சிவமுருகுமாலை ஓர் அறிமுகம் Introducton to SivaMuruguMalai
Introduction to SivaMuruguMalai
God's mercy actions happening at all times. This Sivamurugumalai (religious poetic songs) is one among them. By God's grace and Guru's grace author Shri S. Kuppuswamy ayya blessed to see these songs in his mind. Author is not thinking ,composing and writing these songs but directly getting it from the Universal Consciousness. On auspicious days he is getting each song during midnight time. Illuminated words appear in author's mind and he immediately note it down in a notebook. Author is a sincere devotee of Lord Subramaniya.. Most of these songs are about Lord Subramaniya and Lord Shiva.
These songs are in Tamil language. Author compiled and published these songs. This miracle happening since 22-04-2004 onwards. For more information please see the Author page.
Author
List of Books and Lingatcharamalai
https://sivamurugumalai.blogspot.com/p/i.html
திருமுருகப்பெருமானின் அருளாளர் ஆரணிஅடியார்க்கு அடியார் திரு சா.குப்புசாமி அய்யா அவர்களின் உள்ளத்தில் குருவருளாலும் திருவருளாலும் அருளப்பெற்ற இப்பாடல்கள் இறைவனின் திருவருட்செயலையும் பேரருட்கருணை திறத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துளன.
இப்பாடல்கள் ஆசிரியர் இயற்றி எழுதாமல், அவருக்கு நேரடியாக அருளப்படுகின்றன எனும் இவ்வதிசியத்தை கண்டு இறைவனின் அருளிச்செயலை போற்றுவோமாக.
கிருத்திகை,சஷ்டி, பிரதோஷம் மற்றும் பௌர்ணமி போன்ற முக்கிய நன்நாட்களில் நள்ளிரவில், ஒவ்வொரு பாடலும் ஒளிமிகுந்த எழுத்துக்களோடு கூடிய பாடல் வரிகளாய் தோன்றி அருளப்படுகின்றன.
ஆசிரியர் இதனை எழுதி தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். இப்பாடல்கள் மிகுதியாக முருகப்பெருமானையும் சிவபெருமானையும் போற்றுகின்றன.
ஆசிரியர் தீவிர முருகபக்தர். திருப்புகழ் தேவாரப் பாடல்களை தினமும் ஓதி வழிபடுபவர்.
ஆசிரியரின் பண்டைய தவப்பயனாலும், அவரது குருவாகிய "திருப்புகழ் செம்மல்" திரு. தண்டபாணி சுவாமிகள் அருளாலும் தமிழ் பக்தி இலக்கியத்திற்கு அணி சேர்க்கும் இத்திருவருட்ச்செயல் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
சிவமுருகுமாலை ஓர் அறிமுகம்

தொன்மையான தமிழ் மொழியின் ஆழ்ந்த மற்றும் கடினமான இலக்கண மரபுக்குட்பட்டு சந்தம், நடை, தொடை, அணி, சொல்நயம் மற்றும் பொருட்செறிவுடன் பாடல்கள் அமைந்துள்ளன
தணிகை முருகன் அருள் மாலை எனும் புத்தகம் முதலில் வெளிவந்தது.
காணதற்கரிய புதிய இலிங்கபந்த அமைப்பில் அருளப்பட்ட இலிங்காட்சரமாலை பாடல்கள் சித்திரகவி மரபுக்குட்பட்டதாகும்.
இலிங்காட்சரமாலை செய்யுட்கள் தல வரலாற்று குறிப்புகளுடன், அத்தலத்து இறைவனை வழிபட்டால் கிடைக்கும் பலன்களை விளிக்கிறது. மேலும் அத்தலத்து இறைவனின் திருநாமம் இலிங்க வடிவமைப்பின் நடுவே தோன்றும் அருளிச்செயலை போற்றுவோமாக.
மேற்கண்ட திருத்தருமபுரம் தல பாடலில் யாழை முரித்தது, திருஞானசம்பந்தரின் யாழ்மூரி பதிகம் கொண்டது, மார்கண்டேயன் மற்றும் எமனுக்கு அருளியது என தல குறிப்புகள் காண கிடைக்கின்றன. இத்தலத்து இறைவனை வழிபட்டால் வினையற்றுபோகும் என்பதையும் செய்யுள் குறிப்பிடுகின்றது.
இச்செய்யுட்கள் அனைத்தும் 72 அட்சரங்களுடன் அமைந்துள்ளது.
முக்கியமாக இத்தலத்து இறைவனின் திருநாமம் "யாழ்மூரிநாதர்" இலிங்க வடிவ அமைப்பின் நடுவே மேலிருந்து கீழாக தோன்றி வெளிப்படும் காட்சியை கண்டு மகிழலாம்.
திருஞானசம்பந்தர் அருளிய திருஎழுகூற்றிருக்கை எனும் சித்திரகவி மிக பிரசித்தமாகும். அருணகிரிநாதரும் திருஎழுகூற்றிருக்கை அமைப்பில் பாடியுள்ளார். பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் மயூரபந்தம்,இரதபந்தம்,சஸ்திர பந்தம், சதுரங்கபந்தம், துவிநாகபந்தம், கமலபந்தம் என பல அமைப்புகளில் சித்ரகவிகளை பாடியருளியுள்ளார். வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகளும் சித்ரகவிகளை பாடியருளியுள்ளார்.
இறைவனை பாடலின் நிறைபொருளாக கொண்டு அருளியல் நிலையில் அருளப்பெற்ற இப்பக்தி பனுவல்களை போற்றி பாடி பரவி இறைவனின் அருளை பெறுவோமாக.
ஆசிரியர் பக்கம்
புத்தகங்கள் மற்றும் லிங்காட்சரமாலை வரிசை அட்டவணை