை வணங்கும் பாக்கியம் பெற்றிட
தந்தனமும் என்ற திருப்புகழ்
தந்தனமும் என்ற திருப்புகழ்
அரிய தொரு பிறவிதனில்
அயராது உழைத்துழைத்து
உரிய பொருள் ஒன்றையுமடைந்திலனே! மாறாக
பிரியமுடன் உனதடியைப் பற்றும் பாக்கியமருளுக!
பரியேறுந் தென்திருப்பழநியங்கிரி பவழமே! 101
முருகனே தாய் போல் பரிந்து ஆதரித்து அருள
ஊனேறெலும்பு
என்ற திருப்புகழ்
தாய் போல் பரிந்து தேனொடுகந்து தானே தழைந்து
சேய் எனை ஆதரித்து நின் செந்தாமரை கரங்களால்
நாயேற்கு அபயமளிக்க நீல மயிலேறி வருக!
வேய் குரலழகா! திருப்பழநியங்கிரி பவழமே! 102
முருகன் அருளால் முத்தழிழ் இசைத்து அருள் பெற
எட்டுடனொரு
என்ற திருப்புகழ்
ஆராவமுதென முத்தழிழ் இசைக்க கனிவாயால்
சீராக வோர் சொல் பகர வருகவே சிற்றடியிட்டு
நேராக வேலெறிந்து நெடிய முகடு துளைத்த
தீரா குமரா! திருப்பழநியங்கிரி பவழமே! 103
முருகன் அருளால் கந்தா என்று போற்றி புகழ
மங்காதிங்கு என்ற திருப்புகழ்
கந்தா என்றேத்தும்படி கருணை கூர்முகங்களாறுடன்
செந்தாமரை கரங்கள் பன்னிரண்டொடு பவழ செவ்விதழும்
மந்தார மலர் பாதமுங் கொண்டு மயிலேறி வருக!
பந்தாடும் பாலா! திருப்பழநியங்கிரி பவழமே! 104
முருகன் அருளால் பிறவிக் கடலை நீந்தி கடக்க
மாண்டாரெலும்பு
என்ற திருப்புகழ்
சேந்தா சரண் சரண் என்பது வீண் போகாதுனை
காந்தார பண்ணிசையால் கண்ணீர் மல்கி உருகினேன்
நீந்தா பிறவிக் கடலை நீந்த நினதருளை தருக!
வேந்தா! குழகா! திருப்பழநியங்கிரி பவழமே! 105
முருகன் அருளால் பழுதற எழுதி பாடுவதற்கு
தெரிவை
மக்கள் என்ற திருப்புகழ்
பழுதில் நிற் சொல் சொல்லி அழுது மெயுருகி அரியபாக்களை
எழுதி நித்தம் உண்மை பகர்தற்கு ஈவாய் நின்னருளை!
முழுமுதற் பொருளாய் முக்கணிறை நுதலில் வந்துதித்த
செழுந்தீயே!
தென்திருப்பழநியங்கிரி பவழமே! 106
முருகன் அருளால் மனம் இடைஞ்சலிலாது நினைக்க
குறைவதின்றி
என்ற திருப்புகழ்
மனமிடைஞ்சலற்றுனடி நினைந்து நிற்க மயிலில் வந்து
எனது குறை தீர்த்து ஈடிலா
பேரானந்தங் கொள
உனது கருணை கூர் விழியால் சிறிதே பார்த்திடுக!
பனக மணியே! திருப்பழநியங்கிரி பவழமே! 107
பவழ மாலையை ஓதுவார் பெறும் பலன்
பேறும் புகழுமுடை பழநியங்கிரி பவழமென
ஆறும் வலம் வரும்
ஆரணியடியார்க்கடியவன்
நூறுமெட்டுங்
கோர்த்து நவின்ற மாலைகள் தம் நாவிற்
கூறுமவர்க்கு
கோரிய யாவுங் கூடுதல் திண்ணமே! 108